Published:Updated:

திருமணம் தாண்டிய உறவு... 5 மாதங்களுக்கு முன் காணாமல்போன தொழிலாளி - நண்பனே கொலை செய்தது அம்பலம்

உயிரிழந்த பாண்டியன்

கூலித் தொழிலாளி ஒருவர் ஐந்து மாதங்களுக்கு முன்பு காணாமல்போன வழக்கில், நண்பரே அவரைக் கொன்று புதைத்திருப்பது தெரியவந்துள்ளது.

திருமணம் தாண்டிய உறவு... 5 மாதங்களுக்கு முன் காணாமல்போன தொழிலாளி - நண்பனே கொலை செய்தது அம்பலம்

கூலித் தொழிலாளி ஒருவர் ஐந்து மாதங்களுக்கு முன்பு காணாமல்போன வழக்கில், நண்பரே அவரைக் கொன்று புதைத்திருப்பது தெரியவந்துள்ளது.

Published:Updated:
உயிரிழந்த பாண்டியன்

கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூர்பேட்டை அருகே உள்ளது களமருதூர் கிராமம். இந்த கிராமத்தைச் சேர்ந்த பாண்டியன் (43) என்பவர், திருமணம் செய்துகொள்ளாமல் வாழ்ந்துவந்தார். கடந்த ஐந்து மாதங்களுக்கு முன்பு, வெளியில் சென்றுவருவதாக வீட்டில் கூறிவிட்டு வந்த இவர், மீண்டும் வீடு திரும்பவில்லை. பல இடங்களில் தேடியும் கிடைக்காததால், சந்தேகமடைந்த பாண்டியனின் சகோதரர் குமார், திருநாவலூர் காவல் நிலையத்தில் அண்ணன் காணாமல்போனது குறித்துப் புகார் அளித்துள்ளார்.

திருநாவலூர் காவல் நிலையம்
திருநாவலூர் காவல் நிலையம்

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

இது குறித்து வழக்கு பதிவுசெய்த காவல்துறையினர், பாண்டியனைத் தேடும் பணியில் ஈடுபட்டுள்ளனர். அதற்காக, பாண்டியனின் நண்பர்களிடம் தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளனர். இந்நிலையில், அதே பகுதியைச் சேர்ந்த பாண்டியனின் நண்பர் வேல்முருகன் (40) என்பவர் திடீரென மாயமாகியுள்ளார். இதனால் சந்தேகமடைந்த காவல்துறையினர், வேல்முருகனைத் தேடிவந்துள்ளனர்.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

இந்நிலையில், பெங்களூரில் வேல்முருகன் இருப்பதாகக் கிடைத்த தகவலின்படி, அவரை மடக்கிப்பிடித்த காவல்துறையினர், காவல் நிலையத்துக்கு அழைத்து வந்து விசாரணை மேற்கொண்டனர். அந்த விசாரணையில், வேல்முருகனே பாண்டியனைக் கொலை செய்தது தெரியவந்துள்ளது. கொலை செய்யப்பட்டதற்கான காரணம் குறித்து வேல்முருகனிடம் காவல்துறையினர் விசாரித்தபோது, "எனது மனைவியுடன் பாண்டியனுக்குத் திருமணம் தாண்டிய உறவு இருப்பது எனக்குத் தெரிய வந்ததையடுத்து, பாண்டியனைக் கண்டித்தேன். ஆனால் அவர் கேட்பதாகத் தெரியவில்லை. அதனால் எனது சொந்த நிலத்துக்கு அவரை அழைத்துச் சென்று, மனைவியுடனான உறவைக் கைவிடும்படி வலியுறுத்தினேன். அப்போதும் அவர் கேட்கவில்லை. இதனால் கோபம்கொண்ட நான், அவரைக் குத்தி கொலை செய்தேன்.

தோண்டி எடுக்கப்பட்ட உடல்
தோண்டி எடுக்கப்பட்ட உடல்

பின், பாண்டியனின் உடலை சாக்குமூட்டையில் கட்டி குழிதோண்டிப் புதைத்துவிட்டேன். பின்னர் ஏதும் தெரியாததுபோல பெங்களூரில் வேலை செய்தேன்" எனும் திடுக்கிடும் தகவல்களைக் கூறியுள்ளார்.

இதன் தொடர்ச்சியாக, பாண்டியன் புதைக்கப்பட்ட இடத்தை வேல்முருகன் அடையாளம் காட்டியதை அடுத்து, தடயவியல்துறை நிபுணர், வருவாய்த்துறை அதிகாரிகள் மற்றும் காவல்துறையினர் முன்னிலையில் அங்கு தோண்டிப் பார்த்தபோது எலும்புக்கூடு ஒன்று இருப்பது கண்டறியப்பட்டு மீட்கப்பட்டுள்ளது. அதை உரிய பரிசோதனை செய்து, மாதிரிகள் எடுக்கப்பட்ட பின் மீண்டும் அதே இடத்தில் புதைக்கப்பட்டுள்ளது. மேலும், வேல்முருகன் மீது வழக்கு பதிந்த காவல்துறையினர், அவரைக் கைதுசெய்து சிறையில் அடைத்துள்ளனர். இந்தச் சம்பவம், உளுந்தூர்பேட்டை பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism