Published:Updated:

மும்பை: சொந்த வீட்டில் நகையைத் திருடி காதலனுடன் பிறந்தநாள் கொண்டாட்டம்- காதலன், நகைக்கடைக்காரர் கைது

சித்திரிப்பு படம்

மும்பையில் மைனர்பெண் ஒருவர் தனது வீட்டில் தங்கநகைகளைத் திருடி விற்பனைசெய்து காதலனுடன் சேர்ந்து பிறந்தநாள் கொண்டாடியிருக்கிறார்.

மும்பை: சொந்த வீட்டில் நகையைத் திருடி காதலனுடன் பிறந்தநாள் கொண்டாட்டம்- காதலன், நகைக்கடைக்காரர் கைது

மும்பையில் மைனர்பெண் ஒருவர் தனது வீட்டில் தங்கநகைகளைத் திருடி விற்பனைசெய்து காதலனுடன் சேர்ந்து பிறந்தநாள் கொண்டாடியிருக்கிறார்.

Published:Updated:
சித்திரிப்பு படம்

மும்பை அருகிலுள்ள தானே பகுதியைச் சேர்ந்த மைனர்பெண் ஒருவர், `தன்னுடைய ஆண் நண்பர் ஒருவர் தன்னை ஆபாசப்படம் எடுத்து வைத்துக்கொண்டு மிரட்டியதால் அவருக்கு வீட்டிலிருந்து தங்கநகைகளை எடுத்துக்கொடுத்தேன்’ என்று கூறி போலீஸில் புகார் செய்தார். இதையடுத்து, போலீஸார் அந்தப் பெண் சொன்ன வாலிபரைப் பிடித்துச்சென்று விசாரித்தபோது அப்படி ஏதும் நடக்கவில்லை என்பது தெரியவந்தது.

இது குறித்து உதவி போலீஸ் கமிஷனர் நிலேஷ் சோனாவானே கூறுகையில், ``சம்பந்தப்பட்ட பெண் தங்கநகையைக் கொடுத்ததாகச் சொன்ன நபர் அதை விற்பனை செய்யவில்லை என்று தெரிந்தவுடன் மீண்டும் அந்தப் பெண்ணிடம் விசாரித்தோம். இதில் அந்தப் பெண் தன்னையும், தன்னுடைய காதலனையும் காப்பாற்றுவதற்காக நாடகமாடியது தெரியவந்தது. அவர் தனது வீட்டில் தங்கநகைகளைத் திருடி மற்றொரு காதலனிடம் கொடுத்திருக்கிறார்.

கைது
கைது

அந்தக் காதலன் தங்கநகைகளை ரூ.53 ஆயிரத்துக்கு விற்பனை செய்திருக்கிறார். அந்தப் பெண்ணுக்கும், அவரின் காதலனுக்கும் ஒரே நாளில் பிறந்தநாள் வந்திருக்கிறது. இந்தப் பிறந்தநாளைக் கொண்டாட வீட்டிலிருந்து அந்தப் பெண் தங்கநகைகளைத் திருடி காதலனிடம் கொடுத்திருக்கிறார். தங்கநகைகளை வாங்கிச் சென்ற 18 வயது காதலனும், அதை விலைக்கு வாங்கிய நகைக்கடைக்காரரும் கைதுசெய்யப்பட்டிருக்கின்றனர். விற்பனை செய்யப்பட்ட நகைகளும் பறிமுதல் செய்யப்பட்டிருக்கிறது” என்று தெரிவித்தார்.