Published:Updated:

`வீட்டிலிருந்தே பணம் சம்பாதிக்கலாம்!' -மோசடிக் கும்பலின் வலையில் சிக்கி பணத்தை இழந்த பட்டதாரிப் பெண்

மோசடி

`வீட்டிலிருந்தபடியே பணம் சம்பாதிக்கலாம்’ என்ற மோசடிக் கும்பலின் பேச்சைக் கேட்டு, புதுக்கோட்டையில் பட்டதாரி இளம்பெண் ஒருவர் ரூ.2,80,000 இழந்திருக்கிறார்.

`வீட்டிலிருந்தே பணம் சம்பாதிக்கலாம்!' -மோசடிக் கும்பலின் வலையில் சிக்கி பணத்தை இழந்த பட்டதாரிப் பெண்

`வீட்டிலிருந்தபடியே பணம் சம்பாதிக்கலாம்’ என்ற மோசடிக் கும்பலின் பேச்சைக் கேட்டு, புதுக்கோட்டையில் பட்டதாரி இளம்பெண் ஒருவர் ரூ.2,80,000 இழந்திருக்கிறார்.

Published:Updated:
மோசடி

புதுக்கோட்டையைச் சேர்ந்தவர் 28 வயதாகும் இளம்பெண். பொறியியல் பட்டப்படிப்பு முடித்துவிட்டு வேலை தேடிக்கொண்டிருந்திருக்கிறார். அப்போது, ஆன்லைன் மூலம் வேலைவாய்ப்பு தொடர்பான இணையதளங்களைப் பார்த்துக்கொண்டிருந்திருக்கிறார். இந்த நிலையில், ஆன்லைன் வேலை மூலம் குறைந்த முதலீட்டில் நல்ல வருமானம் ஈட்டலாம் என்று வாட்ஸ்அப் மூலம் லிங்க் வந்திருக்கிறது. இதைப் பார்த்த அந்த இளம்பெண், அதில் வேலைக்குச் சேர்ந்து முதலீட்டுப் பணத்தையும் கட்டியிருக்கிறார். வாட்ஸ்அப் மூலம் அவர்கள் அனுப்பும் பொருள்களைப் பார்த்துவிட்டு அவர்களது வங்கிக் கணக்குக்குத் தொடர்ந்து பல்வேறு தவணைகளில் ரூ.2,80,000 ஆயிரத்தை வரவு வைத்திருக்கிறார். ஆனால், குறிப்பிட்ட காலத்துக்குள் செலுத்திய பணத்துடன் கூடுதலாக பணம் கிடைக்கும் என்று காத்திருந்தவருக்கு ஏமாற்றமே மிஞ்சியிருக்கிறது.

ஆன்லைன் மோசடி
ஆன்லைன் மோசடி
சித்தரிப்புப் படம்

இதையடுத்து, தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த அந்தப் பெண் புதுக்கோட்டை சைபர் க்ரைம் போலீஸாரிடம் புகார் கொடுத்தார். புகாரின் அடிப்படையில் போலீஸார் வழக்கு பதிந்து விசாரணை நடத்திவந்தனர். விசாரணையில், பட்டதாரிப் பெண்ணிடம் மோசடியில் ஈடுபட்டது விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே மடத்துப்பட்டியைச் சேர்ந்த காளிமுத்து (28), மன்னவன் (26) என்பது தெரியவந்தது. இதையடுத்து இரண்டு பேரையும் கைதுசெய்த போலீஸார், அவர்களிடமிருந்த இரண்டு செல்போன்கள், மடிக்கணினி உள்ளிட்டவற்றைப் பறிமுதல் செய்தனர். மேலும், இந்த வழக்கில் தொடர்புடைய, முதல் குற்றவாளியாகக் கருதப்படும் சோமசுந்தரம் என்பவர் துபாயில் வசித்துவருவதாகக் கூறப்படுகிறது. அவரையும் கைதுசெய்யும் முயற்சியில் போலீஸார் இறங்கியிருக்கின்றனர். தொடர்ந்து, இது குறித்து விசாரித்துவருகின்றனர்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

இந்தச் சம்பவம் குறித்து பாதிக்கப்பட்ட பெண்ணிடம் கேட்டபோது, ``வொர்க் ஃப்ரம் ஹோம் வேலைகளை ஆன்லைன்ல தேடிக்கிட்டு இருந்தப்போதான், வாட்ஸ்அப்ல ஆன்லைன் மூலமாகப் பொருள்களை விற்பனை செய்யுற கம்பெனின்னு ஒண்ணு அறிமுகமாச்சு. அதுல வேலை பார்த்துக்கிட்டே, குறிப்பிட்ட முதலீடு செஞ்சு மாதா, மாதம் நல்ல வருமானம் ஈட்டலாம்னு சொன்னதால சேர்ந்தேன். வேலையில சேர்ந்தால் கண்டிப்பாக குறிப்பிட்ட தொகையை முதலீடு செய்யணும். மாத இறுதியில் முதலீட்டு பணத்தோட, கணிசமான வருமானம் கிடைக்கும்னு சொன்னாங்க. ஆபிஸ் செட்டப்ல உள்ள வேலை மாதிரி இருந்துச்சு. எந்த இடத்துலயும் எனக்குச் சந்தேகம் வரவே இல்லை.

மோசடி
மோசடி

பொருள்களுக்கான முதலீட்டுல இருந்து விற்பனை வரைக்கும் வெளிப்படையா மெசேஜெல்லாம் வந்துட்டு இருந்துச்சு. அவங்க கொடுத்த குறிப்பிட்ட டார்கெட் முதலீட்டு பணத்தையும் கட்டிட்டேன். ஆனா, அவங்க சொன்ன மாதிரி எதுவுமே கிடைக்கலை. அதற்கப்புறம்தான், போலீஸ்ல கம்ப்ளெயின்ட்டே கொடுத்தேன். ஆன்லைன்ல வேலைன்னு சொல்லிட்டு வர்ற பெரும்பாலனவை போலின்னு இப்பதான் எனக்கு தெரிய வந்துச்சு. யாரும் என்னை மாதிரி ஏமாந்துடக் கூடாது" என்றார்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism