Published:Updated:

காதல் விவகாரம்: சிறுமியுடன் தற்கொலை செய்துகொண்ட இளைஞர் - சேலத்தில் அதிர்ச்சி

விஷம் குடித்துத் தற்கொலை

காதலுக்குப் பெற்றோர் தடை சொன்னதால், இளம் காதல் ஜோடி விஷமருந்தி தற்கொலை செய்துகொண்ட சம்பவம் சேலத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

காதல் விவகாரம்: சிறுமியுடன் தற்கொலை செய்துகொண்ட இளைஞர் - சேலத்தில் அதிர்ச்சி

காதலுக்குப் பெற்றோர் தடை சொன்னதால், இளம் காதல் ஜோடி விஷமருந்தி தற்கொலை செய்துகொண்ட சம்பவம் சேலத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

Published:Updated:
விஷம் குடித்துத் தற்கொலை

சேலம், மேட்டூர் அருகே நங்கவள்ளி செம்மண்காட்டு வளவு பகுதியைச் சேர்ந்தவர் பழனிசாமி. இவரின் மகன் கோபி, நெசவுத்தொழில் செய்துவருகிறார். இவரின் வீட்டருகே வசிப்பவர் முருகேசன். இவரின் மகள் சந்தியா (பெயர் மாற்றப்பட்டுள்ளது). பன்னிரண்டாம் வகுப்பு படித்துவருகிறார். இவருக்கும், பக்கத்து வீட்டு கோபிக்கும் பழக்கம் ஏற்பட்டு, நாளடைவில் காதலாக மாறியதாகக் கூறப்படுகிறது.

இந்த நிலையில் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு கோபி தன்னுடைய உறவினர்களுடன் சந்தியா வீட்டுக்குப் பெண் கேட்டுச் சென்றிருக்கிறார். சந்தியாவின் பெற்றோர் திருமணம் செய்துவைக்க மறுத்துள்ளனர். இதனால் இருவீட்டார் இடையே மோதல் ஏற்பட்டுள்ளது. இதனால் சந்தியா வீட்டைச் சேர்ந்தவர்கள் அவரைப் பள்ளிக்கூடத்துக்கு அனுப்புவதையும் நிறுத்தியுள்ளனர்.

காதல் விவகாரம்: சிறுமியுடன் தற்கொலை செய்துகொண்ட இளைஞர் - சேலத்தில் அதிர்ச்சி

எப்போதும் பள்ளிக்கு வரும்போது சந்தித்துக்கொள்ளும் கோபி, சந்தியா இருவரும் கடந்த சில மாதங்களாகச் சந்திக்க முடியாத நிலை ஏற்பட்டிருக்கிறது.

இந்த நிலையில் கடந்த இரண்டு நாள்களுக்கு முன்பு தங்களின் வீட்டருகேயுள்ள தென்னந்தோப்பில் கோபி, சந்தியா ஆகியோர் வாயில் நுரை தள்ளியபடி மயங்கிக் கிடந்துள்ளனர். இதைப் பார்த்த அக்கம் பக்கத்தினர் ஓடி வந்து, அவர்களைத் தூக்கி சிகிச்சைக்காக சேலம் தனியார் மருத்துவமனைக்குக் கொண்டு சென்றுள்ளனர். அங்கு தீவிர சிகிச்சையில் இருந்த இருவரும் மறுநாள் அதிகாலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். இந்தச் சம்பவம் இரு வீட்டாரிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இது குறித்து சம்பவம் அறிந்து வந்த நங்கவள்ளி போலீஸார் வழக்கு பதிவுசெய்து விசாரணை நடத்திவருகின்றனர். காதல் விவகாரத்தில் இருவரும் ஒரே நேரத்தில் பலியான சம்பவம் சேலத்தில் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.