Published:Updated:

ஹைதராபாத்: வேறு மதத்தைச் சேர்ந்த பெண்ணைக் காதல் திருமணம் செய்த வாலிபர் குத்திக் கொலை!

கொலை

இஸ்லாமியப் பெண்ணைத் திருமணம் செய்துகொண்ட வாலிபர் குத்திக் கொலை செய்யப்பட்டார்.

ஹைதராபாத்: வேறு மதத்தைச் சேர்ந்த பெண்ணைக் காதல் திருமணம் செய்த வாலிபர் குத்திக் கொலை!

இஸ்லாமியப் பெண்ணைத் திருமணம் செய்துகொண்ட வாலிபர் குத்திக் கொலை செய்யப்பட்டார்.

Published:Updated:
கொலை

ஹைதராபாத்தைச் சேர்ந்த நாகராஜ் என்பவர் அங்குள்ள கார் விற்பனை நிறுவனம் ஒன்றில் வேலை செய்துவந்தார். அவர் கல்லூரியில் படித்தபோதே சிறுபான்மைச் சமுதாயத்தைச் சேர்ந்த பெண் ஒருவரைக் காதலித்துவந்தார். இருவரும் கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு முறைப்படி திருமணம் செய்துகொண்டு வாழ்ந்துவந்தனர். இஸ்லாமைச் சேர்ந்த அந்தப் பெண் தன் பெயரை பல்லவி என மாற்றிக்கொண்டார். மணமகன் வேறு மதத்தைச் சேர்ந்தவர் என்பதால் பெண் வீட்டார் இந்தத் திருமணத்துக்குச் சம்மதிக்கவில்லை. இந்த நிலையில், நேற்று இரவு 9 மணிக்கு சரோர்நகர் தாசில்தார் அலுவலகத்திலிருந்த நாகராஜை, பைக்கில் வந்த இரண்டு பேர் குத்திக் கொலை செய்துவிட்டு சம்பவ இடத்திலிருந்து தப்பி ஓடிவிட்டனர்.

கொலை
கொலை

நாகராஜ் வேற்று மதத்தைச் சேர்ந்தவர் என்பதால், பெண் வீட்டார் அவரைக் கொலை செய்துவிட்டனர் என நாகராஜின் உறவினர்கள் குற்றம்சாட்டி போலீஸாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அதையடுத்து, நாகராஜின் உடலைக் கைப்பற்றிய போலீஸார், வேற்று மதத்தைச் சேர்ந்தவர் என்பதால் பெண் வீட்டார் இந்தக் கொலையைச் செய்தார்களா அல்லது முன்விரோதம் காரணமாக நாகராஜ் கொலை செய்யப்பட்டாரா எனப் பல்வேறு கோணங்களில் வழக்கு பதிவுசெய்து விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.

இந்தச் சம்பவம் அந்தப் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism