Published:Updated:

கணவருடன் வீடியோ கால்; சிரித்துப்பேசியபடி தூக்கில் தொங்கிய மனைவி- அதிர்ச்சி சம்பவத்தின் பின்னணி என்ன?

தூக்கில் தொங்கிய மனைவி ( சித்திரிப்புப் படம் )

கணவருடன் வீடியோ கால் பேசிக்கொண்டிருக்கும்போதே மனைவி தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

கணவருடன் வீடியோ கால்; சிரித்துப்பேசியபடி தூக்கில் தொங்கிய மனைவி- அதிர்ச்சி சம்பவத்தின் பின்னணி என்ன?

கணவருடன் வீடியோ கால் பேசிக்கொண்டிருக்கும்போதே மனைவி தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

Published:Updated:
தூக்கில் தொங்கிய மனைவி ( சித்திரிப்புப் படம் )

கன்னியாகுமரி மாவட்டம், கொட்டாரம் பகுதியைச் சேர்ந்தவர் ஞானபாக்கியபாய்(33). இவர் கொட்டாரம் பஞ்சாயத்து அலுவலகத்தில் தூய்மை இந்தியா திட்டத்தில் தற்காலிகப் பணியாளராகப் பணிபுரிந்து வருகிறார். இவரின் கணவர் செந்தில் சிங்கப்பூரில் பணிபுரிந்து வருகிறார். ஞானபாக்கியபாயும், செந்திலும் எட்டு ஆண்டுகளுக்கு முன்பு காதலித்துத் திருமணம் செய்துகொண்டனர். இவர்களுக்கு இரண்டு குழந்தைகள் இருக்கின்றனர். இந்த நிலையில், நேற்று முன் தினம் இரவு குழந்தைகளைத் தூங்கவைத்துவிட்டு கணவர் செந்திலுடன் ஞானபாக்கியபாய் வாட்ஸ்அப்பில் வீடியோ கால் மூலம் பேசியிருக்கிறார். பேசிக் கொண்டிருக்கும்போதே இவர்கள் இருவருக்கும் பிரச்னை ஏற்பட்டிருக்கிறது. அதையடுத்து, கணவர் வாட்ஸ்அப் வீடியோ காலிலிருக்கும்போதே ஞானபாக்கியபாய் தூக்கு மாட்டியிருக்கிறார். இதனால் பதறிய செந்தில் உறவினர்களுக்கு செல்போன் மூலம் தகவல் கூறியிருக்கிறார். உடனே உறவினர்கள் அவரின் வீட்டுக்குச்சென்று கதவை உடைத்து பார்த்தபோது, ஞானபாக்கியபாய் தூக்கில் சடலமாகத் தொங்கிக்கொண்டிருந்தார்.

தற்கொலை
தற்கொலை

தகவலின்பேரில் அங்கு சென்ற போலீஸார் ஞானபாக்கியபாயின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஆசாரிப்பள்ளத்தில் உள்ள கன்னியாகுமரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். இது குறித்து போலீஸார் வழக்கு பதிவுசெய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்தச் சம்பவம் குறித்துப் பேசும் போலீஸார், ``ஞானபாக்கியபாய் மின்விசிறியின் ஒரு இறக்கையில் சேலையைக் கட்டியிருக்கிறார். கழுத்தில் முடிச்சு போடாமல் சேலை சுற்றிவைக்கப்பட்டிருந்தது.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

மனைவி இறந்ததையடுத்து சிங்கப்பூரிலிருந்து அவர் கணவர் செந்தில் ஊருக்கு வந்திருக்கிறார். அவரிடம் விசாரணை நடத்திவருகிறோம். முதற்கட்ட விசாரணையில் செந்திலிடம் வீடியோ கால் பேசும்போது அடிக்கடி பிரச்னை ஏற்படுவதும், தற்கொலை செய்துகொள்ளப்போவதாகக் கூறுவதுமாக இருந்திருக்கிறார் ஞானபாக்கியபாய். நேற்று முன் தினம் இரவும் அதுபோன்று கூறியவர், கணவர் வீடியோ காலில் இருக்கும்போதே மின் விசிறியில் சேலையைக் கட்டிவிட்டு, குழந்தைகள் அமரும் சேரில் நின்றுகொண்டு, சிரித்தபடியே கழுத்தில் சேலையை சுற்றியிருக்கிறார். அப்போது சேர் ஸ்லிப்பானதால் தூக்கில் தொங்கி இறந்தார்.

துக்கிட்டு தற்கொலை செய்த ஞானபாக்கியபாய்
துக்கிட்டு தற்கொலை செய்த ஞானபாக்கியபாய்

இதை வீடியோ காலில் பார்த்துக்கொண்டிருந்த செந்தில் உடனடியாக உறவினர்களுக்கு போனில் தகவல் சொல்லியிருக்கிறார். உறவினர்கள் விரைந்துசென்று கதவை உடைத்து அவரைக் காப்பாற்ற முயன்றிருக்கின்றனர்... ஆனால் அவர் இறந்துவிட்டார் என முதற்கட்ட விசாரணையில் தெரியவந்திருக்கிறது. இருப்பினும் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறோம்" என்கிறார்கள். கணவனிடம் சண்டைபோட்டுவிட்டு விளையாட்டாக தூக்குப்போட்டதால் இளம்பெண் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியிருக்கிறது.