Published:Updated:

புதுக்கோட்டை: உயிரை மாய்த்துக்கொண்ட கணவர்; துக்கம் தாங்காமல் மனைவி உயிரிழந்த சோகம்!

புதுக்கோட்டை சோகம்

கணவர் இறந்தநிலையில், வினிதா கதறி அழுதபடியே ஆம்புலன்ஸை நோக்கி ஓடி வந்தார். அப்போது, திடீரென மயங்கிக் கீழே விழுந்தார்.

புதுக்கோட்டை: உயிரை மாய்த்துக்கொண்ட கணவர்; துக்கம் தாங்காமல் மனைவி உயிரிழந்த சோகம்!

கணவர் இறந்தநிலையில், வினிதா கதறி அழுதபடியே ஆம்புலன்ஸை நோக்கி ஓடி வந்தார். அப்போது, திடீரென மயங்கிக் கீழே விழுந்தார்.

Published:Updated:
புதுக்கோட்டை சோகம்

புதுக்கோட்டை மாவட்டம், கீரனூர் அருகே தெற்கு துவரவயல் கிராமத்தைச் சேர்ந்தவர் திருநாவுக்கரசு (31). இவரின் மனைவி வினிதா (22). இவர்களுக்கு ஒரு வயதில் பெண் குழந்தையும், நான்கு மாதங்களேயான ஆண் குழந்தையும் இருக்கின்றனர். இந்த நிலையில், திருநாவுக்கரசு கடந்த 9-ம் தேதி கிரிக்கெட் விளையாடிவிட்டு, இரவு வீட்டுக்கு மது போதையில் வந்ததாகக் கூறப்படுகிறது. அப்போது வினிதாவுக்கும், திருநாவுக்கரசுவுக்குமிடையே தகராறு ஏற்பட்டிருக்கிறது. திருநாவுக்கரசை வினிதா கடுமையாகப் பேசியதாகவும் கூறப்படுகிறது.

இதனால் மனமுடைந்த திருநாவுக்கரசு வீட்டின் படுக்கையறைக் கதவைப் பூட்டிவிட்டு தூக்குப்போட்டு தற்கொலைக்கு முயன்றிருக்கிறார். இதையறிந்த குடும்பத்தினர், அவரை மீட்டு சிகிச்சைக்காக புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரியில் அனுமதித்தனர்.

தம்பதி
தம்பதி

அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டுவந்த நிலையில் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து கீரனூர் போலீஸார் வழக்கு பதிவுசெய்தனர். இறந்துபோன, திருநாவுக்கரசுவின் உடலை பிரேத பரிசோதனைக்குப் பிறகு அவரது சொந்த ஊருக்கு அனுப்பிவைத்தனர். கணவர் இறந்துவிட்டநிலையில், வினிதா கதறி அழுதபடியே ஆம்புலன்ஸை நோக்கி ஓடி வந்தார். அப்போது, திடீரென மயங்கி கீழே விழுந்தார். அதிர்ச்சியடைந்த உறவினர்கள் வினிதாவை மீட்டு சிகிச்சைக்காக புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பினர். அங்கு, அவரை பரிசோதித்த மருத்துவர்கள் வினிதா ஏற்கனவே இறந்துவிட்டதாகக் கூறினர். திருநாவுக்கரசு இறந்துவிட்ட நிலையில், அவர் மனைவி வினிதாவும் இறந்துபோன செய்தி கேட்ட அவரின் உறவினர்கள் அதிர்ச்சியின் உச்சத்துக்கே சென்றனர். இருவரின் உடல்களும் அடுத்தடுத்து அடக்கம் செய்யப்பட்டன. கணவன் இறந்துபோன துக்கத்தில், மனைவியும் இறந்துபோன சம்பவம் அந்தப் பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியிருக்கிறது.