Published:Updated:

திண்டிவனம்: குடும்பப் பிரச்னை; தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட பெண் - ஆர்.டி.ஓ விசாரணை

தூக்கிட்டு தற்கொலை

குடும்பப் பிரச்னை காரணமாக, பெண் ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

திண்டிவனம்: குடும்பப் பிரச்னை; தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட பெண் - ஆர்.டி.ஓ விசாரணை

குடும்பப் பிரச்னை காரணமாக, பெண் ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

Published:Updated:
தூக்கிட்டு தற்கொலை

விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் அருகேயுள்ள செங்கேணிகுப்பம் கிராமத்தைச் சேர்ந்தவர் செல்வராஜ். இவருக்கும், செஞ்சியை அடுத்த நெகனூர்பட்டி கிராமத்தைச் சேர்ந்த ராணிக்கும் (பெயர் மாற்றப்பட்டுள்ளது) கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்ற நிலையில், ஒரு ஆண் குழந்தை இருக்கிறது. செல்வராஜுக்கும் ராணிக்கும் இடையே அவ்வப்போது குடும்பப் பிரச்னை ஏற்படுமாம். இந்த நிலையில், நேற்று முன்தினம் இருவருக்கும் இடையே பிரச்னை ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது. இதற்கிடையே மனமுடைந்து காணப்பட்ட ராணி, மாலை செங்கேணிகுப்பத்திலுள்ள தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டிருக்கிறார். 

திண்டிவனம்
திண்டிவனம்

இந்தச் சம்பவம் குறித்த தகவலின் பேரில் சம்பவ இடத்துக்குச் சென்ற வெள்ளிமேடு பேட்டை காவல்துறையினர், ராணியின் உடலை மீட்டு உடற்கூறாய்வுக்காக திண்டிவனம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்துள்ளனர். இந்தச் சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கும் நிலையில், தன் மகளிடம் வரதட்சணை கேட்டு செல்வராஜ் அடிக்கடி பிரச்னை செய்துவந்ததாகவும், அவ்வப்போது சமாதானம் செய்து வைத்ததன் பேரில் தன் மகள் அங்கு வாழ்ந்துவந்ததாகவும், அவளுடைய மரணத்தில் சந்தேகம் இருக்கிறது என்றும் ராணியின் தந்தை வெள்ளமேடு பேட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அதன்படி 174-வது பிரிவின்கீழ் வழக்கு பதிவுசெய்திருக்கும் காவல்துறையினர், திருமணமாகி இரண்டு ஆண்டுகளே ஆகின்றன என்பதால் ஆர்.டி.ஓ விசாரணைக்கு பரிந்துரை செய்துள்ளனர்.