Published:Updated:

``பெண்களின் புகைப்படங்களைக் காட்டி ரூ.7.84 லட்சத்தைப் பறித்துவிட்டனர்..!" - இளைஞர் போலீஸில் புகார்

இளைஞர் புகார் ( Tadamichi )

`இணையதளத்தில் சில பெண்களின் கவர்ச்சிப் படங்களுடன் ரூ.20 ஆயிரம் பணம் கொடுத்தால் நட்சத்திர ஹோட்டலில் பாதுகாப்பாக இருக்கலாம் எனக் கூறப்பட்டிருந்தது.' - இளைஞர் புகார்

``பெண்களின் புகைப்படங்களைக் காட்டி ரூ.7.84 லட்சத்தைப் பறித்துவிட்டனர்..!" - இளைஞர் போலீஸில் புகார்

`இணையதளத்தில் சில பெண்களின் கவர்ச்சிப் படங்களுடன் ரூ.20 ஆயிரம் பணம் கொடுத்தால் நட்சத்திர ஹோட்டலில் பாதுகாப்பாக இருக்கலாம் எனக் கூறப்பட்டிருந்தது.' - இளைஞர் புகார்

Published:Updated:
இளைஞர் புகார் ( Tadamichi )

கோவை உடையாம்பாளையத்தைச் சேர்ந்தவர் பாலு (22) (பெயர் மாற்றப்பட்டிருக்கிறது). இவர் கோவை மாநகர குற்றப் பிரிவில் அளித்த புகாரில், ``இணையதளத்துக்குள் சென்று பெண்கள் எங்கு கிடைப்பார்கள் என்று தேடிப் பார்த்தேன். அப்போது அதில் சில பெண்களின் கவர்ச்சிப் படங்களுடன் ரூ.20 ஆயிரம் பணம் கொடுத்தால், நட்சத்திர ஹோட்டலில் பாதுகாப்பாக இருக்கலாம் எனக் கூறப்பட்டிருந்தது.

இதையடுத்து அதிலுள்ள செல்போன் எண்ணுக்குத் தொடர்புகொண்டு பேசினேன். அதில் பேசிய நபர் அவருடயை பெயர் குமார் என்று கூறினார். அவர் என்னிடம் நட்சத்திர ஹோட்டலில் அழகான பெண்கள் இருப்பதாகக் கூறினார். பின்னர் சில பெண்களின் ஆபாசப் புகைப்படங்களை எனக்கு அனுப்பினார். அதில் எனக்குப் பிடித்த பெண்ணைத் தேர்வுசெய்து அந்தப் பெண்ணுடன் இருக்க வேண்டும் எனத் தெரிவித்தேன்.

இணையதள மோசடி
இணையதள மோசடி
piqsels.com

இதையடுத்து அவர் அந்தப் பெண் உங்களுக்கு வேண்டுமென்றால் முன்பணமாக உடனடியாக ரூ.2,500 அனுப்பும்படி கூறினார். நானும் பணத்தை அனுப்பிவைத்தேன். பின்னர், ஒரு நட்சத்திர ஹோட்டலின் முகவரியைக் கூறினார். அங்குள்ள அறையில்தான் இளம்பெண் இருப்பதாகக் கூறினார்.

நான் அங்கு சென்று, பெண் இருக்கும் அறை எண்ணைக் கொடுக்கும்படி கேட்டேன். அதற்கு அவர் அந்தப் பெண்ணின் பாதுகாப்பு, என்னுடைய பாதுகாப்பு, அறைக்குப் பணம் கொடுக்க வேண்டும். அந்தப் பெண்ணுக்கு பணம் கொடுக்க வேண்டும். போலீஸுக்குப் பணம் கொடுக்க வேண்டும் எனக் கூறி என்னிடமிருந்து தொடர்ச்சியாக பணத்தை அனுப்பச் சொன்னார்.

இவ்வாறாக அவர் என்னிடமிருந்து ரூ.7 லட்சத்து 84 ஆயிரம் பணத்தைப் பெற்று என்னை ஏமாற்றி விட்டார். அதன் பின்னர் அவரது எண்ணுக்குத் தொடர்பு கொண்டபோது அது சுவிட்ச் ஆஃப் செய்யப்பட்டிருந்தது. எனவே ஆசவார்த்தை கூறி, என்னை ஏமாற்றி மோசடி செய்த நபரைக் கைதுசெய்து எனது பணத்தை மீட்டுத் தர வேண்டும்" எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது.

அவரின் புகாரைப் பெற்றுக்கொண்ட கோவை மாநகர போலீஸார் வழக்கு பதிவுசெய்து விசாரணை நடத்திவருகின்றனர்.