Published:Updated:

`அன்பே, சொர்க்கத்தில் சந்திப்போம்' - தோழியைக் கொன்று, அதை வீடியோவாக வெளியிட்ட வாலிபர்

அபிஜித்

இளம்பெண்ணைக் கொலைசெய்து, அதை வீடியோ எடுத்து சமூக வலைதளத்தில் வெளியிட்ட வாலிபரை போலீஸார் தேடிவருகின்றனர்.

`அன்பே, சொர்க்கத்தில் சந்திப்போம்' - தோழியைக் கொன்று, அதை வீடியோவாக வெளியிட்ட வாலிபர்

இளம்பெண்ணைக் கொலைசெய்து, அதை வீடியோ எடுத்து சமூக வலைதளத்தில் வெளியிட்ட வாலிபரை போலீஸார் தேடிவருகின்றனர்.

Published:Updated:
அபிஜித்

மத்தியப் பிரதேச மாநிலம், ஜபல்பூரைச் சேர்ந்தவர் ஷில்பா (25). இவரின் தோழன் அபிஜித் படிதார். அபிஜித், ஷில்பாவை ஜபல்பூரின் புறநகர்ப் பகுதியில் இருக்கும் ரிசார்ட் ஒன்றுக்கு அழைத்துச் சென்றார். அங்கு இருவரும் அறை எடுத்துத் தங்கினர். அறையில் தங்கியிருந்தபோது அபிஜித், ஷில்பாவைக் கத்தியால் குத்திக் கொலைசெய்திருக்கிறார். கொலை செய்த பிறகு அதை வீடியோ எடுத்து சமூக வலைதளத்தில் வெளியிட்டிருக்கிறார். முதலில் ஒரு வீடியோ வெளியிட்டிருக்கிறார்.

`அன்பே, சொர்க்கத்தில் சந்திப்போம்' - தோழியைக் கொன்று, அதை வீடியோவாக வெளியிட்ட வாலிபர்

அதில் அபிஜித், `துரோகம் செய்யாதே’ என்று பேசுகிறார். பின்னர் அருகில் கிடந்த போர்வை ஒன்றை விலக்குகிறார். உள்ளே ஷில்பா கழுத்து அறுபட்டு கொலைசெய்யப்பட்டுக் கிடக்கிறார்.

இரண்டாவது வீடியோவில், தான் பாட்னாவைச் சேர்ந்த வியாபாரி அபிஜித் என்றும், `கொலைசெய்யப்பட்டுக் கிடக்கும் ஷில்பா எனது தொழில் பார்ட்னர் ஜிதேந்திர குமாருடன் தொடர்புவைத்திருந்தார். ஷில்பா, ஜிதேந்திர குமாரிடம் ரூ.12 லட்சம் வாங்கிக்கொண்டு ஜபல்பூருக்கு ஓடிவிட்டார். ஜிதேந்திர குமார் கேட்டுக்கொண்டதால் நான் ஷில்பாவைக் கொலைசெய்தேன்’ என்று குறிப்பிட்டிருக்கிறார்.

மூன்றாவது வீடியோவில், `அன்பே, நாம் மீண்டும் சொர்க்கத்தில் சந்திப்போம்’ என்று குறிப்பிட்டிருக்கிறார். அந்த வீடியோவில் ஜிதேந்திராவின் உதவியாளர் சுமித் பட்டேல் பெயரையும் குறிப்பிட்டிருக்கிறார். போலீஸார் ஷில்பாவின் உடலை ரிசார்ட் அறையிலிருந்து பறிமுதல் செய்துள்ளனர். அதோடு ஜிதேந்திராவும், சுமித் பட்டேலும் கைதுசெய்யப்பட்டுள்ளனர். இருவரிடமும் விசாரணை நடத்தப்பட்டுவருகிறது. அபிஜித் தலைமறைவாகிவிட்டார். அவரைக் கைதுசெய்ய மகாராஷ்டிரா, மத்தியப் பிரதேசம், குஜராத்துக்குத் தனிப்படைகள் அனுப்பப்பட்டிருப்பதாக போலீஸ் அதிகாரி பிரியங்கா தெரிவித்திருக்கிறார்.

இது தொடர்பாக அவர் அளித்த பேட்டியில், ``ரிசார்ட்டில் அபிஜித்தான் அறை எடுத்துத் தங்கியிருக்கிறான். இரவில்கூட தனியாகவே இருந்தான். காலையில் ஷில்பா வந்து அபிஜித்தைப் பார்த்தார். இருவரும் சாப்பாடு ஆர்டர் செய்து சாப்பிட்டனர். ஒரு மணி நேரம் கழித்து அபிஜித் மட்டும் தனியாகச் சென்றுவிட்டார். நீண்ட நேரம் கதவு திறக்கப்படாததால், ஊழியர்கள் கதவைத் திறந்து பார்த்தபோது பெண் கொலைசெய்யப்பட்டுக் கிடந்தார்” என்று தெரிவித்தார்.