Published:Updated:

ஆபாசப் படம் பார்ப்பதைக் கண்டித்த உறவினர்கள்; ஆத்திரத்தில் சித்தியின் 3 வயது மகனைக் கொன்ற இளைஞர்!

ராகுல்

ராகுல் தன் சித்தி மகன் தருனை காலால் மிதித்து கொலை செய்ததாக காவல்துறையினரிடம் வாக்குமூலம் அளித்திருக்கிறார்.

ஆபாசப் படம் பார்ப்பதைக் கண்டித்த உறவினர்கள்; ஆத்திரத்தில் சித்தியின் 3 வயது மகனைக் கொன்ற இளைஞர்!

ராகுல் தன் சித்தி மகன் தருனை காலால் மிதித்து கொலை செய்ததாக காவல்துறையினரிடம் வாக்குமூலம் அளித்திருக்கிறார்.

Published:Updated:
ராகுல்

நாமக்கல் மாவட்டம், ராசிபுரத்தை அடுத்த சீராப்பள்ளி மூப்பனார் கோயில் தெருவைச் சேர்ந்தவர் கபில்வாசன்(32). இவரின் மனைவி ராஜாமணி (24). இந்த தம்பதியினருக்கு 5 வயதில் பெண் குழந்தையும், தருண் (3) என்ற ஆண் குழந்தையும் உள்ளனர். கபில்வாசன் அதே பகுதியில் உள்ள ஆலையில் கூலி வேலை செய்து வருகிறார். அதே பகுதியைச் சேர்ந்த இவர்களது உறவினர் பாலமுருகன் என்பவரின் மகன் ராகுல் (23), அடிக்கடி ஆபாச படத்தை செல்போனில் பார்ப்பதாகச் சொல்லப்படுகிறது. இதனைக் கண்ட அவரின் உறவினர்களும், ராகுலின் சித்தியான ராஜாமணியும் ராகுலை கண்டித்ததாகச் சொல்லப்படுகிறது.

இதனால் கோபத்தில் இருந்த ராகுல், கபில்வாசன் வீட்டுக்குச் சென்று குடிக்க தண்ணீர் கேட்டிருக்கிறார். ராஜாமணி தண்ணீர் எடுப்பதற்காக சமையலறைக்குச் சென்றபோது, திடீரென எதிர்பாராதவிதமாக தூங்கிக் கொண்டிருந்த குழந்தை தருண் கழுத்தில், ராகுல் தன் காலால் மிதித்தும், அடித்தும் கொலை செய்ததாக கூறப்படுகிறது.

ராகுல்
ராகுல்

இதனைக்கண்ட குழந்தையின் தாயான ராஜாமணி கூச்சலிடவே அருகில் இருந்த உறவினர்கள் குழந்தை தருணை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால், அங்கு தருணை பரிசோதித்த மருத்துவர்கள் குழந்தை ஏற்கெனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். பின்னர், பிரேதப் பரிசோதனைக்காக குழந்தையின் உடல் ராசிபுரம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது.

இந்த சம்பவம் தொடர்பாக, நாமகிரிப்பேட்டை காவல் துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, சம்பவ இடத்துக்கு வந்த காவல்துறையினர் ராகுலை கைது செய்து காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்றனர். கொலை சம்பவத்தில் ஈடுபட்ட ராகுலை காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டதில், ராகுல் தொடர்ந்து ஆபாச படங்களை பார்ப்பதாகவும், அதனை உறவினர்கள் கண்டித்ததாகவும் கூறப்படுகிறது. உறவினர்கள் தொடர்ந்து கண்டித்ததால், ஆத்திரமடைந்த ராகுல் தன் சித்தி மகன் தருணை காலால் மிதித்து கொலை செய்ததாக காவல்துறையினரிடம் வாக்குமூலம் அளித்திருக்கிறார். மூன்று வயது குழந்தையை காலால் மிதித்து கொலை செய்த சம்பவம், அப்பகுதி மக்களை சோகத்திலும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுருக்கிறது.