Published:Updated:

தாராபுரம்: 11 வயது சிறுவன்மீது பெட்ரோல் ஊற்றி தீ வைத்த இளைஞர் - அதிர்ச்சி சம்பவம்!

ஹரிகிருஷ்ணனின் சட்டைமீது பெட்ரோலை ஊற்றி, பீடி பற்றவைத்த தீக்குச்சியை மோகன்ராஜ் வீசியிருக்கிறார்.

தாராபுரம்: 11 வயது சிறுவன்மீது பெட்ரோல் ஊற்றி தீ வைத்த இளைஞர் - அதிர்ச்சி சம்பவம்!

ஹரிகிருஷ்ணனின் சட்டைமீது பெட்ரோலை ஊற்றி, பீடி பற்றவைத்த தீக்குச்சியை மோகன்ராஜ் வீசியிருக்கிறார்.

Published:Updated:

​திருப்பூர் மாவட்டம், தாராபுரத்தை அடுத்த வேங்கிபாளையத்தைச் சேர்ந்தவர் வல்பூரால். இவரின் பேரன் ஹரிகிருஷ்ணன் (11). அதே பகுதியிலுள்ள அரசு நடுநிலைப் பள்ளியில் நான்காம் வகுப்பு படித்துவருகிறார். ஹரிகிருஷ்ணனின் ப​​க்கத்து வீட்டுக்கு கோவை மாவட்டம், பொள்ளாச்சியை அடுத்த சுப்பையா, கவுண்டன்புதுரைச் சேர்ந்த மோகன்ராஜ் ( 27) ஆகியோர் வந்திருக்கின்றனர்.

மோகன்ராஜ்
மோகன்ராஜ்

​வெள்ளிக்கிழமை மாலை பள்ளி அருகே விளையாடிக்கொண்டிருந்த ஹரிகிருஷ்ணனை, தன் இருசக்கர வாகனத்தில் வைத்திருந்த பெட்ரோலை முகர்ந்து பார்க்குமாறு மோகன்ராஜ் கூறியிருக்கிறார். அதற்கு ஹரிகிருஷ்ணன் மறுப்பு தெரிவித்திருக்கிறார். இதையடுத்து, ஹரிகிருஷ்ணனின் சட்டைமீது பெட்ரோலை ஊற்றி, பீடி பற்றவைத்த தீக்குச்சியை மோகன்ராஜ் வீசியிருக்கிறார்.

​இதில், ஹரிகிருஷ்ணன் உடல் முழுவதும் தீ பற்றியது. பலத்த காயமடைந்த ஹரிகிருஷ்ணனை அங்குள்ளவர்கள் மீட்டு தாராபுரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். முதலுதவி சிகிச்சைக்குப் பின்னர், உயர் சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனையில் ஹரிகிருஷ்ணன் அனுமதிக்கப்பட்டிருக்கிறார்.

கைது
கைது

இது குறித்து வழக்கு பதிவுசெய்த போலீஸார் புகாரின் பேரில், மோகன்ராஜைக் கைதுசெய்திருக்கின்றனர். மேலும் இந்தச் சம்பவம் தொடர்பாக போலீஸார் விசாரித்துவருகின்றனர். சிறுவன் மீது பெட்ரோல் ஊற்றி தீ வைத்த சம்பவம் தாராபுரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. ​​