Published:Updated:

காணாமல்போன டி.வி.எஸ் XL; சந்தேகத்தில் விரோதம்; இளைஞர் படுகொலை; 4 சிறார் உட்பட 6 பேர் துணிகரம்

கொலைசெய்யப்பட்ட இளைஞர்

வாகனம் காணாமல்போனதில் ஏற்பட்ட முன்விரோதத்தால், இளைஞர் ஒருவர் கழுத்தை நெரித்துக் கொலைசெய்யப்பட்டு கிணற்றில் வீசப்பட்டிருக்கும் சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

காணாமல்போன டி.வி.எஸ் XL; சந்தேகத்தில் விரோதம்; இளைஞர் படுகொலை; 4 சிறார் உட்பட 6 பேர் துணிகரம்

வாகனம் காணாமல்போனதில் ஏற்பட்ட முன்விரோதத்தால், இளைஞர் ஒருவர் கழுத்தை நெரித்துக் கொலைசெய்யப்பட்டு கிணற்றில் வீசப்பட்டிருக்கும் சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

Published:Updated:
கொலைசெய்யப்பட்ட இளைஞர்

விழுப்புரம் மாவட்டம், டி.எடையார் கிராமத்தைச் சேர்ந்தவர் அருண்(19). கல்லூரி மாணவரான இவர், நேற்று முன்தினம் இரவு வெளியில் சென்ற நிலையில் வீடு திரும்பாமல் இருந்திருக்கிறார். எனவே, அவரின் தந்தை முனுசாமி, அருணைத் தேடியிருக்கிறார். அப்போது அதே கிராமத்தில் ஏரிக்கரை அருகேயுள்ள கிணற்றில் அருண் உயிரிழந்த நிலையில் கிடப்பது தெரியவந்திருக்கிறது. தகவலின் பேரில் சம்பவ இடத்துக்கு வந்த திருவெண்ணெய்நல்லூர் காவல்துறையினர், இளைஞரின் உடலை மீட்டு முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனை மருத்துவக் கல்லூரிக்கு அனுப்பிவைத்துள்ளனர். இளைஞர் அருணின் இறப்பு குறித்து காவல்துறை அதிகாரிகள் அதிரடி விசாரணையில் ஈடுபட்டுள்ளனர். இதற்கிடையில் உயிரிழந்த இளைஞரின் உறவினர்கள், கொலை செய்தவர்களைக் கைதுசெய்ய வலியுறுத்தி, சாலைமறியல் போராட்டத்தில் ஈடுபட்டது அந்தப் பகுதியில் மேலும் பரபரப்பை ஏற்படுத்தியது.

உறவினர்கள் சாலை மறியல்
உறவினர்கள் சாலை மறியல்

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

இந்நிலையில், போலீஸார் மேற்கொண்ட விசாரணையில், "அருணின் இருசக்கர வாகனமான டி.வி.எஸ் XL சுமார் 15 நாள்களுக்கு முன்பாகக் காணாமல்போயிருக்கிறது. இது குறித்து காவல் நிலையத்தில் புகார் ஏதும் அளிக்காத அருண், தானாகவே வண்டியைத் தேடும் முயற்சியில் ஈடுபட்டிருக்கிறார். அதேவேளையில், முத்து (சிறார் என்பதால் பெயர் மாற்றப்பட்டுள்ளது) என்பவர் திருடியிருக்கலாம் எனக் கருதிய அருண், அவரிடம் நேரிடையாகவே கேட்டதாகக் கூறப்படுகிறது. இதனால் இருவருக்கும் விரோதம் ஏற்பட்டுள்ளது. இதை முத்து, தன்னுடைய நண்பர்களான சத்தியராஜ், ராஜேஷ் மற்றும் மூன்று சிறார்கள் என ஐந்து பேரிடமும்... "உங்களைத் திருடன் என அருண் கூறுகிறான்" எனக் கூறினாராம்.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

இதை மனதில் பகையாகவைத்துக்கொண்ட ஆறு பேரும், நேற்று முன்தினம் (19.07.2022) இரவு மது உள்ளிட்ட போதைப்பொருள்களை பயன்படுத்தக்கொண்டிருந்தனர். அப்போது, அந்த வழியாக அருண் சென்றிருக்கிறார். அவரை வழிமறித்தவர்கள்... "எங்களைத் திருட்டுப் பசங்கனு சந்தேகப்படுறியா?" என்று கேட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டு, அருணை ஒன்றாகச் சேர்ந்து தாக்கியுள்ளனர். மேலும், தாங்கள் வைத்திருந்த பெல்ட்டைக்கொண்டு அருணின் கழுத்தை நெரித்துக் கொலைசெய்து, உடலில் கல்லைக் கட்டி ஏரிக்கரை அருகேயுள்ள கிணற்றில் போட்டுவிட்டுத் தப்பித்துச் சென்றுள்ளனர்" என்ற அதிர்ச்சிப் பின்னணித் தகவல் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்திருக்கிறது.

திருவெண்ணெய்நல்லூர்  காவல் நிலையம்.
திருவெண்ணெய்நல்லூர் காவல் நிலையம்.

இந்நிலையில், அருணின் தந்தை நேற்று காலை அளித்த புகாரின் அடிப்படையில், கொலை வழக்கு பதிந்திருக்கும் திருவெண்ணெய்நல்லூர் காவல்துறையினர், ஆறு பேரையும் கைதுசெய்து புலன் விசாரணை மேற்கொண்டுவருகின்றனர். தன்னுடைய கிராமத்தைச் சேர்ந்த இளைஞர் கொலை செய்யப்பட்டிருக்கும் நிலையில், அமைச்சர் பொன்முடி நேற்று மருத்துவமனைக்கே நேராகச் சென்று அருணின் உடலைப் பார்த்துவிட்டு, அதிகாரிகளிடம் உரிய விசாரணை நடத்த உத்தரவிட்டிருக்கிறார்.