Published:Updated:

`மாணவிகளிடம் அத்துமீறும் கோவை ஆசிரியர்... நடவடிக்கை எடுக்கப்படுமா?' #TamilnaduCrimeDiary

#TamilnaduCrimeDiary
#TamilnaduCrimeDiary

கோவை கிணத்துக்கடவில் பள்ளி மாணவிகளிடம் அத்துமீறும் ஆசிரியர் மீது கோவை எஸ்.பியிடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது. #TamilnaduCrimeDiary

பொள்ளாச்சி பாலியல் வழக்கு, துடியலூர் சிறுமி பாலியல் கொலை வழக்கு என்று கோவையில் கடந்த ஆண்டு பெண்களுக்கு எதிரான குற்றச்சம்பவங்களால் அதிர்ந்து போனது கோவை. இந்நிலையில், இந்த ஆண்டும் பெண் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் கோவையில் அதிகரித்துக் கொண்டே இருக்கின்றன.

ஆனந்த்
ஆனந்த்

சிங்காநல்லூரைச் சேர்ந்த ஒரு தம்பதி மர குடோன் ஒன்றில் பணியாற்றி வருகின்றனர். அவர்களுக்கு ஐந்து வயதில் ஒரு மகள் இருக்கிறார். இந்நிலையில், சில நாள்களுக்கு முன்பு பணிக்குச் செல்லும்போது தங்களது மகளையும் அழைத்துச் சென்றுள்ளனர். தம்பதியர் வேலைபார்த்துக்கொண்டிருக்க, சிறுமி அருகில் விளையாடிக்கொண்டிருந்துள்ளார். அப்போது, அதே குடோனில் பணியாற்றி வரும் ஆனந்த், சிறுமிக்கு மிட்டாய் வாங்கித் தருவதாகக் கூறி அழைத்துச் சென்று பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளார். இதையடுத்து, சிறுமியின் அழுகைச் சத்தம் கேட்டு அவரை மீட்ட பெற்றோர், இதுகுறித்து போலீஸில் புகாரளித்தனர். அதன் பேரில் ஆனந்த் போக்ஸோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளார்.

அதிரவைக்கும் பெட்ரோல் பங்க் மோசடி... ஊட்டி சுற்றுலாப் பயணிகளே உஷார்! #TamilnaduCrimeDiary

இதேபோல, கோவை வேலாண்டிபாளையத்தில் ஒன்பதாம் வகுப்பு படிக்கும் மாணவன், தனது வீட்டின் அருகே விளையாடிக் கொண்டிருந்த ஒன்பது வயது மனவளர்ச்சி குன்றிய மாற்றுத்திறனாளி சிறுமியை அழைத்துச் சென்று பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். இதுகுறித்து, சிறுமியின் தந்தை அளித்த புகாரின் அடிப்படையில் போலீஸார் அந்த மாணவனைக் கைது செய்துள்ளனர்.

எஸ்.பி-யிடம் புகாரளித்த மாதர் சங்கம் , மாணவர் சங்கத்தைச் சேர்ந்தவர்கள்.
எஸ்.பி-யிடம் புகாரளித்த மாதர் சங்கம் , மாணவர் சங்கத்தைச் சேர்ந்தவர்கள்.

கோவை மாவட்டம் கிணத்துக்கடவில் உள்ள அரசுப் பள்ளியில் பணியாற்றி வரும் ஆசிரியர் ஒருவர், பல மாணவிகளிடம் பாலியல் சீண்டல் செய்துள்ளார். இதுதொடர்பாக, மாணவிகள் பெற்றோரிடம் புகார் சொல்லியுள்ளனர். இதையடுத்து, பெற்றோர் போலீஸில் புகாரளிக்கத் தயாரான நேரத்தில், சம்பந்தப்பட்ட ஆசிரியர், பெற்றோர்களை அழைத்து மன்னிப்பு கேட்டதுடன், புகாரளிக்க வேண்டாம் என்று கெஞ்சியுள்ளாராம். தற்போதுவரை அவர் மீது காவல்நிலையத்தில் புகார் அளிக்கப்படவில்லை.

`லோனை நான் கட்டிக்கிறேன்; ஆயிரம் ரூபாய் வாங்கிக்கங்க!’ - தேனி பழங்குடியினப் பெண்களை அதிரவைத்த மோசடி

இந்நிலையில், அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம் மற்றும் இந்திய மாணவர் சங்கத்தினர், சம்பந்தப்பட்ட ஆசிரியர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென கோவை போலீஸ் எஸ்.பி-யிடம் மனு அளித்துள்ளனர். இதுகுறித்து கோவை போலீஸ் எஸ்.பி சுஜித்குமார் கூறுகையில், ``அந்த ஆசிரியர் எங்களது கட்டுப்பாட்டில்தான் இருக்கிறார். அவர் மீது யாரும் புகார் கொடுக்கவில்லை. புகார் அளிக்கும்பட்சத்தில் உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும்” என்றார்.

அடுத்த கட்டுரைக்கு