Published:Updated:

அமிதாப்பச்சனுக்குப் பாதுகாப்பு வழங்கிய போலீஸுக்குக் கட்டாய ஓய்வு... நட்பைப் பயன்படுத்தி மோசடியா?!

ஷிண்டேயுடன் அமிதாப்பச்சன்

நடிகர் அமிதாப்பச்சனின் பாதுகாப்புக்கு நியமிக்கப்பட்ட போலீஸுக்குக் கட்டாய ஓய்வு கொடுக்கப்பட்டிருக்கிறது.

அமிதாப்பச்சனுக்குப் பாதுகாப்பு வழங்கிய போலீஸுக்குக் கட்டாய ஓய்வு... நட்பைப் பயன்படுத்தி மோசடியா?!

நடிகர் அமிதாப்பச்சனின் பாதுகாப்புக்கு நியமிக்கப்பட்ட போலீஸுக்குக் கட்டாய ஓய்வு கொடுக்கப்பட்டிருக்கிறது.

Published:Updated:
ஷிண்டேயுடன் அமிதாப்பச்சன்

நடிகர் அமிதாப்பச்சனுக்கு மாநில அரசு எக்ஸ் பிரிவு பாதுகாப்பு வழங்கிவருகிறது. இதற்காக எந்நேரமும் இரண்டு போலீஸார் பாதுகாப்புக்கு நியமிக்கப்பட்டிருக்கின்றனர். 2015-ம் ஆண்டு ஜிதேந்திர ஷிண்டே என்ற கான்ஸ்டபிள் பணியில் நியமிக்கப்பட்டிருந்தார். அவர் தொடர்ந்து, 2021-ம் ஆண்டு வரை அமிதாப்பச்சன் பாதுகாப்புப் பணியில் இருந்தார். அமிதாப்பச்சன் குடும்பத்தில் ஒருவராகவே ஜிதேந்திர ஷிண்டே மாறினார்.

ஆனால் பணியில் இருந்தபோது அமிதாப்பச்சனின் நட்பைப் பயன்படுத்தி சொந்தமாக செக்யூரிட்டி ஏஜென்சி தொடங்கி நடத்திவந்தார் ஷிண்டே என்ற குற்றச்சாட்டு எழுந்தது. இந்த செக்யூரிட்டி ஏஜென்சி மூலம் சினிமாதுறையில் முக்கியப் பிரமுகர்களுக்கு பாதுகாப்பு கொடுத்துவந்தார். தன்னுடைய மனைவியின் பெயரில் தொடங்கி நடத்திவந்த இந்த செக்யூரிட்டி ஏஜென்சி மூலம் ஷிண்டே கோடிக்கணக்கில் சம்பாதித்து வருவதாகச் செய்தி வெளியானது.

அமிதாப்பச்சன்
அமிதாப்பச்சன்

வழக்கமாக ஒரு போலீஸ்காரர் ஐந்து ஆண்டுகளுக்கு மேல் ஓர் இடத்தில் பணிபுரியக் கூடாது. ஆனால் ஷிண்டே ஆறு ஆண்டுகளாக ஒரே இடத்தில் பணியாற்றிவந்ததோடு, சொந்தமாக செக்யூரிட்டி ஏஜென்சியும் நடத்திவந்தார். இது குறித்து போலீஸ் துறைக்கு தெரியவந்ததால் உடனே ஷிண்டே 2021-ம் ஆண்டு இடமாற்றம் செய்யப்பட்டார். அவர்மீது இலாகா பூர்வ விசாரணைக்கும் உத்தரவிடப்பட்டது. போலீஸாரின் விசாரணையில் விதிகளை மீறி ஷிண்டே அடிக்கடி வெளிநாடுகளுக்குச் சென்று வந்திருப்பதாகவும், அதோடு ஆண்டுக்கு ரூ.1.5 கோடி அளவுக்குச் சம்பாதித்துவந்ததாகவும் கூறப்படுகிறது.

மேலும் அடிக்கடி சொத்துகளை வாங்கி விற்பனை செய்திருந்ததாகவும் தகவல் வெளியாகியிருக்கிறது. இது குறித்து ஷிண்டேவுக்கு இந்த மாத தொடக்கத்தில் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்பட்டது. ஷிண்டே கொடுத்த விளக்கம் திருப்தியளிக்கும் வகையில் இல்லை. இதையடுத்து காவல்துறை ஷிண்டேவுக்குக் கட்டாய ஓய்வு கொடுத்திருக்கிறது. ஷிண்டே 27 ஆண்டுகள் போலீஸ் துறையில் இருந்துவிட்டு ஓய்வுபெற்றிருக்கிறார்.