Published:Updated:

`நடிகர் ஆர்யா தொடர்பாக தவறான தகவல் பரப்பியவர்கள் மீது அவதூறு வழக்கு!' - வழக்கறிஞர் பேட்டி

நடிகர் ஆர்யா
நடிகர் ஆர்யா

நடிகர் ஆர்யாவின் வழக்கறிஞர் ஜெரோம் ஜோசப் செய்தியாளர்களைச் சந்தித்தார்.

ஜெர்மனி நாட்டில் வசிக்கும் பெண் மருத்துவர் ஒருவர், ``நடிகர் ஆர்யா திருமணம் செய்துகொள்வதாகக் கூறி என்னிடம் நெருங்கிப் பழகினார். அதை நம்பி சுமார் 70 லட்சம் ரூபாய் பணம் கொடுத்தேன். ஆனால், கூறியபடி என்னைத் திருமணம் செய்துகொள்ளாமல் ஏமாற்றி மோசடி செய்துவிட்டார்” என்று கடந்த சில நாள்களுக்கு முன்பு சென்னை சைபர் க்ரைம் போலீஸில் புகார் அளித்திருந்தார். இது குறித்து போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரித்துவந்தனர்.

சைபர் க்ரைம்
சைபர் க்ரைம்
representational image
சென்னை: நடிகர் ஆர்யா மீதான புகார் என்ன? - விவரிக்கும் பெண் டாக்டரின் வழக்கறிஞர்

மேலும், நடிகர் ஆர்யாவை நேரில் வரவழைத்து விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் நடிகர் ஆர்யாவுக்கும், இந்த வழக்குக்கும் எந்தத் தொடர்பும் இல்லை என்பது உறுதியானது. இது குறித்து ஆர்யா விளக்கமும் அளித்திருந்தார். இதற்கிடையே, ஆர்யாவைப்போலப் பேசி, மோசடியில் ஈடுபட்ட இரண்டு பேரை சைபர் க்ரைம் போலீஸார் கைதுசெய்துள்ளனர்.

இன்று கோவை சாய்பாபா காலனி பகுதியில் நடிகர் ஆர்யாவின் வழக்கறிஞர் ஜெரோம் ஜோசப் செய்தியாளர்களைச் சந்தித்தார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

அப்போது அவர் கூறுகையில், ``ஆர்யா பெயரில் போலியான ஃபேஸ்புக் கணக்கு தொடங்கி மோசடி செய்த நபர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர். இந்தப் புகாருக்கும் ஆர்யாவுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை. கைதான இருவரும் பல்வேறு மோசடிகளில் ஈடுபட்டுள்ளனர். பணப் பரிவர்த்தனை நடந்த வங்கிக் கணக்கு மூலம் குற்றவாளிகள் கைதாகியிருக்கிறார்கள்.

ஆர்யா வழக்கறிஞர்
ஆர்யா வழக்கறிஞர்

ஆனால், உண்மைநிலை தெரியும் முன்பாகவே நடிகர் ஆர்யா மீது மோசமான விமர்சனங்கள் சமூக வலைதளங்களில் வைக்கப்பட்டன. அப்படி விமர்சனம் செய்தவர்கள் மீது அவதூறு வழக்கு பதிவு செய்யவிருக்கிறோம்” என்றார்.

சென்னை: நடிகர் ஆர்யா மீதான புகார் என்ன? - விவரிக்கும் பெண் டாக்டரின் வழக்கறிஞர்
அடுத்த கட்டுரைக்கு