Published:Updated:

``பஞ்சாப் பாடகர் சித்து நிலைதான் ஏற்படும்” - சல்மான் கானின் தந்தை சலீம் கானுக்கு கொலை மிரட்டல்

சல்மான் கான் தன் தந்தையுடன்

நடிகர் சல்மான் கான், அவரின் தந்தை சலீம் கான் ஆகியோருக்குக் கொலை மிரட்டல் வந்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

``பஞ்சாப் பாடகர் சித்து நிலைதான் ஏற்படும்” - சல்மான் கானின் தந்தை சலீம் கானுக்கு கொலை மிரட்டல்

நடிகர் சல்மான் கான், அவரின் தந்தை சலீம் கான் ஆகியோருக்குக் கொலை மிரட்டல் வந்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Published:Updated:
சல்மான் கான் தன் தந்தையுடன்

நடிகர் சல்மான் கான் தன் குடும்பத்தோடு மும்பை பாந்த்ராவில் வசித்துவருகிறார். சல்மான் கான் படங்களில் நடித்துவருவதோடு தொண்டு நிறுவனத்தின் மூலம் ஏழைக் குழந்தைகளுக்கு மருத்துவச் சிகிச்சைக்கு தேவையான உதவிகளையும் செய்துவருகிறார். சல்மான் கானின் தந்தை சலீம் கான் தினமும் நடைப்பயிற்சிக்காக பாந்த்ரா கடற்கரைக்குச் செல்வது வழக்கம். அவ்வாறு சென்றுவிட்டு அங்குள்ள ஓர் இருக்கையில் வழக்கமாக அமருவது வழக்கம்.சலீம் கானுடன் அவரின் பாதுகாப்புக்கு இரண்டு பாதுகாவலர்கள் செல்வது வழக்கம். அவ்வாறு செல்லும்போது சலீம் கான், வழக்கமாக அமரும் இருக்கையில் கடிதம் ஒன்று இருப்பதைப் பாதுகாவலர் ஒருவர் பார்த்தார்.

சல்மான் கான்
சல்மான் கான்
ANI

அந்தக் கடிதத்தில் சல்மான் கான், சலீம் கானுக்கு மிரட்டல் விடுக்கப்பட்டிருந்தது. ``பாடகர் சித்து மூஸ்வாலா நிலைதான் உங்களுக்கும் ஏற்படும்” என்று குறிப்பிடப்பட்டிருந்தது. இது குறித்து உடனே பாந்த்ரா போலீஸில் புகார் செய்யப்பட்டது. போலீஸார் வழக்கு பதிவுசெய்து விசாரணை நடத்திவருகின்றனர். சலீம் கானிடம் புகார் பெறப்பட்டுள்ளது.

பஞ்சாப் பாடகர் சித்து படுகொலைக்குக் காரணமாக இருந்த லாரன்ஸ் பிஸ்னோய், ஏற்கெனவே 2018-ம் ஆண்டு நடிகர் சல்மான் கானுக்கு மிரட்டல் விடுத்திருந்தார். எனவே, பஞ்சாப்பில் சித்து கொலை செய்யப்பட்டவுடன் சல்மான் கானின் இல்லத்துக்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது. தற்போது உண்மையிலேயே சல்மான் கானுக்கு மிரட்டல் வந்திருக்கிறது. பிஸ்னோய் தற்போது திகார் சிறையில் இருக்கிறார். டெல்லி போலீஸார் காவலில் எடுத்து விசாரித்தபோது, தன்னுடைய ஆட்கள்தான் பாடகர் சித்துவைக் கொலை செய்தனர் என்று குறிப்பிட்டிருந்தார். பிஸ்னோய், ஜெய்ப்பூரில்வைத்து சல்மான்கானைக் கொலை செய்வேன் என்று முன்னர் தெரிவித்திருந்தார். பிஸ்னோய் சமுதாய மக்கள் தெய்வமாகக் கருதும் ஒரு வகை மான்களை சல்மான் கான் ராஜஸ்தானில் வேட்டையாடியதால் லாரன்ஸ் பிஸ்னோய் இந்த மிரட்டலை விடுத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism