Published:Updated:

சென்னை: சரத்குமாருக்கு அதிர்ச்சி கொடுத்த இன்ஜினீயர்! - ஷாக்கிங் ஆடியோ

சரத்குமார்
சரத்குமார்

நடிகரும் ச.ம.க-வின் தலைவருமான சரத்குமாரின் செல்போன் நம்பரிலிருந்து, அவர் பேசுவதைப் போல பலரிடம் பேசிய மர்மநபர் குறித்து போலீஸார் விசாரித்து வருகின்றனர்.

சமத்துவ மக்கள் கட்சியின் தலைவர் சரத்குமார், சென்னை போலீஸ் கமிஷனருக்கு ஆன்லைன் மூலம் புகார் ஒன்றை அளித்துள்ளார். அதில் கூறியிருப்பதாவது, `என்னுடைய செல்போன் நம்பரிலிருந்து, என்னுடைய குரலில் நான் பேசுவதுபோல போன் கால்கள் சென்றதாக எனக்குத் தகவல் வந்தது. ஆனால், நான் யாருக்கும் போன் செய்யவில்லை. இதுதொடர்பாக விசாரித்து நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்று குறிப்பிட்டுள்ளார்.

ராமநாதபுரத்தில் ஆவேசம் அடைந்த சரத்குமார்
ராமநாதபுரத்தில் ஆவேசம் அடைந்த சரத்குமார்
உ.பாண்டி

இதுகுறித்து ச.ம.க நிர்வாகி ஒருவரிடம் கேட்டபோது, ``கடந்த சில தினங்களாக சரத்குமாரின் செல்போன் நம்பரிலிருந்து அவர்களுக்கு வேண்டப்பட்டவர்கள் மற்றும் கட்சி நிர்வாகிகளுக்கு போன் அழைப்புகள் சென்றன. சரத்குமார் குரலிலேயே பேசியதால், எந்தவித சந்தேகமும் ஏற்படவில்லை. அதுகுறித்து நிர்வாகிகள் சிலர் சரத்குமாரிடம் கேட்டபோது அவர், `நான் உங்களிடம் பேசவில்லை’ என்று கூறினார். அதனால், எங்களுக்கு சந்தேகம் ஏற்பட்டது. இந்தச் சமயத்தில்தான் விஐபி ஒருவர் அதிகாலையில் சரத்குமாரை தொடர்பு கொண்டுள்ளார். அப்போது சரத்குமார் தூங்கிக் கொண்டிருந்தால் போனை எடுக்கவில்லை.

மறுநாள் அந்த விஐபி-க்கு போன் செய்து, `அதிகாலையில் நீங்கள் கூப்பிட்டுள்ளீர்கள். என்ன விஷேசம்?’ என்று சரத்குமார் கேட்டுள்ளார். அதற்கு அந்த விஐபி, `நீங்கள்தான் எனக்கு முதலில் போன் செய்துள்ளீர்கள்’ என்று கூறியுள்ளார். அதனால் குழப்பமடைந்த சரத்குமார், இதுதொடர்பாக விசாரித்தபோது அவரின் செல்போன் நம்பரிலிருந்தே, அவரின் குரலில் போன் அழைப்புகள் வருவது தெரியவந்தது. அதனால், அதிர்ச்சியடைந்த சரத்குமார், சென்னை போலீஸ் கமிஷனர் மகேஷ்குமார் அகர்வாலிடம் விவரத்தைக் கூறி ஆன்லைனில் புகாரும் அளித்தார். அதன்பேரில் சைபர் க்ரைம் போலீஸார் விசாரணை நடத்திவருகின்றனர்.

ஆடியோ
ஆடியோ
மாதிரிப் படம்
"சிரஞ்சீவி உதவியை நினைவுகூரும்போது கண்கலங்கிட்டேன்..." - சரத்குமார் ஷேரிங்ஸ்

இதற்கிடையில் சரத்குமார், தன்னுடைய செல்போன் நம்பர், குரலில் பேசும் நபரிடம் பேசிய ஆடியோ ஒன்று வெளியானது. அதில், `நீங்கள் யாரு?’ என்று சரத்குமார் கேட்கிறார். அதற்கு, `நான் சாதாரண ஆள்’ என்று மறுமுனையில் பதில் வருகிறது. `என்னுடைய நம்பரை டூப்ளிக்கேட் செய்து ஏன் பேசுகிறீர்கள்?’ என்று சரத்குமார் கேட்டவுடன், `நான் உங்கள் நம்பருக்கு போன் செய்தேன். நீங்கள் எடுக்கவில்லை’ என்று பதிலளிக்கிறார். உடனே சரத்குமார், `நீங்கள் எங்கிருந்து பேசுகிறீர்கள்? என்ன வேலை பார்க்கிறீர்கள்?’ என்று கேட்கிறார். அதற்கு அந்த நபர், தன்னுடைய பெயர் அசோக் என்றும் இன்ஜினீயராக வேலைபார்த்தாகவும், கோவையில் இருப்பதாகவும் கூறுகிறார்.

`என்னுடைய செல்போன் நம்பரிலிருந்து எதற்கு மற்றவர்களுக்கு போன் கால் செய்கிறீர்கள்?’ என்று சரத்குமார் கேட்டதற்கு, `நான் தப்பு எதுவும் செய்யவில்லை. அதற்கென ஒரு ஆப்ஸ் இருக்கிறது. அதை டவுன்லோடு செய்தால் பேசலாம்’ என்று கூறுகிறார்.

இந்த ஆடியோ அடிப்படையில் சரத்குமார் செல்போன் நம்பரிலிருந்து மற்றவர்களுக்கு பேசும் மர்மநபரை போலீஸார் தேடிவருகின்றனர். இதையடுத்து சரத்குமார் புதிய நம்பரை பயன்படுத்திவருகிறார்.

அடுத்த கட்டுரைக்கு