Published:Updated:

``இதில் கொஞ்சம் உண்மை இருந்தாலும்...” - வெளியான அதிர்ச்சித் தகவல் குறித்து சுஷாந்த் சிங் சகோதரி

சுஷாந்த் சிங்

பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் உடல் முழுக்க காயங்கள் இருந்ததாக அவரின் உடலை பிரேத பரிசோதனை செய்த ஊழியர் தெரிவித்துள்ளார்.

``இதில் கொஞ்சம் உண்மை இருந்தாலும்...” - வெளியான அதிர்ச்சித் தகவல் குறித்து சுஷாந்த் சிங் சகோதரி

பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் உடல் முழுக்க காயங்கள் இருந்ததாக அவரின் உடலை பிரேத பரிசோதனை செய்த ஊழியர் தெரிவித்துள்ளார்.

Published:Updated:
சுஷாந்த் சிங்

பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் கடந்த 2020-ம் ஆண்டு ஜூன் மாதம் திடீரென தூக்குப்போட்டுத் தற்கொலை செய்து கொண்டார். அவரின் தற்கொலை தொடர்பாக சிபிஐ, அமலாக்கப்பிரிவு, போதைப்பொருள் தடுப்பு பிரிவு, மும்பை போலீஸார் விசாரணை நடத்தினர். ஆனாலும் எந்த வித துப்பும் துலங்கவில்லை. தொடர்ந்து மர்மமாகவே இருக்கிறது. இதே போன்று சுஷாந்த் சிங் தற்கொலைக்கு முன்பு அவரின் மேலாளர் திஷா சாலியனும் அடுக்கு மாடி குடியிருப்பு கட்டடத்திலிருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டார்.

``இதில் கொஞ்சம் உண்மை இருந்தாலும்...” - வெளியான அதிர்ச்சித் தகவல் குறித்து சுஷாந்த் சிங் சகோதரி

இத்தற்கொலையும் மர்மமாகவே இருக்கிறது. தற்கொலை செய்து கொண்ட சுஷாந்த் சிங் உடல் கூப்பர் மருத்துவமனையில் பிரேத பரிசோதனை செய்யப்பட்டது. இந்த நிலையில் தற்போது, பிரேத பரிசோதனையில் ஈடுபட்ட ரூப்குமார் ஷா என்பவர் தெரிவித்துள்ள தகவல் அனைவருக்கும் அதிர்ச்சியளிக்கும் விதமாக அமைந்துள்ளது. இது தொடர்பாக ரூப்குமார் ஷா தனியார் டிவி ஒன்றுக்கு அளித்துள்ள பேட்டியில், ``சுஷாந்த் சிங் தற்கொலை செய்த தினத்தன்று சுஷாந்த் சிங் உடலோடு சேர்த்து 5 பேரின் உடல்கள் பிரேத பரிசோதனைக்கு வந்திருந்தது.

ஆரம்பத்தில் எங்களுக்கு சுஷாந்த் சிங் உடல் என்று தெரியாது. விஐபி ஒருவரின் உடல் என்றுதான் தெரியும். பிரேத பரிசோதனைக்கு சென்ற போதுதான் சுஷாந்த் சிங் உடல் என்று தெரிய வந்தது. சுஷாந்த் சிங் உடல் முழுக்க காயங்கள் இருந்தது. அதோடு அவரின் கழுத்திலும் 3 காயங்கள் இருந்தது. பிரேத பரிசோதனையை வீடியோ எடுக்கவேண்டும். ஆனால் உயர் அதிகாரிகள் புகைப்படம் மட்டும் எடுக்கும்படி கேட்டுக்கொண்டனர்.

சுஷாந்த் சிங் உடலில் காயங்கள் இருப்பதை பார்த்தவுடன் கொலைதான் செய்யப்பட்டு இருக்கவேண்டும் என்று உயர் அதிகாரிகளிடம் தெரிவித்தேன். ஆனால் அவர்கள் சட்டப்படி என்ன செய்யவேண்டுமோ அதை செய்யும்படி கேட்டுக்கொண்டனர்” என்று தெரிவித்தார். ரூப்குமார் ஷாவின் இந்த கருத்து சுஷாந்த் சிங் மரண வழக்கில் புதிய திருப்பத்தை ஏற்படுத்தியுள்லது.

சுஷாந்த் சிங்
சுஷாந்த் சிங்

ரூப்குமார் ஷாவின் கருத்து குறித்து சுஷாந்த் சிங் சகோதரி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், “இந்த ஆதாரத்தில் கொஞ்சம் உண்மை இருந்தாலும், அதை சிபிஐ கவனமாக ஆராய வேண்டும் என்று நாங்கள் கேட்டுக்கொள்கிறோம். நீங்கள் நியாயமான விசாரணை செய்து உண்மையை எங்களுக்கு தெரிவிப்பீர்கள் என்று நாங்கள் எப்போதும் நம்புகிறோம்.” என குறிப்பிட்டுள்ளார்.