Published:Updated:

``மொராக்கோவில் வீடு வாங்க என்னிடம் அதிக பணம் வாங்கினார் நோரா ஃபதேஹி” - சுகேஷ் பகீர் தகவல்

நோரா ஃபதேஹி

`நடிகை நோரா ஃபதேஹி எனது பணத்தில்தான் மொராக்கோவில் வீடு வாங்கியிருக்கிறார்’ என, மிரட்டி பணம் பறித்த வழக்கில் கைதுசெய்யப்பட்டிருக்கிற சுகேஷ் சந்திரசேகர் தெரிவித்திருக்கிறார்.

``மொராக்கோவில் வீடு வாங்க என்னிடம் அதிக பணம் வாங்கினார் நோரா ஃபதேஹி” - சுகேஷ் பகீர் தகவல்

`நடிகை நோரா ஃபதேஹி எனது பணத்தில்தான் மொராக்கோவில் வீடு வாங்கியிருக்கிறார்’ என, மிரட்டி பணம் பறித்த வழக்கில் கைதுசெய்யப்பட்டிருக்கிற சுகேஷ் சந்திரசேகர் தெரிவித்திருக்கிறார்.

Published:Updated:
நோரா ஃபதேஹி

உள்துறை அமைச்சகம், நீதித்துறையில் உயர் அதிகாரி என்று கூறி பணக்காரர்கள், அரசியல்வாதிகளை ஏமாற்றி பணம் பறித்ததாக கைதுசெய்யப்பட்டிருக்கிற சுகேஷ் சந்திரசேகர் தற்போது டெல்லி சிறையில் அடைக்கப்பட்டிருக்கிறார். சிறையில் இருந்துகொண்டே பாலிவுட் நட்சத்திரங்கள், மாடல் அழகிகளை சிறைக்கே வரவழைத்துப் பேசியதோடு அவர்களுக்கு ஏராளமான பரிசுப்பொருள்களையும் கொடுத்து மகிழ்ச்சிப்படுத்தினார். இதற்காக சுகேஷ் சிறை அதிகாரிகளுக்குக் கோடிக்கணக்கில் பணத்தைச் செலவுசெய்தார். இதனால் சுகேஷ் இப்போது திகார் சிறையிலிருந்து வேறு சிறைக்கு மாற்றப்பட்டிருக்கிறார்.

சுகேஷ் சந்திரசேகர்
சுகேஷ் சந்திரசேகர்

சுகேஷிடம் அதிக அளவில் பரிசுப்பொருள்கள் பெற்றவர்கள் நடிகை ஜாக்குலின் பெர்னாண்டஸ், நோரா ஃபதேஹி எனக் கூறப்பட்டது. இதில் ஜாக்குலின் தன்னுடன் நெருக்கமான நட்பு வைத்திருந்ததாக சுகேஷ் தெரிவித்திருக்கிறார். நோராவுக்கு பிஎம்டபிள்யூ கார் வாங்கிக்கொடுத்திருந்தார்.

இந்த நிலையில், சமீபத்தில் டெல்லி போலீஸார் துணை குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தனர். அதில், `தன்னை காதலனாக ஏற்றுக்கொண்டால் எனக்கு வீடு வாங்க பணம் தருவதாகவும், சொகுசாக வாழ்க்கை வாழலாம் என்று சுகேஷ் என்னிடம் ஆசை வார்த்தை கூறினார்’ என நோரா ஃபதேஹி வாக்குமூலம் கொடுத்திருந்தார்.

ஏற்கெனவே இந்த வாக்குமூலத்துக்கு மறுப்பு தெரிவித்து சுகேஷ் தனது வழக்கறிஞர் மூலம் ஓர் அறிக்கை வெளியிட்டிருந்தார். இப்போது மேலும் ஒரு தகவலை சுகேஷ் வெளியிட்டிருக்கிறார். அதில், ``நோரா வீடு வாங்க நான் பணம் தருவதாகச் சொன்னதாக கூறப்படுவதில் எந்தவித உண்மையும் இல்லை. நான் ஜாக்குலின் மீது உண்மையான அன்பு வைத்திருந்தேன். இன்றைக்கு வீடு வாங்க அவருக்கு (நோரா) நான் பணம் கொடுப்பதாகக் கூறினேன் என்று கூறுகிறார். உண்மையில், மொராக்கோவிலுள்ள காசாபிளாங்காவில் தன்னுடைய குடும்பத்துக்கு வீடு வாங்க என்னிடம் ஏற்கெனவே அதிக அளவு பணம் வாங்கிவிட்டார்.

சட்டத்திலிருந்து தப்பிக்க இப்போது புதிய கதைகளை வெளியிடுகிறார். தான் காரை விரும்பியதில்லை என்றும், காரை தனக்காக வாங்கிக்கொள்ளவில்லை என்று நோரா சொல்வது முற்றிலும் பொய். நான் அவருடன் சாட்டிங் செய்த விவரம், ஸ்கிரீன் ஷாட் விவரங்கள் அமலாக்கப் பிரிவிடம் இருக்கிறது. அதனால் பொய் சொல்ல முடியாது. உண்மையில், நோராவுக்கு லேண்ட் ரோவர் காரை வாங்கிக் கொடுக்க விரும்பினேன். அந்த நேரத்தில் அந்த கார் இருப்பு இல்லை. நோரா அவசரப்பட்டதால் பிஎம்டபிள்யூ கார் வாங்கிக் கொடுத்தேன்.

நோரா ஃபதேஹி
நோரா ஃபதேஹி

அந்த காரைத்தான் அதிக நாள் பயன்படுத்திக்கொண்டிருந்தார். அவர் இந்தியர் கிடையாது என்பதால் காரை தன் தோழியின் கணவர் பாபி பெயரில் பதிவுசெய்து கொடுக்கும்படி கேட்டுக்கொண்டார். நோராவுக்கும் எனக்கும் தொழில்ரீதியாக எந்தவித தொடர்பும் கிடையாது. ஒரு முறை எனது தொண்டு நிறுவனம் ஏற்பாடு செய்திருந்த நிகழ்ச்சியில் மட்டும் கலந்துகொண்டார். அதற்குத் தனியாக சம்பளம் கொடுக்கப்பட்டுவிட்டது” என்று குறிப்பிட்டிருக்கிறார்.

சுகேஷ் மீது டெல்லி தொழிலதிபர் மனைவியிடம் ரூ.200 கோடியை மிரட்டி பறித்த வழக்குதான் பிரதான குற்றமாகக் கருதப்படுகிறது. அந்த 200 கோடியில்தான் பாலிவுட் நடிகைகளுக்குப் பணத்தை தண்ணீராகச் செலவுசெய்தார்.

அதிக அளவில் பயனடைந்த நடிகை ஜாக்குலின் பெர்னாண்டஸ் இந்த வழக்கில் குற்றவாளியாகச் சேர்க்கப்பட்டிருக்கிறார். அதேசமயம் நோரா ஃபதேஹி சாட்சியமாகச் சேர்க்கப்பட்டிருக்கிறார். இருவருக்கும் சுகேஷ் கொடுத்த பரிசுப்பொருட்களை அமலாக்கப் பிரிவு பறிமுதல் செய்துவிட்டது. அதோடு இருவரிடமும் பல முறை அமலாக்கப் பிரிவும், டெல்லி போலீஸாரும் விசாரணை நடத்தியிருக்கின்றனர். இந்த வழக்கில் ஜாக்குலினுக்கு டெல்லி கோர்ட் ஜாமீன் வழங்கியிருப்பது குறிப்பிடத்தக்கது.