Election bannerElection banner
Published:Updated:

சென்னை: போலீஸ் எஸ்.ஐ மீது புகாரளித்த நடிகை ராதா மனம் மாறியது ஏன்?

`சுந்தரா டிராவல்ஸ்’ பட நாயகி நடிகை ராதா
`சுந்தரா டிராவல்ஸ்’ பட நாயகி நடிகை ராதா

சென்னையில் பணியாற்றும் சப்-இன்ஸ்பெக்டர் ஒருவர் மீது நடிகை ராதா புகார் கொடுத்த நிலையில் திடீரென அதை வாபஸ் வாங்கியிருக்கிறார்.

`சுந்தரா டிராவல்ஸ்’ படத்தில் கதாநாயகியாக நடித்தவர் நடிகை ராதா (39). இவர் சென்னை சாலிகிராமத்தில் குடும்பத்துடன் வசித்துவருகிறார். இவர், விருகம்பாக்கம் காவல் நிலையத்தில் சப்-இன்ஸ்பெக்டர் வசந்தராஜா என்பவர் மீது புகார் ஒன்றைக் கொடுத்தார். அதில், `கடந்த ஒன்றரை ஆண்டுகளாக நானும் எஸ்.ஐ வசந்தராஜாவும் கணவன் மனைவியாக வாழ்ந்துவருகிறோம். சமீபகாலமாக வசந்தராஜா, என்னை அடித்துத் துன்புறுத்திவருகிறார். எனவே, வசந்தராஜா மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்று குறிப்பிட்டிருந்தார்.

நடிகை ராதா
நடிகை ராதா

அது தொடர்பாக விருகம்பாக்கம் போலீஸார் எஸ்.ஐ வசந்தகுமாரிடமும் நடிகை ராதாவிடமும் விசாரணை நடத்தினர். இந்தச் சூழலில் எஸ்.ஐ வசந்தராஜா, தன்னிடம் மன்னிப்பு கேட்டதால் புகாரை வாபஸ் பெறுவதாக நடிகை ராதா காவல் நிலையத்தில் எழுதிக் கொடுத்துவிட்டதாகத் தகவல் வெளியாகியது.

நடிகை ராதாவுக்கும், எஸ்.ஐ வசந்தராஜாவுக்கும் பழக்கம் ஏற்பட்டது எப்படி என்று போலீஸார் கூறுகையில், ``நடிகை ராதாவுக்கு ஏற்கெனவே திருமணமாகிவிட்டது. 16 ஆண்டுகளாகக் கணவரைப் பிரிந்து சென்னையில் வாழ்ந்துவருகிறார். எஸ்.ஐ வசந்தராஜா, திருவான்மியூர் காவல் நிலையத்தில் பணியாற்றியபோது நடிகை ராதாவுடன் அவருக்குப் பழக்கம் ஏற்பட்டிருக்கிறது.

அதன் பிறகு ராதாவுக்குத் தாலிக்கட்டிய வசந்தராஜா அவருடன் வாழ்ந்துவந்திருக்கிறார். தற்போது வசந்தராஜா எண்ணூர் காவல் நிலையத்தில் பணியாற்றிவருகிறார். இவருக்குத் திருமணமாகிவிட்டது. ஆர்.ஏ புரத்திலுள்ள காவலர் குடியிருப்பில் எஸ்.ஐ வசந்தராஜாவின் குடும்பத்தினர் வசித்துவருகின்றனர். திருவான்மியூரில் எஸ்.ஐ வசந்தராஜா பணியாற்றியபோது நடிகை ராதாவுக்காக வடபழனி காவல் நிலையத்துக்கு இடமாறுதலாகி வந்திருக்கிறார். நடிகை ராதாவின் ஆதார் அட்டை உள்ளிட்ட அரசு ஆவணங்களில் எஸ்.ஐ வசந்தராஜாவின் பெயர் கணவர் என்று குறிப்பிடப்பட்டிருக்கிறது. அந்த ஆவணங்களை நடிகை ராதா காவல் நிலையத்தில் ஆதாரமாகக் கொடுத்திருக்கிறார்.

 சென்னை: வாட்ஸ்அப்பில் வந்த ஆபாச வீடியோ - மை இந்தியா கட்சி வேட்பாளர் வீரலட்சுமி போலீஸில் புகார்
நடிகை ராதாஇ எஸ்.ஐ வசந்தராஜா
நடிகை ராதாஇ எஸ்.ஐ வசந்தராஜா

இதையடுத்துதான் நடிகை ராதா அளித்த புகாரின் அடிப்படையில் எஸ்.ஐ வசந்தராஜாவிடம் விசாரணை நடத்தினோம். விசாரணை நடந்துவந்த சூழலில் நடிகை ராதா, இது குடும்பப் பிரச்னை என்று கூறி புகாரை வாபஸ் பெற்றுவிட்டார். அவரின் மனமாற்றத்துக்கு என்ன காரணம் எனத் தெரியவில்லை. ஏற்கெனவே நடிகை ராதா, திருவல்லிக்கேணியைச் சேர்ந்த தொழிலதிபர் மீது காவல் நிலையத்தில் புகாரளித்திருந்தார். அடுத்து போலீஸ் எஸ்.ஐ மீது புகாரளித்திருக்கிறார்" என்றனர்.

முதல் மனைவி இருக்கும்போது எஸ்.ஐ வசந்தராஜா, நடிகை ராதாவை இரண்டாவதாகத் திருமணம் செய்த தகவல் வெளியாகியிருப்பதால், அவர்மீது துறைரீதியான நடவடிக்கை எடுக்க வாய்ப்புள்ளதாக போலீஸ் உயரதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

நடிகை ராதா, போலீஸ் எஸ்.ஐ மீது புகாரளித்த சம்பவம் காவல்துறையில் பரபரப்பாக பேசப்பட்டுவருகிறது.

Election bannerElection banner
அடுத்த கட்டுரைக்கு