Published:Updated:

`என் கணவர் சாவில் சந்தேகம் இருக்கிறது; கடத்திக் கொலை செய்திருக்கலாம்!' - நடிகை ராகவி

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
ராகவி, குழந்தையுடன் சசிக்குமார்
ராகவி, குழந்தையுடன் சசிக்குமார்

பிரபல சின்னத்திரை நடிகை ராகவியின் கணவர் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். அவர் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்று ராகவி தரப்பில் பரபரப்பு புகார் தரப்பட்டுள்ளது.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

வேலூர் மாவட்டம், ஜோலார்பேட்டை ஏரிக்கரைப் பகுதியில் உள்ள மரத்தில் தூக்குப்போட்ட நிலையில் ஆண் ஒருவரின் சடலம் கிடந்தது. தகவலறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று சடலத்தைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காகத் திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். உயிரிழந்தவரின் சட்டை பாக்கெட்டில் இருந்த அடையாள அட்டையை வைத்து விசாரணை நடத்தியதில், சென்னையைச் சேர்ந்த ஒளிப்பதிவாளர் சசிக்குமார் (46) என்றும் பிரபல சின்னத்திரை நடிகை ராகவியின் கணவர் என்பதும் தெரியவந்தது. 

நடிகை ராகவி
நடிகை ராகவி

இது குறித்து போலீஸார் கூறுகையில், ``சின்னத்திரை நடிகை ராகவியின் கணவர் சசிக்குமார் சினிமாவில் கேமராமேனாகப் பணியாற்றிவந்தார். இருவரும் காதலித்து பெற்றோர் சம்மதத்துடன் திருமணம் செய்துகொண்டனர். ஒரு பெண் குழந்தை இருக்கிறது. இந்த நிலையில், சில நாள்களாக சசிக்குமார் கடன் பிரச்னையில் தவித்திருக்கிறார்.

ஸ்டூடியோவில் வாடகைக்கு எடுத்திருந்த கேமராவை சசிக்குமார் மீண்டும் ஒப்படைக்காமல் அடகு வைத்ததாகக் கூறப்படுகிறது. ஸ்டூடியோ நிர்வாகிகள் கேட்டதற்கு, கேமரா தொலைந்துவிட்டதாக சசிக்குமார் கூறியிருக்கிறார். இந்த விவகாரம் விஸ்வரூபம் எடுக்க ‘சசிக்குமார் கேமரா திருடன்’ என்று வாட்ஸ்-அப், ஃபேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் ஸ்டூடியோவில் பணிபுரியும் ஒரு நபர் தகவலை பரப்பியிருக்கிறார். காவல் நிலையம் வரை சென்ற இந்த விவகாரத்தால் அவமானமடைந்து மன உளைச்சலில் இருந்த சசிக்குமாருக்கு மிரட்டல்களும் வந்திருக்கின்றன. 

நடிகை ராகவி
நடிகை ராகவி

விரக்தியில் இருந்த அவர் செல்போனை ஆஃப் செய்துவிட்டு வீட்டிலிருந்து வெளியே சென்றார். மனைவி ராகவி உட்பட யாரையுமே போனில் தொடர்புகொள்ளவில்லை. எங்கு சென்றார், என்ன ஆனார் என்பது தெரியாமல் இருந்தது. இந்த நிலையில்தான் மர்மமான முறையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். சசிக்குமாரின் சட்டை பாக்கெட்டில் பெங்களூருவிலிருந்து ஆம்பூர் ரயில் நிலையம் வரை பயணிப்பதற்கான ரயில் டிக்கெட் இருந்தது. அப்படியே அவர் ரயிலில் பயணித்திருந்தாலும் ஆம்பூருக்கு முன்புள்ள ஜோலார்பேட்டை ரயில் நிலைய சந்திப்பில் எதற்காக இறங்கியிருக்க வேண்டும். 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

உடன் யாராவது வந்தார்களா என்றும் சந்தேகம் இருக்கிறது. தற்கொலை முடிவில் இருப்பவர் இவ்வளவு தூரம் பயணித்து உயிரை மாய்த்துக்கொள்ள வேண்டிய அவசியம் ஏன் வந்தது? மரணத்தில் மர்மம் இருக்கிறது என்று நடிகை ராகவி புகார் கொடுத்துள்ளார். நாங்களும் தீர விசாரித்துவருகிறோம்'' என்று கூறினர். இதனிடையே, பிரேத பரிசோதனைக்குப் பிறகு, சசிக்குமாரின் உடலை ராகவி பெற்றுக்கொண்டார். சென்னையில் இறுதி அஞ்சலி நடைபெற்றது. இந்த விவகாரம் குறித்து கேட்பதற்காக நடிகை ராகவின் செல்போன் எண்ணைத் தொடர்புகொண்டோம். போனை ராகவின் உறவினர் பெண் ஒருவர் பேசினார்.

ராகவி, குழந்தையுடன் சசிக்குமார்
ராகவி, குழந்தையுடன் சசிக்குமார்

நம்மிடம் அவர், ‘‘ராகவி துயரத்தில் இருக்கிறார். இதிலிருந்து அவர் ஓரளவாவது மீண்டுவர நான்கைந்து நாள்கள் ஆகும். திருடன் பட்டத்தைக் கட்டி பொய்யான தகவலை வாட்ஸ்-அப்பில் பரப்பியதால் சசிக்குமார் அவமானமடைந்தார். அவரைப் பொறுத்தவரை சின்ன பிரச்னை என்றாலும் மொபைலை ஆஃப் செய்துவிடுவார். நல்ல தகவல் காதுக்கு எட்டிய பிறகுதான் போனை ஆன் செய்வார். அந்த கேமரா ஒரு லட்சம் மதிப்பு பெறாது. அதைத் திருடியதாகத் தன் மீது குற்றம்சாட்டியதால் வெளியில் தலைகாட்ட முடியாதே என்று ராகவியிடம் கூறி அவர் வருத்தப்பட்டுள்ளார். சசிக்குமாரின் சாவில் எங்களுக்குச் சந்தேகம் இருக்கிறது. தொழில் பிரச்னையில் அவரைக் கடத்தி கொலை செய்திருக்கலாம் என்றும் தோன்றுகிறது’’ என்று ஆதங்கப்பட்டனர்.

வெள்ளித்திரையில் ‘ராஜா சின்ன ரோஜா’ படத்தின் மூலம் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர் ராகவி. ‘மருதுபாண்டி’, ‘ஒன்ஸ்மோர்’ உள்ளிட்ட சில படங்களிலும் நடித்திருக்கிறார். ‘திருமதி செல்வம்’, ‘மகாலட்சுமி’ போன்ற சீரியல்களில் நடித்துள்ளார்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு