Published:Updated:

சக நடிகையின் ஆபாச வீடியோவை வெளியிட்டதாகப் புகார்; நடிகை ராக்கி சாவந்த் திடீர் கைது!

ராக்கி சாவந்த் ( Instagram Photo:// @rakhisawant2511 )

நடிகை ஷெர்லின் சோப்ரா கொடுத்த புகாரின் பேரில் நடிகை ராக்கி சாவந்த் கைதுசெய்யப்பட்டிருக்கிறார்.

சக நடிகையின் ஆபாச வீடியோவை வெளியிட்டதாகப் புகார்; நடிகை ராக்கி சாவந்த் திடீர் கைது!

நடிகை ஷெர்லின் சோப்ரா கொடுத்த புகாரின் பேரில் நடிகை ராக்கி சாவந்த் கைதுசெய்யப்பட்டிருக்கிறார்.

Published:Updated:
ராக்கி சாவந்த் ( Instagram Photo:// @rakhisawant2511 )

நடிகை ராக்கி சாவந்துக்கும், நடிகை ஷெர்லின் சோப்ராவுக்குமிடையே கடந்த ஆண்டு, நவம்பர் மாதத்திலிருந்து மோதல் இருந்துவருகிறது. ஒருவர்மீது ஒருவர் போலீஸில் புகார் செய்திருக்கின்றனர். இருவரும் ஒருவர்மீது மற்றொருவர் மோசமான வார்த்தைகளைப் பயன்படுத்தியதாகக் குற்றம்சாட்டப்பட்டிருக்கிறது. தனது ஆபாச வீடியோக்கள், புகைப்படங்களை ராக்கி சாவந்த் சோசியல் மீடியாவில் பகிர்ந்ததாக நடிகை ஷெர்லின் சோப்ரா மும்பை அம்போலி காவல் நிலையத்தில் புகார் செய்திருக்கிறார். அதனடிப்படையில் போலீஸார் தகவல் தொழில்நுட்ப சட்டத்தின்கீழ் வழக்கு பதிவுசெய்து விசாரித்துவந்தனர்.

ஷெர்லின் சோப்ரா, ராக்கி சாவந்த்
ஷெர்லின் சோப்ரா, ராக்கி சாவந்த்

இந்த வழக்கில் ராக்கி சாவந்த் முன்ஜாமீன் கேட்டு செசன்ஸ் கோர்ட்டில் மனுத் தாக்கல் செய்திருந்தார். இந்த மனுவை விசாரித்த கோர்ட் நிராகரித்துவிட்டது. இதையடுத்து, ராக்கி சாவந்த் இன்று அம்போலி காவல் நிலையத்தில் விசாரணைக்கு ஆஜரானார். அப்போது அவரை போலீஸார் கைதுசெய்தனர். பின்னர், அவர் அந்தேரி கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டார். அவர் தனக்கு ஜாமீன் வழங்க வேண்டும் என்று கோர்ட்டில் மனுத் தாக்கல் செய்திருக்கிறார்.

கைது
கைது

ராக்கி சாவந்த் இன்று தனது மியூசிக் அகாடமியை திறந்துவைக்க திட்டமிட்டிருந்தார். ஆனால் அதற்குள் கைதுசெய்யப்பட்டுவிட்டார். கடந்த சில நாள்களுக்கு முன்புதான் ராக்கி சாவந்த், அடில் கான் என்பவரைக் காதலித்து திருமணம் செய்துகொண்டார். அவர் கடந்த சில மாதங்களுக்கு முன்பே திருமணம் செய்துகொண்டபோதிலும், இப்போதுதான் அறிவித்தார்.