Published:Updated:

கேரள நடிகை சஹானா மரணம் தற்கொலையா? போதைப் பொருள் விற்பனையால் விசாரணை வலையில் கணவர்! நடந்தது என்ன?

நடிகை சஹானா

கேரள மாநிலத்தில் சமூக வலைதளங்களில் பிரபலமான இளம்பெண், இளம் நடிகை என அடுத்தடுத்து மர்ம மரணங்கள் நடந்து வருவது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

கேரள நடிகை சஹானா மரணம் தற்கொலையா? போதைப் பொருள் விற்பனையால் விசாரணை வலையில் கணவர்! நடந்தது என்ன?

கேரள மாநிலத்தில் சமூக வலைதளங்களில் பிரபலமான இளம்பெண், இளம் நடிகை என அடுத்தடுத்து மர்ம மரணங்கள் நடந்து வருவது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

Published:Updated:
நடிகை சஹானா
கேரள மாநிலம் கோழிக்கோட்டைச் சேர்ந்த யூடியூபர் ரிஃபா (21) என்பவர் துபாயில் கணவர் மெஹ்னாஸ் உடன் வசித்துவந்த நிலையில் கடந்த மார்ச் 1-ம் தேதி திடீரென இறந்தார். பின்னர் அவரது உடல் ஊருக்கு கொண்டுவந்து அடக்கம் செய்யப்பட்டது. இந்த நிலையில் அவரது மரணத்தில் மர்மம் இருப்பதாக அவரின் பெற்றோர்கள் புகார் அளித்ததை அடுத்து, ரிஃபா உடல் கடந்த 7-ம் தேதி தோண்டி எடுக்கப்பட்டு பிரேத பரிசோதனை செய்யப்பட்டது. அவரது கணவர் மெஹ்னாஸிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இந்த அதிர்ச்சி அடங்குவதற்குள் மாடலும், இளம் நடிகையுமான சஹானா கோழிக்கோட்டில் மர்மமான முறையில் இறந்த சம்பவம் நடந்துள்ளது.

காசர்கோட்டைச் சேர்ந்த சஹானா, ஃபேஷன் டிசைனிங் படித்துள்ளார். பின்னர் மாடலிங் துறைக்குச் சென்றவர் நகைக்கடை விளம்பரங்களில் நடித்து வந்துள்ளார். இந்த நிலையில்தான் அவருக்கு சினிமாவில் நடிக்க வாய்ப்பு வந்துள்ளது. சினிமாவில் அடியெடுத்துவைத்த நிலையில் மரணமடைந்துள்ளார் சஹானா.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

கணவர் சஜ்ஜாத்துடன் நடிகை சஹானா
கணவர் சஜ்ஜாத்துடன் நடிகை சஹானா

சஹானாவுக்கும் கோழிகோட்டைச் சேர்ந்த சஜ்ஜாத்துக்கும் 16 மாதங்களுக்கு முன் திருமணம் நடைபெற்றுள்ளது. இதையடுத்து கோழிக்கோட்டில் கணவருடன் வாடகை பிளாட்டில் வசித்துவந்தார். திருமணத்துக்குப் பிறகு ஒரு முறை மட்டுமே காசர்கோட்டில் உள்ள தாய் வீட்டுக்குச் சென்றுள்ளார். தாய் உமைபா, இரண்டு சகோதரர்கள், 84 வயதான பாட்டி நபீஸா ஆகியோர் காசர்கோடு சட்டஞ்சால பகுதியில் முதலில் வசித்து வந்துள்ளனர். கடந்த நான்கு மாதங்களுக்கு முன் வலியபொயிலில் இடம் வாங்கி வீடு கட்டி, அங்கே வசித்துவந்துள்ளனர்.

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

நேற்று முன்தினம் சஹானாவுக்கு பிறந்தநாள். பிறந்தநாள் விருந்தில் கலந்துகொள்ள தாய், சகோதரர்கள் உள்ளிட்ட குடும்பத்தினரை அழைத்திருந்தார் சஹானா. இந்த நிலையில்தான் பிறந்தநாளுக்கு முந்தைய நாள் இரவு, ஜன்னல் கம்பியில் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டதாக அவரது கணவர் சஜ்ஜாத் தெரிவித்திருந்தார். ஆனால் சஹானா தற்கொலை செய்ய வாய்ப்பு இல்லை என்கிறார்கள் பெற்றோர். பிரேத பரிசோதனையில் முதற்கட்ட அறிக்கையில் தற்கொலை எனக் கூறப்பட்டுள்ளது. சஹானாவின் கழுத்து உள்ளிட்ட சில இடங்களில் காயம் இருப்பதால், முழு அறிக்கையும் வந்த பிறகுதான் தற்கொலையா, கொலையா அல்லது தற்கொலைக்குத் தூண்டப்பட்டாரா என உறுதியாகச் சொல்ல முடியும் என்று போலீஸ் தரப்பில் கூறப்பட்டுள்ளது.

மரணமடைந்த நடிகை சஹானா
மரணமடைந்த நடிகை சஹானா

இந்த நிலையில் நடிகை சஹானா வசித்த பிளாட்டுக்கு அவரது கணவர் சஜ்ஜாத்தையும் அழைத்துக்கொண்டு சென்று போலீஸார் விசாரணை நடத்தினர். விசாரணையில் சஜ்ஜாத் போதைப்பொருள் பயன்படுத்தி வந்துள்ளது தெரியவந்துள்ளது. கஞ்சா, எம்.டி.எம் போன்ற போதைப்பொருள்களைப் பயன்படுத்தியதுடன், ஃபுட் டெலிவரி செய்வதாகக்கூறி பார்சலில் போதைப்பொருள் கடத்தியதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. சஹானா சினிமா நடிக்கச் சென்ற சமயத்தில் நிறைய வருவாய் வந்துள்ளது. அந்தப் பணத்தை எந்த வங்கி கணக்கில் வைப்பது என்பது சம்பந்தமாக இருவருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டதையும் சஜ்ஜாத் ஒப்புக்கொண்டுள்ளதாக போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இளம் நடிகை மரணத்தில் உள்ள மர்மம் விரைவில் விடுபடும் என ரசிகர்கள் நம்புகின்றனர்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism