Published:Updated:

உத்தரப்பிரதேசம்: நடிகை ஷில்பா ஷெட்டி, அவரின் தாயார் மீது மோசடி வழக்கு! - மும்பையில் லக்னோ போலீஸ்

நடிகை ஷில்பா ஷெட்டி, அவரது தாயார் சுனந்தா ஷெட்டி ஆகியோர் மீது உத்தரப்பிரதேசத்தில் மோசடி வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

பாலிவுட் நடிகை ஷில்பா ஷெட்டிக்கு போதாத காலம் என்றுதான் சொல்லவேண்டும். அவரது கணவர் ராஜ் குந்த்ரா ஆபாச வீடியோ எடுத்து பதிவேற்றிய விவகாரத்தில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். ராஜ் குந்த்ராவின் ஜாமீன் மனுவும் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் புதிதாக ஷில்பா ஷெட்டிக்கும் ஒரு சிக்கல் வந்துள்ளது. ஷில்பா ஷெட்டி மீதும் அவரது தாயார் சுனந்தா மீதும் லக்னோவில் மோசடி வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. லக்னோவில் இது தொடர்பாக இரண்டு வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. ஷில்பா ஷெட்டி ஒரு காலத்தில் `லோசிஸ் வெல்னஸ் சென்டர்’ (Iosis Wellness Centre) என்ற பெயரில் நாடு முழுவதும் பிட்னஸ் சென்டர்களை திறந்தார். இதற்காக ஒவ்வொரு பகுதியிலும் இந்த சென்டர்களை திறக்க பலரிடம் கோடிக்கணக்கில் ஷில்பா ஷெட்டி பணம் வாங்கியதாக சொல்லப்படுகிறது.

தாயாருடன் ஷில்பாஷெட்டி
தாயாருடன் ஷில்பாஷெட்டி

அதன் பிறகு அந்த தொழில் காணாமல் போய்விட்டது. லக்னோவை சேர்ந்த ஜோத்ஜனா சவுகான், ரோஹித் வீர் சிங் ஆகியோர் நடிகை ஷில்பா ஷெட்டியிடம், பிட்னஸ் சென்டர் கிளைகளை தொடங்க கோடிக்கணக்கில் பணம் கொடுத்ததாகவும், ஆனால் கிளைகள் தொடங்கப்படவே இல்லை, அதோடு ஷில்பாஷெட்டி பணத்தையும் திரும்ப கொடுக்கவில்லை எனக் கூறப்படுகிறது. இதையடுத்து இருவரும் போலீஸில் புகார் செய்துள்ளனர். போலீஸார் வழக்கு பதிவு செய்து ஷில்பா ஷெட்டிக்கும் அவரது தாயார் சுனந்தாவுக்கும் நோட்டீஸ் அனுப்பி இருக்கின்றனர். ஷில்பா ஷெட்டி ஆரம்பித்த கம்பெனியில் ஷில்பா தலைவராகவும், அவரது தாயார் இயக்குநராகவும் இருந்தனர். எனவேதான் இரண்டு பேருக்கும் சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.

"அவை ஆபாச வீடியோக்கள் அல்ல!"- கணவர் ராஜ் குந்த்ராவுக்கு ஆதரவாக ஷில்பா ஷெட்டி வாக்குமூலம்!

இது தொடர்பாக லக்னோ கிழக்கு பகுதி டிஜிபி சஞ்சீவ் அளித்த பேட்டியில், ``நடிகை ஷில்பா, அவரின் தாயாரிடம் விசாரணை நடத்த விசாரணை அதிகாரி மும்பை செல்ல இருக்கிறார். இவ்வழக்கு அனைத்து கோணத்திலும் விசாரிக்கப்படும். முக்கிய பிரமுகர் இவ்வழக்கில் தொடர்பு கொண்டு இருப்பதால் விசாரணை உன்னிப்பாக கவனிக்கப்படுகிறது” என்று தெரிவித்தார்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு