Published:Updated:

பெங்களூரு பார்ட்டியில் போதைப்பொருள்... நடிகை ஷ்ரத்தா கபூர் சகோதரர் சித்தாந்த் கபூர் கைது!

சித்தாந்த் கபூர்

பெங்களூரு பார்ட்டியில் போதைப்பொருள் பயன்படுத்தியதாக நடிகை ஷ்ரத்தா கபூரின் சகோதரர் கைதுசெய்யப்பட்டிருக்கிறார்.

பெங்களூரு பார்ட்டியில் போதைப்பொருள்... நடிகை ஷ்ரத்தா கபூர் சகோதரர் சித்தாந்த் கபூர் கைது!

பெங்களூரு பார்ட்டியில் போதைப்பொருள் பயன்படுத்தியதாக நடிகை ஷ்ரத்தா கபூரின் சகோதரர் கைதுசெய்யப்பட்டிருக்கிறார்.

Published:Updated:
சித்தாந்த் கபூர்

பெங்களூரு எம்.ஜி.சாலையில் உள்ள ஹோட்டல் ஒன்றில் பார்ட்டி நடப்பதாகவும், அதில் போதைப்பொருள் பயன்படுத்தப்படுவதாகவும் போலீஸாருக்கு ரகசியத் தகவல் ஒன்று கிடைத்தது. இதையடுத்து நேற்று நள்ளிரவில் பெங்களூரு போலீஸார், சம்பந்தப்பட்ட ஹோட்டலில் ரெய்டு நடத்தினர். இந்த ரெய்டில் 35 பேர் பிடிபட்டனர். அவர்கள் அனைவரும் மருத்துவப் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டனர். அவர்களில் ஆறு பேர் போதைப்பொருள் பயன்படுத்தியிருப்பது உறுதிசெய்யப்பட்டது. அவர்களில் பாலிவுட் நடிகை ஷ்ரத்தா கபூரின் சகோதரர் சித்தாந்த் கபூரும் அடக்கம். இதையடுத்து சித்தாந்த் கபூரை போலீஸார் கைதுசெய்துள்ளனர். அவர் இன்று கோர்டில் ஆஜர்படுத்தப்படுவார்.

ஷ்ரத்தா கபூர்
ஷ்ரத்தா கபூர்

நடிகை ஷ்ரத்தா கபூரின் சகோதரர் போதைப்பொருள் பயன்படுத்தி கைதுசெய்யப்பட்டிருப்பதை பெங்களூரு போலீஸாரும் உறுதிபடுத்தியிருக்கின்றனர். பிடிபட்ட ஆறு பேரும் பார்ட்டியில் போதைப்பொருள் பயன்படுத்தினரா அல்லது பார்ட்டிக்கு வரும் முன்பாக போதைப்பொருள் பயன்படுத்தினரா என்ற விவரம் உறுதியாகத் தெரியவில்லை. அவர்கள் அனைவரும் விசாரணைக்காக பெங்களூரிலுள்ள உல்சூர் காவல் நிலையத்துக்கு அழைத்து செல்லப்பட்டுள்ளனர். சித்தாந்த் கபூர் பாலிவுட்டில் ஏராளமான படங்களில் நடித்திருக்கிறார். குறிப்பாக `ஷூட் அவுட் வடாலா’, `ஹசீனா பார்க்கர்’ போன்ற படங்களில் நடித்திருப்பதோடு, உதவி இயக்குநராகவும் பணியாற்றியிருக்கிறார்.

நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத் தற்கொலை செய்துகொண்ட போது, போதைப்பொருள் பயன்படுத்தியதால்தான் சுஷாந்த் தற்கொலை செய்துகொண்டதாகக் குற்றச்சாட்டு எழுந்தது. இதையடுத்து நடிகை ஷ்த்தா கபூர், தீபிகா படுகோன், சாரா அலிகான் போன்ற நடிகைகளிடம் போதைப்பொருள் தடுப்புப் பிரிவு அதிகாரிகள் விசாரணை நடத்தினர். இதில் சுஷாந்த் சிங்கின் காதலியாக கருதப்படும் ரியா, அவரின் சகோதரர் ஆகியோர் கைதுசெய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது. கடந்த ஆண்டு, அக்டோபர் மாதம் நடிகர் ஷாருக் கானின் மகன் ஆர்யன் கானும் போதைப்பொருள் பயன்படுத்தியதாகக் கைதுசெய்யப்பட்டு பின்னர் வழக்கிலிருந்து விடுவிக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism