Published:Updated:

சென்னை: சிமென்ட் கம்பெனியில் ரூ.25 லட்சம் முதலீடு! -ஆந்திர நிறுவனத்தின்மீது நடிகை சினேகா புகார்

ஆந்திர கம்பெனியில் 25 லட்சம் ரூபாய் முதலீடு செய்ததாகவும், அந்த கம்பெனி தங்களை ஏமாற்றிவிட்டதாகவும் சென்னை கானத்தூர் காவல் நிலையத்தில் நடிகை சினேகா தரப்பில் புகார் ஒன்று அளிக்கப்பட்டிருக்கிறது.

நடிகர் பிரசன்னா, அவரின் மனைவி நடிகை சினேகா ஆகியோர் குடும்பத்துடன் கானத்தூர், அருகே பனையூர் பகுதியிலுள்ள ஐந்தாவது அவென்யூவில் வசித்துவருகின்றனர். நடிகர் பிரசன்னாவின் நண்பர் பிரசாந்த். இவர் ஆந்திராவிலுள்ள பிரபலமான சிமென்ட் கம்பெனியில் முதலீடு செய்திருப்பதாகக் கூறப்படுகிறது. அதன் மூலம் மாதம்தோறும் குறிப்பிட்ட தொகை வருமானம் கிடைப்பதாக பிரசன்னாவிடம் தெரிவித்திருக்கிறார். இதையடுத்து அந்த சிமென்ட் கம்பெனியில் முதலீடு செய்யுமாறு பிரசன்னா, சினேகாவிடம் பிரசாந்த் கூறியிருக்கிறார். அதனால், நடிகை சினேகா தரப்பில் அந்த கம்பெனியில் கடந்த மே மாதம் 25 லட்ச ரூபாய் முதலீடு செய்யப்பட்டுள்ளது. ஆனால் ஒப்பந்தத்தின்படி சினேகாவுக்கு, சம்பந்தப்பட்ட கம்பெனி பணத்தைக் கொடுக்கவில்லை.

நடிகை சினேகா, பிரசன்னா
நடிகை சினேகா, பிரசன்னா
`ரூ.1.5 கோடி மோசடி - நடிகை ஷில்பா ஷெட்டி மீது வழக்கு பதிந்தது போலீஸ்!'

இதையடுத்து நடிகை சினேகா தரப்பில் கானத்தூர் காவல் நிலையத்தில் புகாரளிக்கப்பட்டுள்ளது. அதன்பேரில் போலீஸார் விசாரணை நடத்திவருகின்றனர். சம்பந்தப்பட்ட சிமென்ட் நிறுவனத்துக்குத் தகவல் தெரிவித்த போலீஸார், அவர்களை விசாரணைக்கு ஆஜராகும்படி சம்மன் அனுப்பியிருக்கின்றனர்.

இது குறித்து கானத்தூர் போலீஸாரிடம் கேட்டதற்கு, நடிகை சினேகா தரப்பில் கொடுத்த புகாரில் ஆந்திர கம்பெனியில் 25 லட்சம் ரூபாய் முதலீடு செய்ததாகவும், அந்தக் கம்பெனி தங்களை ஏமாற்றிவிட்டதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. அதன்பேரில் முதற்கட்ட விசாரணை நடந்துவருகிறது. இதுவரை எந்த வழக்கும் பதிவு செய்யவில்லை. விசாரணைக்குப் பிறகுதான் அடுத்தகட்ட நடவடிக்கை எடுப்பது குறித்து முடிவு செய்யப்படும் என்றனர்.

நடிகை சினேகா தரப்பில் மோசடி புகார் கொடுக்கப்பட்ட தகவல் பரபரப்பாகப் பேசப்பட்டுவருகிறது.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு