Published:Updated:

சாத்தான்குளம்: `ரத்தக்கறை படிந்த ஆடைகளைக் குப்பைத்தொட்டியில் போட்ட போலீஸ்' - சிபிஐ குற்றப்பத்திரிகை

உயிரிழந்த ஜெயராஜ், பென்னிக்ஸ்

சாத்தான்குளம் ஜெயராஜ் - பென்னிக்ஸ் வழக்கில் சி.பி.ஐ தாக்கல் செய்திருக்கும் கூடுதல் குற்றப்பத்திரிகையில் இடம்பெற்றுள்ள புதிய தகவல்கள் மேலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளன.

சாத்தான்குளம்: `ரத்தக்கறை படிந்த ஆடைகளைக் குப்பைத்தொட்டியில் போட்ட போலீஸ்' - சிபிஐ குற்றப்பத்திரிகை

சாத்தான்குளம் ஜெயராஜ் - பென்னிக்ஸ் வழக்கில் சி.பி.ஐ தாக்கல் செய்திருக்கும் கூடுதல் குற்றப்பத்திரிகையில் இடம்பெற்றுள்ள புதிய தகவல்கள் மேலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளன.

Published:Updated:
உயிரிழந்த ஜெயராஜ், பென்னிக்ஸ்

தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளத்தில் மொபைல் கடை வைத்திருந்த தந்தை மகனான ஜெயராஜ் - பென்னிக்ஸை போலீஸ் விசாரணைக்கு அழைத்துச் சென்று கொடூரமாகத் தாக்கியதில் அவர்கள் மரணமடைந்த சம்பவம் இரண்டு வருடங்களுக்கு முன்பு நாட்டையே அதிரவைத்தது.

சாத்தான்குளம் பென்னிக்ஸ், ஜெயராஜ் - கொலை வழக்கு
சாத்தான்குளம் பென்னிக்ஸ், ஜெயராஜ் - கொலை வழக்கு
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

இந்தச் சம்பவத்தை தமிழ்நாடு காவல்துறை விசாரித்த நிலையில் சி.பி.ஐ விசாரிக்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. அதன் பின்பு, விசாரணையைத் தொடங்கிய சி.பி.ஐ., வழக்கு பதிவுசெய்து இன்ஸ்பெக்டர் ஸ்ரீதர், எஸ்.ஐ ரகு கணேஷ், பாலகிருஷ்ணன் உள்ளிட்ட 10 போலீஸாரைக் கைதுசெய்தது. அவர்களில் ஒருவர் நோயால் சிறையிலயே இறந்துவிட, மீதியுள்ள ஒன்பது பேர் ஜாமீன் மறுக்கப்பட்ட நிலையில் தொடர்ந்து சிறையில் இருந்துவருகிறார்கள்.

லாக்கப் மரணங்கள்
லாக்கப் மரணங்கள்

ஏற்கெனவே 2027 பக்கங்கள்கொண்ட குற்றப்பத்திரிகையை சி.பி.ஐ தாக்கல் செய்தது. அந்த அடிப்படையில் நீதிமன்றத்தில் சாட்சிகளிடம் விசாரணை நடந்த நிலையில், தற்போது 400 பக்கங்கள்கொண்ட கூடுதல் குற்றப்பத்திரிகையைத் தாக்கல் செய்துள்ளது.

இது குறித்து வழக்கு நடந்துவரும் மாவட்ட செஷன்ஸ் நீதிமன்ற வட்டாரத்தில் விசாரித்தபோது, ``இந்தக் கூடுதல் குற்றப்பத்திரிகையில் சாத்தான்குளம் அரசு மருத்துவமனை டாக்டர் வெண்ணிலா, கோவில்பட்டி சிறைக் கைதி ராஜாசிங் ஆகியோர் புதிய சாட்சிகளாகச் சேர்க்கப்பட்டுள்ளனர். குற்றம்சாட்டப்பட்டுள்ள காவல்துறையினர் 19.6.2020 அன்று பஜாரிலிருந்து ஜெயராஜ் - பென்னிக்ஸை சட்டவிரோதமாக அழைத்துச் சென்று போலீஸ் ஸ்டேஷனில்வைத்துக் கொடூரமாகத் தாக்கி சித்ரவதை செய்துள்ளனர்.

இன்ஸ்பெக்டர் ஸ்ரீதர், எஸ்.ஐ-கள் ரகு கணேஷ், பாலகிருஷ்ணன்
இன்ஸ்பெக்டர் ஸ்ரீதர், எஸ்.ஐ-கள் ரகு கணேஷ், பாலகிருஷ்ணன்

கடும் காயங்களை ஏற்படுத்தியுள்ளனர். அதன் பிறகே பொய் வழக்கு பதிவுசெய்துள்ளனர். போலீஸ் தாக்கியதில் ஜெயராஜ் பென்னிக்ஸ் உடல்களிலிருந்து வந்த ரத்தம், போலீஸ் ஸ்டேஷன் சுவர், தரை அங்குள்ள பொருள்களில் தெறித்திருக்கிறது.

படுகாயத்துடன் அவதிப்பட்ட பென்னிக்ஸை சுவர், தரையில் சிதறிய ரத்தத்தைச் சுத்தம் செய்யவும் கட்டாயப்படுத்தியுள்ளனர். குற்றம்சாட்டப்பட்ட போலீஸ் அதிகாரிகள், ஜெயராஜ் - பென்னிக்ஸுக்கு எதிராக ஒரே நோக்கத்துடன் சதித்திட்டம் தீட்டியுள்ளனர்.

அவர்களை நீதிமன்றத்துக்கு அழைத்துச் செல்லும்போது ரத்தக்கறையுள்ள ஆடைகள் யாருக்கும் தெரியக் கூடாது என்பதால், மருத்துவமனையில் வைத்து ஆடைகளை மாற்றியுள்ளனர். பின்பு ரத்தக்கறை படிந்த ஆடைகளைக் குப்பைத்தொட்டியில் வீசியுள்ளனர்.

சாத்தான்குளம்
சாத்தான்குளம்

சாத்தான்குளம் போலீஸ் ஸ்டேஷன் சுவர்களில் இருந்த ரத்தமும், போலீஸார் தாக்கிய லத்திகளில் இருந்த ரத்தமும் தடய ஆய்வில் உறுதியாகியிருக்கிறது. இதன் மூலமும் குற்றம்சாட்டப்பட்ட ஒன்பது பேர் மீதான குற்றச்சாட்டு உறுதியாகிறது என்று கூடுதல் குற்றப்பத்திரிகையில் சி.பி.ஐ. தெரிவித்திருக்கிறது" எனக் கூறினார்கள்.

சாத்தான்குளம் வழக்கின் தீர்ப்பு வருவதற்குள் இன்னும் என்னென்ன அதிர்ச்சியான தகவல்கள் வெளிவருமோ?