Published:Updated:

சாலையில் மர்மமாக இறந்துகிடந்த அதிமுக பிரமுகர்! - பெரம்பலூரில் அதிர்ச்சி

அதிமுக பிரமுகர் ரெங்கராஜ்

``ரெங்கராஜை வெட்டிக் கொலை செய்துவிட்டு, அதை ஒரு விபத்துபோல் காட்டி நாடகம் ஆடுவதற்காக இருசக்கர வாகனத்தைச் சேதப்படுத்திவிட்டுச் சென்றிருக்கின்றனர்.”

சாலையில் மர்மமாக இறந்துகிடந்த அதிமுக பிரமுகர்! - பெரம்பலூரில் அதிர்ச்சி

``ரெங்கராஜை வெட்டிக் கொலை செய்துவிட்டு, அதை ஒரு விபத்துபோல் காட்டி நாடகம் ஆடுவதற்காக இருசக்கர வாகனத்தைச் சேதப்படுத்திவிட்டுச் சென்றிருக்கின்றனர்.”

Published:Updated:
அதிமுக பிரமுகர் ரெங்கராஜ்

அதிமுக பிரமுகர் தலையில் வெட்டுக் காயங்களுடன் மர்மமான முறையில் இறந்துகிடந்த சம்பவம் பெரம்பலூரில் பெரும் பரப்பரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது கொலையா அல்லது விபத்தா என்கிற கோணத்தில் போலீஸார் விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.

பெரம்பலூர்
பெரம்பலூர்

பெரம்பலூர் அருகேயுள்ள நாரணமங்கம் கிராமத்தைச் சேர்ந்தவர் ரெங்கராஜ். இவர் முன்னாள் ஊராட்சி மன்றத் துணைத் தலைவராகவும், அ.தி.மு.க ஊராட்சிச் செயலாளராகவும் இருந்தவர். இவர் டூ வீலரில் ஆலத்தூர் கேட்டியிலிருந்து காரை செல்லும் சாலையில் தலையில் வெட்டுக் காயங்களுடன் ரத்த வெள்ளத்தில் உயிரிழந்து கிடந்தார். இதைக் கண்ட அக்கம் பக்கத்தில் இருந்த மக்கள் போலீஸாருக்குத் தகவல் அளித்தனர்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

சம்பவ இடத்துக்கு வந்த பாடாலூர் காவல்துறையினர் உடலை மீட்டு, உடற்கூறு ஆய்வுக்காக பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.

பின்னர் சந்தேக மரணம் என வழக்கு பதிவுசெய்த காவல்துறையினர், இது கொலையா, விபத்தா என விசாரணை செய்துவருகின்றனர். இதற்டையே, தொழில் போட்டி உள்ளிட்ட காரணங்களால் மர்மநபர்கள் ரெங்கராஜை வெட்டிக் கொலை செய்துவிட்டு இதை ஒரு விபத்துபோல் காட்டி நாடகம் ஆடுவதற்காக இருசக்கர வாகனத்தை சேதப்படுத்திவிட்டு சென்றிருக்கலாம் என்ற சந்தேகமும் உள்ளது என்று உறவினர்கள் போலீஸாரிடம் புகார் கொடுத்துள்ளனர்.

அதிமுக பிரமுகர் ரெங்கராஜ்
அதிமுக பிரமுகர் ரெங்கராஜ்

வழக்கை விசாரித்துவரும் போலீஸாரிடம் பேசினோம். ``அவரின் தலைப்பகுதியில் அரிவாள் வெட்டுக் காயம் இருப்பதால் திட்டமிட்டுக் கொலை செய்திருக்கிறார்கள் என்று உறவினர் தரப்பில் புகார் கொடுத்திருக்கிறார்கள். பிரேத பரிசோதனையின் அறிக்கை அடிப்படையில் இது கொலையா அல்லது விபத்தா என்பது உறுதிப்படுத்தப்படும். அதன் அடிப்படையில் அடுத்தகட்ட விசாரணை நடத்திக்கொண்டிருக்கிறோம்” என்றனர்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism