Published:Updated:

கணவருக்குத் தெரியாமல் இன்ஸ்டா நண்பருடன் பழக்கம்... ரூ.1.63 கோடியை இழந்த அரசுப் பெண் ஊழியர்!

சித்திரிப்புப் படம்

மும்பையில் இன்ஸ்டாகிராமில் பழகிய நண்பரிடம் மகாராஷ்டிரா அரசு பெண் ஊழியர் ரூ.1.63 கோடியை இழந்திருக்கிறார்.

கணவருக்குத் தெரியாமல் இன்ஸ்டா நண்பருடன் பழக்கம்... ரூ.1.63 கோடியை இழந்த அரசுப் பெண் ஊழியர்!

மும்பையில் இன்ஸ்டாகிராமில் பழகிய நண்பரிடம் மகாராஷ்டிரா அரசு பெண் ஊழியர் ரூ.1.63 கோடியை இழந்திருக்கிறார்.

Published:Updated:
சித்திரிப்புப் படம்

இணையதள சேவைகள் அதிகரித்த பிறகு சோஷியல் மீடியா மூலம் நடக்கும் குற்றங்களும் அதிகரித்துவிட்டன. அடிக்கடி சோஷியல் மீடியாவில் நண்பர்களாகப் பழகி, கோடிக்கணக்கில் பணத்தை மோசடி செய்துவிடும் சம்பவங்கள் நடந்துகொண்டுதான் இருக்கின்றன. மும்பை அருகிலுள்ள டோம்பிவலியில் வசிக்கும் பெண் ஒருவர், திருமணமாகித் தன் கணவருடன் வசித்துவருகிறார். அவர் மாநில அரசில் உயர் அதிகாரியாகவும் இருக்கிறார். கடந்த சில மாதங்களுக்கு முன்பு இன்ஸ்டாகிராமில் அந்தப் பெண்ணுக்கு நட்பு கோரிக்கை வந்தது. நட்பு கோரிக்கை விடுத்த நபர் தனது பெயரை ஹெம்ஸ் மிக்கேல் என்றும், பிரிட்டனிலுள்ள மான்செஸ்டர் நகரில் வசிப்பதாகவும் தெரிவித்திருந்தார். உடனே அந்தப் பெண்ணும் நட்பு கோரிக்கையை ஏற்றுக்கொண்டார். ஒரு மாதம் ஆன்லைனில் சாட்டிங் செய்த பிறகு இருவரும் வாட்ஸ்அப் நம்பர்களைப் பகிர்ந்துகொண்டனர். இருவரும் அடிக்கடி வாட்ஸ்அப்பில் உரையாடிவந்தனர். அது அந்தப் பெண்ணின் கணவருக்குத் தெரியாமல் நடந்துவந்தது. திடீரென ஹெம்ஸ் தான் இந்தியா வர விரும்புவதாகத் தெரிவித்தார்.

கணவருக்குத் தெரியாமல் இன்ஸ்டா நண்பருடன் பழக்கம்... ரூ.1.63 கோடியை இழந்த அரசுப் பெண் ஊழியர்!

கடந்த மார்ச் 21-ம் தேதி ஹெம்ஸ் அந்தப் பெண்ணுக்கு போன் செய்து, தான் டெல்லி விமான நிலையத்தில் பிடிபட்டிருப்பதாகவும், கொரோனா தடுப்பூசி போடவில்லை என்றும், தன்னிடம் 85 ஆயிரம் டாலர் இருப்பதாகவும் தெரிவித்தார். அதோடு தன்னை விடுவிக்க உதவும்படியும் கேட்டுக்கொண்டார். அதன் பிறகு ஹெம்ஸ் ஆட்கள் அந்தப் பெண்ணுக்கு போன் செய்து சுங்க வரி கட்ட வேண்டும் என்று கூறி குறிப்பிட்ட பணத்தை அந்தப் பெண்ணிடமிருந்து வசூலித்தனர். அதோடு அந்தப் பெண்ணிடம் பண மோசடி தடுப்புச் சட்டத்தின் கீழ் விசாரணைக்கு ஆளாகவேண்டியிருக்கும் என்று மிரட்டி, கடந்த ஐந்து மாதங்களில் ரூ.1.63 கோடியை மர்மக் கும்பல் வசூலித்துவிட்டது. இதற்காக அந்தப் பெண் வங்கியில் கடனும் வாங்கியிருக்கிறார்.

அந்தக் கும்பல் மேலும் 44 லட்சம் ரூபாய் கேட்டதால் அந்தப் பெண்ணால் மேற்கொண்டு பணம் ஏற்பாடு செய்ய முடியாது என்ற சூழ்நிலையில் இது குறித்து தன் கணவரிடம் தெரிவித்தார். இதனால் அதிர்ச்சியடைந்த அந்தப் பெண்ணின் கணவர் இது குறித்து வழக்கறிஞர் ஒருவரிடம் கலந்தாலோசித்தார். அதன் பிறகு வழக்கறிஞரின் ஆலோசனையின் பேரில் இது குறித்து போலீஸில் புகார் செய்தனர். போலீஸார் வழக்கு பதிவுசெய்து குற்றவாளிகளைத் தேடிவருகின்றனர்.