Published:Updated:

`நான் கூப்பிடும்போது வரணும்; இல்லைன்னா கொளுத்திடுவேன்!’ - பெண்ணை மிரட்டிய அதிமுக நகரச் செயலாளர் கைது

அதிமுக நகரச் செயலாளர்

``அரசு வேலை வாங்கித் தருவதாக ஒரு பெண்ணிடம் பணத்தை வாங்கிக்கொண்டு வேலையும் வாங்கிக் கொடுக்கவில்லை. பணத்தையும் கொடுக்கவில்லை.”

`நான் கூப்பிடும்போது வரணும்; இல்லைன்னா கொளுத்திடுவேன்!’ - பெண்ணை மிரட்டிய அதிமுக நகரச் செயலாளர் கைது

``அரசு வேலை வாங்கித் தருவதாக ஒரு பெண்ணிடம் பணத்தை வாங்கிக்கொண்டு வேலையும் வாங்கிக் கொடுக்கவில்லை. பணத்தையும் கொடுக்கவில்லை.”

Published:Updated:
அதிமுக நகரச் செயலாளர்

``நான் கூப்பிடும் நேரத்துக்கெல்லாம் என்னோடு வர வேண்டும். அப்படி இல்லையென்றால் பெட்ரோல் ஊற்றிக் கொளுத்திடுவேன்" என்று கத்தியைக் காட்டி மிரட்டி, பெண்ணுக்குப் பாலியல் தொந்தரவு கொடுத்த அதிமுக நகரச் செயலாளரை போலீஸார் கைதுசெய்திருக்கும் விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பெரம்பலூர்
பெரம்பலூர்

பெரம்பலூர் மாவட்டம், பூலாம்பாடி அதிமுக நகரச் செயலாளராக இருப்பவர் வினோத். இவர்மீது ஏற்கெனவே அரசு வேலை வாங்கித் தருவதாகப் பணம் வாங்கிக்கொண்டு மோசடி செய்ததாகப் பெரம்பலூர் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த நிலையில், இவர்மீது பூலாம்பாடியைச் சேர்ந்த மாற்றுத்திறனாளி ஒருவரின் மனைவியை நேற்று மாலை நடந்து சென்றுகொண்டிருந்தபோது வழிமறித்து வினோத், அவர் வைத்திருந்த கத்தியைக் காட்டி பாலியல் தொல்லை கொடுத்துள்ளார்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

மேலும், ``நான் கூப்பிடும் நேரத்துக்கெல்லாம் என்னோடு வர வேண்டும். அப்படி இல்லையென்றால் பெட்ரோல் ஊற்றிக் கொளுத்திவிடுவேன்" என்று கத்தியைக் கழுத்தில்வைத்து மிரட்டியதாகச் சொல்லப்படுகிறது. இதனால் பயந்துபோன அந்தப் பெண் கூச்சலிட, அக்கம் பக்கத்திலிருந்தவர்கள் வினோத்திடமிருந்து அந்தப் பெண்ணைக் காப்பாற்றியிருக்கிறார்கள். இது குறித்து பாதிக்கப்பட்ட பெண் அரும்பாவூர் காவல் நிலையத்தில், வினோத் மீது புகார் கொடுத்துள்ளார். இந்நிலையில் அவர் பேசிய ஆடியோக்களையும் அந்தப் பெண் போலீஸாரிடம் கொடுத்திருக்கிறார்.

வினோத்
வினோத்

அதன் அடிப்படையில் அரும்பாவூர் போலீஸார் வழக்கு பதிவு செய்து வினோத்தைத் தற்போது கைதுசெய்துள்ளனர். அவர்மீது கொலை முயற்சி, அத்துமீறி வழிமறித்து மிரட்டுதல் உட்பட ஐந்து பிரிவுகளின் கீழ் போலீஸார் வழக்கு பதிவு செய்துள்ளதாகச் சொல்லப்படுகிறது. கைதுசெய்யப்பட்டுள்ள வினோத்தை சிறையில் அடைப்பதற்கான நடைமுறைகளை போலீஸார் மேற்கொண்டுவருகிறார்கள். அ.தி.மு.க நகரச் செயலாளர் வினோத் கைதுசெய்யப்பட்டுள்ள சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

என்ன நடந்தது என்று அதிமுக நிர்வாகிகள் வட்டாரத்தில் பேசினோம். ``வினோத் பெண்கள் மற்றும் பண விவகாரத்தில் மிகவும் மோசமானவர். அப்படித்தான் கடந்த வருடம் அரசு வேலை வாங்கித்தருவதாக ஒரு பெண்ணிடம் பணத்தை வாங்கிக்கொண்டு வேலையும் வாங்கிக்கொடுக்கவில்லை; பணத்தையும் கொடுக்கவில்லை. இப்போது பெண் விவகாரத்திலும் சிக்கியிருக்கிறார். இரவு நேரங்களில் தினந்தோறும் அந்தப் பெண்ணுக்கு ஆபாசமாகப் பேசிய ஆடியோக்கள், வீடியோக்களை அந்தப் பெண்ணுக்கு அனுப்புவாராம். இவரின் செயலைக் கண்டித்து அந்தப் பெண் திட்டியிருக்கிறார்.

பெரம்பலூர் எஸ்.பி ஆபீஸ்
பெரம்பலூர் எஸ்.பி ஆபீஸ்

அந்த ஆத்திரத்தில்தான் அவர் கத்தியைக் காட்டி `நான் கூப்பிடும் நேரமெல்லாம் வர வேண்டும்’ என்று மிரட்டியிருக்கிறார். இவரின் மிரட்டலுக்கு பயந்துதான் போலீஸாரிடம் புகார் கொடுத்திருக்கிறார். அந்த ஆடியோக்களையும் போலீஸாரிடம் கொடுத்திருக்கிறார். இதுபோல் இவர்மீது ஏகப்பட்ட புகார்கள் தொடர்ந்து வந்துகொண்டிருக்கின்றன. ஆனால் இவர்மீது அ.தி.மு.க தலைமை நடவடிக்கை எடுப்பதில்லை. காரணம், மாவட்ட அளவிலும், முக்கியத் தலைவர்கள் சிலரிடமும் நெருக்கத்தில் இருப்பதால் நடவடிக்கை எடுப்பதில்லை” என்கிறார்கள்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism