Published:Updated:

நடிகை ஜெனிலியா, கணவர் ரிதேஷுக்கு சட்டவிரோதமாக நிலம் ஒதுக்கீடு செய்யப்பட்டதா?! - வெடித்த சர்ச்சை

ஜெனிலியா-ரிதேஷ்

நடிகை ஜெனிலியா அவரின் கணவருக்கு விதிகளை மீறி நிலம் ஒதுக்கப்பட்டது தொடர்பாக விசாரணை நடத்த மாநில அரசு உத்தரவிட்டுள்ளது.

நடிகை ஜெனிலியா, கணவர் ரிதேஷுக்கு சட்டவிரோதமாக நிலம் ஒதுக்கீடு செய்யப்பட்டதா?! - வெடித்த சர்ச்சை

நடிகை ஜெனிலியா அவரின் கணவருக்கு விதிகளை மீறி நிலம் ஒதுக்கப்பட்டது தொடர்பாக விசாரணை நடத்த மாநில அரசு உத்தரவிட்டுள்ளது.

Published:Updated:
ஜெனிலியா-ரிதேஷ்

தமிழ், தெலுங்கு, இந்தி போன்ற மொழிப்படங்களில் நடித்தவர் ஜெனிலியா தேஷ்முக். மகாராஷ்டிரா முன்னாள் முதல்வர் விலாஸ் ராவ் தேஷ்முக் மகன் ரிதேஷ் தேஷ்முக்கை காதலித்து திருமணம் செய்து கொண்டு நடிப்பில் இருந்து சற்று ஒதுங்கி இருந்து வருகிறார். ஆனால் பாலிவுட் நிகழ்ச்சிகள் எதுவானாலும் தனது கணவருடன் கலந்து கொள்வதை வழக்கமாக கொண்டிருக்கிறார் ஜெனிலியா. ஜெனிலியாவும், அவரின் கணவர் ரிதேஷ் தேஷ்முக்கும் சேர்ந்து தேஷ் அக்ரோ பிரைவேட் லிமிடெட் என்ற நிறுவனத்தை தொடங்கியுள்ளனர்.

இந்த நிறுவனம் மகாராஷ்டிரா மாநிலம் லாத்தூரில் உள்ள மகாராஷ்டிரா தொழில் மேம்பாட்டுக்கழகமான எம்.ஐ.டி.சி.யில் அக்ரோ தொழிற்சாலை ஒன்றை தொடங்க நிலம் ஒதுக்கவேண்டும் என்று கேட்டு விண்ணப்பித்திருந்தனர். நிலம் கேட்டு விண்ணப்பித்த 10 நாள்களில் 2.55 லட்சம் சதுர மீட்டர் நிலம் 15.29 கோடிக்கு தேஷ்முக் தம்பதிக்கு ஒதுக்கப்பட்டது. எம்.ஐ.டி.சி.யில் நிலம் கேட்டு ஏராளமானோர் காத்திருப்பு பட்டியலில் இருக்கும் நிலையில் தேஷ்முக் தம்பதி விண்ணப்பித்தவுடன் நிலம் ஒதுக்கப்பட்டு இருப்பதாக குற்றச்சாட்டு எழுந்தது.

இது குறித்து மாவட்ட பாஜக தலைவர் குருநாத் தகவல் அறியும் உரிமைச்சட்டத்தின் கீழ் பெறப்பட்ட தகவலில் இவை தெரிய வந்தது. இது குறித்து கருத்து தெரிவித்த குருநாத், ``எம்.ஐ.டி.சி.யில் நிலம் கேட்டு 3 ஆண்டுகளாக 16 பேர் காத்திருக்கின்றனர். ஆனால் தேஷ்முக் தம்பதி கம்பெனி ஆரம்பித்து ஒரு மாதத்திற்குள், நிலம் கேட்டு விண்ணப்பித்த 10 நாள்களில், அதாவது கடந்த ஏப்ரல் 9-ம் தேதி நிலம் ஒதுக்கப்பட்டுள்ளது.

நடிகை ஜெனிலியா, கணவர் ரிதேஷுக்கு சட்டவிரோதமாக நிலம் ஒதுக்கீடு செய்யப்பட்டதா?! - வெடித்த சர்ச்சை

அதோடு தேஷ்முக் தம்பதி தொடங்கிய கம்பெனிக்கு வெறும் 5 மாதத்தில் மாவட்ட கூட்டுறவு வங்கி ரூ.116 கோடி கடன் வழங்கி இருக்கிறது. தேஷ்முக் உறவினர் திலிப் ராவ் தேஷ்முக் மாவட்ட கூட்டுறவு வங்கியை தனது கட்டுப்பாட்டில் வைத்திருக்கிறார். ரிதேஷ் தேஷ்முக் சகோதரர் அமித் தேஷ்முக் மாவட்ட பொறுப்பு அமைச்சராக இருந்த போது தனது அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்து நிலத்தை ஒதுக்கீடு செய்ததோடு, மாவட்ட கூட்டுறவு வங்கியில் கடன் கிடைக்க வகை செய்துள்ளார்” என்று குற்றம் சாட்டினார்.

இக்குற்றச்சாட்டு குறித்து தேஷ் அக்ரோ பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தின் மேலாளர் தினேஷ் வெளியிட்டுள்ள அறிக்கையில், ``பாஜக பிரமுகரின் குற்றச்சாட்டு ஆதாரமற்றது. தவறானது. எம்.ஐ.டி.சி.சட்டப்படிதான் நிலத்தை ஒதுக்கீடு செய்திருக்கிறது. ஜெனிலியா, ரிதேஷ் தேஷ்முக் சட்டத்தை மதிக்கக்கூடிய பொறுப்பானவர்கள். கம்பெனிக்கு கடன் வழங்கப்பட்டதிலும் எந்த வித விதிகளும் மீறப்படவில்லை. சட்டப்படிதான் கடன் வழங்கப்பட்டுள்ளது. வேளாண் தொழிலை மேம்படுத்தும் நோக்கத்தில் இக்கம்பெனி ஆரம்பிக்கப்படுவதால் அதனை எதிர்க்கவேண்டாம் என்று கேட்டுக்கொள்கிறோம்" என்று தெரிவித்துள்ளார்.

ரிதேஷ் - ஜெனிலியா!
ரிதேஷ் - ஜெனிலியா!

தேஷ்முக் தம்பதி மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டு குறித்து விசாரணை நடத்த மாநில தொழில்துறை அமைச்சர் உதய் சாவந்த் உத்தரவிட்டு இருக்கிறார். இது குறித்து உதய் சாவந்த் அளித்த பேட்டியில், ``தேஷ்முக் தம்பதி நிலம் வாங்கியது குறித்து இப்போதுதான் எனது கவனத்திற்கு வந்துள்ளது. இது குறித்து முழுமையாக விசாரித்து அறிக்கை விரைவாக தாக்கல் செய்யும்படி எம்.ஐ.டி.சி.தலைமை நிர்வாக அதிகாரி பிபின் சர்மாவிடம் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. விசாரணை அறிக்கை கிடைத்த பிறகு இவ்விவகாரத்தில் அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்கப்படும்” என்று தெரிவித்தார்.

இது குறித்து ரிதேஷ் தேஷ்முக் கூறுகையில், ``சோயாபீன்ஸ் பயிரிடும் விவசாயிகளின் நலனை கருத்தில் கொண்டு இத்தொழிற்சாலை தொடங்கப்படுகிறது. இதற்கு நிலம் வாங்கியதில் அல்லது கடன் பெற்றதில் எந்த வித விதிமுறை மீறலும் நடைபெறவில்லை” என்று தெரிவித்தார்.