Election bannerElection banner
Published:Updated:

அம்பானி வீடு; வெடி பொருள்களுடன் கார்! - என்கவுன்ட்டர் ஸ்பெலிஸ்ட்டை நள்ளிரவில் கைதுசெய்த என்.ஐ.ஏ

சச்சின் வாஸ்
சச்சின் வாஸ்

தொழிலதிபர் முகேஷ் அம்பானி வீட்டுக்கு அருகில் வெடிகுண்டு நிரப்பப்பட்ட கார் நின்ற விவகாரத்தில் தேசியப் புலனாய்வு ஏஜென்சி போலீஸ் அதிகாரியை நள்ளிரவில் கைதுசெய்தனர்.

மும்பையில் கடந்த மாதம், 25-ம் தேதி தொழிலதிபர் முகேஷ் அம்பானி வீட்டுக்கு அருகில் வெடிகுண்டு நிரப்பப்பட்ட கார் நின்றது கண்டுபிடிக்கப்பட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இது குறித்து மகாராஷ்டிரா தீவிரவாத தடுப்புப் படையினர் நடத்திய விசாரணையில் வெடிகுண்டு நிரப்பப்பட்ட கார், தானே பகுதியைச் சேர்ந்த மன்சுக் கிரண் என்பவருக்குச் சொந்தமானது என்று தெரியவந்தது. அடுத்த ஓரிரு நாள்களில் கிரண் மும்பை அருகே கொலை செய்யப்பட்டு கடலில் வீசப்பட்டார். இந்தச் சம்பவங்களில் குற்றப்பிரிவு அதிகாரியும் என்கவுன்ட்டர் ஸ்பெலிஸ்ட்டுமான சச்சின் வாஸ் என்பவருக்குத் தொடர்பு இருப்பது தெரியவந்தது.

சச்சின் வாஸ்
சச்சின் வாஸ்

இந்தநிலையில், இந்த வழக்கு விசாரணயை மத்திய அரசு தேசிய புலனாய்வு ஏஜென்சியிடம் (என்.ஐ.ஏ) கொடுத்தது. மாநில தீவிரவாத தடுப்புப் படையும் விசாரித்துவந்தது. சச்சின் முன்ஜாமீன் கோரி மனுத்தாக்கல் செய்திருந்தார். ஆனால் அந்த மனு தள்ளுபடி செய்யப்பட்டது. இதற்கிடையே சச்சின் குற்றப்பிரிவிலிருந்து வேறு துறைக்கு இடமாற்றம் செய்யப்பட்டார். கிரணின் காரில் வெடிகுண்டை வைத்ததில் சச்சினுக்கு தொடர்பு இருப்பதாக நம்பப்படுகிறது.

இந்தநிலையில் நேற்று என்.ஐ.ஏ விசாரணைக்கு ஆஜராகும்படி போலீஸ் அதிகாரி சச்சினுக்கு சம்மன் அனுப்பியது. சம்மனை ஏற்று நேற்று சச்சின் விசாரணைக்கு ஆஜரானார். 12 மணி நேரத்துக்கும் மேலாக நடந்த விசாரணைக்குப் பிறகு இரவில் சச்சினைக் கைதுசெய்தனர். விசாரணைக்கு ஆஜராகச் செல்லும் முன்பு, ``என்னுடன் பணிபுரியும் அதிகாரிகள் என்னைச் சிக்கவைத்துவிட்டனர். 2004-ம் ஆண்டும் தவறான குற்றச்சாட்டின் கீழ் என்னைக் கைதுசெய்தனர். அதில் நீதி கிடைக்கும் என்ற நம்பிக்கையில் 17 ஆண்டுகளாகக் காத்துக்கிடக்கிறேன். அது போன்று இப்போதும் நடக்கவிருக்கிறது. இந்த உலகத்தை விட்டுச் செல்வதற்கான நேரம் வந்துவிட்டதாகக் கருதுகிறேன்” என்று சச்சின் தனது வாட்ஸ்அப் ஸ்டேட்டஸில் தெரிவித்தார்.

அம்பானி வீட்டின் நுழைவு வாயில்
அம்பானி வீட்டின் நுழைவு வாயில்

சச்சின் இதற்கு முன்பு சிவசேனாவில் இருந்தார். எனவே, இந்தக் கொலை விவகாரத்தில் மாநில அரசு சரியாக விசாரிக்காது என்று கருதியே விசாரணையை மத்திய அரசு தேசிய புலனாய்வு ஏஜென்சியிடம் ஒபடைத்தது. இதனால் முகேஷ் அம்பானி வீட்டு பாதுகாப்பு குளறுபடி சம்பவத்தில் அரசியல் புகுந்திருக்கிறது என்கிறார்கள் அரசியல் நோக்கர்கள்.

Election bannerElection banner
அடுத்த கட்டுரைக்கு