Published:Updated:

கொரோனா ஆராய்ச்சியாளர் சுட்டுக்கொலை.. ஒருமணி நேரத்தில் நடந்த அடுத்த விபரீதம்!

bing liu
bing liu

ஒரு மணி நேரத்துக்கு பின்பு அவர் இல்லத்திலிருந்து சிறிது தூரத்தில் ஒரு காரில் மற்றொரு நபர் தலையில் சுடப்பட்டு இறந்து கிடந்ததைக் கண்டு போலீஸார் அதிர்ச்சி அடைந்தனர்.

தனது கோரத்தாண்டவத்தை நடத்தி வரும் கொரோனா வைரஸ் பிடியிலிருந்து மீள உலகம் முழுவதும் பல ஆராய்ச்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இந்த நிலையில், அமெரிக்காவில் உள்ள பிட்ஸ்பர்க் பல்கலைக்கழகத்தில் கொரோனா குறித்த ஆராய்ச்சியில் ஈடுபட்டிருந்த ஆராய்ச்சியாளர் சுட்டுக்கொல்லப்பட்டது தற்போது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

டாக்டர் பிங் லியு என்ற ஆராய்ச்சியாளர் கடந்த சனிக்கிழமை அவரது வீட்டில் துப்பாக்கியால் தலை மற்றும் கழுத்துப் பகுதியில் சுட்டுக்கொலை செய்யப்பட்டு இறந்து கிடந்தார்.

Corona
Corona

ஒரு மணி நேரத்துக்கு பின்பு அவர் இல்லத்திலிருந்து சிறிது தூரத்தில் ஒரு காரில் மற்றொரு நபர் தலையில் சுடப்பட்டு இறந்து கிடந்ததைக் கண்டு போலீஸார் அதிர்ச்சி அடைந்தனர்.

முதற்கட்ட விசாரணையில், இரண்டாவதாக கண்டுபிடிக்கப்பட்ட நபர் பிங் லியுவின் நண்பர் ஹாவோக்யு எனவும் அவர்தான் பிங் லியுவை கொலை செய்துவிட்டு பின்பு காரில் வந்து தானும் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்துகொண்டார் என கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

எனினும் கொலைக்கான காரணம் உறுதியாகத் தெரியாத நிலையில், ஆராய்ச்சிக்கும் கொலைக்கும் தொடர்பு இருக்க வாய்ப்பு இல்லை என்றும் கொலைக்கான காரணம் குறித்து மேலும் விசாரித்து வருவதாக போலீஸார் தெரிவித்துள்ளனர்.

பிட்ஸ்பர்க் பல்கலைக்கழகத்தில் ஆராய்ச்சி உதவி பேராசிரியராகப் பணியாற்றி வந்த டாக்டர் பிங் லியு, கணக்கீட்டு அறிவியல் துறையில் முனைவர் பட்டமும், கம்ப்யூட்டேஷன் மாடலிங் மற்றும் அனலைசிஸ் ஆப் பயோலாஜிக்கல் சிஸ்டம்ஸ் டைனமிக்ஸ் துறை ஆகியவற்றில் நிபுணத்துவம் பெற்றவர். தற்போது கொரோனா வைரஸ் செல்களைப் பற்றி ஆராய்ச்சி செய்து வந்த டாக்டர் பிங் லியு, அதன் முடிவின் விளிம்பில் இருந்ததாக அத்துறையின் தலைவர் இவேட் பஹார் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அறிக்கை வெளியிட்ட பிட்ஸ்பர்க் பல்கலைக்கழகம், ``மிகவும் திறமையான, பன்முகத் தன்மைகொண்ட அறிவியல் நிபுணர் டாக்டர் பிங் லியுவின் இழப்பு ஒட்டுமொத்த அறிவியல் சமூகத்துக்கும் ஒரு பேரிழப்பு. மிகப் பொறுமையாகவும் புத்திசாலித்தனமாகவும் இருந்த பிங் லியு பல்வேறு ஆய்வறிக்கைகளை இணை ஆசிரியராக இருந்து வெளியிட்டுள்ளார்.

bing liu
bing liu

தனது நேரத்தையும் அறிவையும் இளைய விஞ்ஞானிகளுடன் பகிர்ந்துகொண்ட பிங் லியு ஒரு சிறந்த வழிகாட்டியாகவும் இருந்தார்.

SARS-CoV-2 நோய்த்தொற்று குறித்த செல்லுலார் வழிமுறைகளைப் புரிந்துகொள்வதில் பிங் மிகவும் குறிப்பிடத்தக்க கண்டுபிடிப்புகளை மேற்கொண்டார். அவரது விஞ்ஞான சிறப்புக்கு மரியாதை செலுத்தும் வகையில் அவர் தொடங்கிய ஆராய்ச்சியை முடிக்க முயல்வோம்” என தெரிவித்துள்ளது.

அடுத்த கட்டுரைக்கு