Published:Updated:

"அவர்தான் கேட்டார்!" ஆம்புலன்ஸில் மருத்துவமனைக்கு செல்லும் வழியில் நோயாளியுடன் மது அருந்திய ஓட்டுநர்

மது

இந்தச் சம்பவம் குறித்து விசாரணை நடத்தி ஆம்புலன்ஸ் டிரைவர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்திருக்கின்றனர்.

"அவர்தான் கேட்டார்!" ஆம்புலன்ஸில் மருத்துவமனைக்கு செல்லும் வழியில் நோயாளியுடன் மது அருந்திய ஓட்டுநர்

இந்தச் சம்பவம் குறித்து விசாரணை நடத்தி ஆம்புலன்ஸ் டிரைவர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்திருக்கின்றனர்.

Published:Updated:
மது

ஒடிசா மாநிலம், ஜகத்சிங்பூரியில் சாலை விபத்தில் சிக்கிய ஒருவரை அங்கிருந்தவர்கள் மருத்துவமனைக்கு ஆம்புலன்ஸில் அனுப்பி வைத்திருக்கிறார்கள். ஆம்புலன்ஸ் ஓட்டுநர் பாதிக்கப்பட்டவரை அழைத்துக் கொண்டு, வேகமாகச் சென்றிருக்கிறார். அப்போது, ஜகத்சிங்பூர் திர்தால் நெடுஞ்சாலையில் உள்ள மதுபானக் கடை அருகே ஆம்புலன்ஸ் நின்றிருக்கிறது. அதிலிருந்து இறங்கிய ஆம்புலன்ஸ் ஓட்டுநர் மதுபானக் கடைக்கு சென்று மதுபாட்டில் ஒன்றை வாங்கி வந்திருக்கிறார்.

ஓட்டுநர் ஆம்புலன்ஸில் ஏறியதும் மது பாட்டிலைத் திறந்து காலில் காயத்துடன் கட்டுப்போடப்பட்டு படுத்திருந்த நோயாளிக்கும் ஒரு கப்பில் உற்றிக் கொடுத்திருக்கிறார். அதன்பிறகு அவரும் அருந்தியிருக்கிறார். இந்தக் காட்சியை அங்கு சுற்றி இருந்த பொதுமக்கள் தங்கள் செல்போனில் வீடியோவாக பதிவுசெய்திருக்கின்றனர். ஆம்புலன்சில், காயமடைந்த நபருடன் ஒரு பெண்ணும் குழந்தையும் இருந்திருக்கிறார்கள்.

ஆம்புலன்ஸ் ஓட்டுநரை பொதுமக்கள் கண்டித்தபோது, "நோயாளிதான் மது வேண்டும் என கேட்டார்" எனத் தெரிவித்திருக்கிறார். இது தொடர்பாக ஜகத்சிங்பூர் மாவட்ட தலைமை மருத்துவ அதிகாரி டாக்டர் க்ஷேத்ரபாசி டாஷ், "இந்தச் சம்பவம் தனியார் ஆம்புலன்ஸில் நடந்தது என்பதால் மண்டல போக்குவரத்து அதிகாரியும், போலீஸாரும்தான் நடவடிக்கை எடுக்க வேண்டும்" எனத் தெரிவித்திருக்கிறார்.

மேலும், இது குறித்து காவல்துறை, "இதுவரை முறையான புகார் எதுவும் பதிவுசெய்யப்படவில்லை. எஃப்.ஐ.ஆர் பதிவு செய்யப்பட்டால் மட்டுமே விசாரணை தொடங்கப்படும்" எனக் கூறியிருக்கிறது. இதனிடையே, இந்தச் சம்பவம் குறித்து விசாரணை நடத்தி, ஆம்புலன்ஸ் டிரைவர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்திருக்கின்றனர்.