Published:Updated:

ஈரோடு: தோட்டத்து வீட்டில் விஷ மாத்திரை உண்டு வயதான தம்பதியர் தற்கொலை - நடந்தது என்ன?!

தற்கொலை

ஈரோடு அருகே தோட்டத்து வீட்டில் விஷ மாத்திரை சாப்பிட்டு தற்கொலை செய்த வயதான தம்பதியர் குறித்து போலீஸார் தீவிர விசாரணை நடத்திவருகின்றனர்.

ஈரோடு: தோட்டத்து வீட்டில் விஷ மாத்திரை உண்டு வயதான தம்பதியர் தற்கொலை - நடந்தது என்ன?!

ஈரோடு அருகே தோட்டத்து வீட்டில் விஷ மாத்திரை சாப்பிட்டு தற்கொலை செய்த வயதான தம்பதியர் குறித்து போலீஸார் தீவிர விசாரணை நடத்திவருகின்றனர்.

Published:Updated:
தற்கொலை

ஈரோடு மாவட்டம், வெள்ளோடு அனுமன்பள்ளி அருகே சின்ன தொட்டிபாளையத்தை அடுத்த கள்ளியங்காடு பகுதியைச் சேர்ந்தவர் கருப்பண்ண கவுண்டர் (85). இவருக்கு பழனியம்மாள் (66) என்ற மனைவியும், ராஜாகந்தசாமி (43) என்ற மகனும் உள்ளனர். கணவன்- மனைவி இருவரும் கள்ளியங்காட்டு தோட்டத்தில் குடியிருந்து, அவர்களின் சொந்தத் தோட்டத்தில் விவசாயம் செய்துவந்தனர். இதற்கிடையே பழனியம்மாளி்ன் சிறுநீரகம் பாதிக்கப்பட்டதால் கடும் அவதியடைந்துவந்திருக்கிறார். அதேபோல கருப்பண்ண கவுண்டருக்கு காது சரியாகக் கேட்காமலும், கண்பார்வைக் குறைபாடும் இருந்துவந்தது. 

இதனால் கணவன், மனைவி இருவரும் கடந்த சில நாள்களாகவே மனவேதனையுடன் காணப்பட்டதாகக் கூறப்படுகிறது. இந்த நிலையில் கடந்த 26 -ம் தேதி இரவு 8 மணி அளவில் கருப்பண்ண கவுண்டரும், பழனியம்மாளும் தற்கொலை செய்ய முடிவு எடுத்து தென்னை மரங்களைத் தாக்கும் வண்டுகளை அழிக்கும் விஷ மாத்திரைகளைச் சாப்பிட்டிருப்பது விசாரணையில் தெரியவந்தது. இதைச் சாப்பிட்ட சிறிது நேரத்திலேயே கணவன், மனைவி இருவரும் பரிதாபமாக உயிரிழந்துவிட்டனர். அப்போது அவர்களின் மகன் ராஜா கந்தசாமி வெளியூர் சென்றிருந்ததாகத் தெரிகிறது.

தற்கொலை
தற்கொலை

இந்த நிலையில் நேற்று காலை வீட்டுக்கு மகன் ராஜா கந்தசாமி வந்தபோது கடும் துர்நாற்றம் வீசியிருக்கிறது. பதற்றத்துடன் உள்ளே சென்று பார்த்தபோது அவரின் தாய், தந்தை உயிரிழந்து சடலமாகக் கிடந்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்து கதறினார்.
இது குறித்து வெள்ளோடு போலீஸாருக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்துக்கு வந்த போலீஸார் சடலத்தைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பிவைத்தனர். வயது முதிர்வு காரணமாக கணவன், மனைவி தற்கொலை செய்துகொண்டார்களா அல்லது வேறு ஏதேனும் காரணம் இருக்கிறதா என்பது குறித்து போலீஸார் வழக்கு பதிவுசெய்து விசாரணை நடத்திவருகின்றனர்.