Published:Updated:

மும்பை: ஐசிஐசிஐ வங்கியின் பணம் சேமிப்புக் கிடங்கின் ஏ.சி ஓட்டை வழியாக ரூ.12 கோடியைத் திருடிய ஊழியர்!

ஐசிஐசிஐ வங்கி

ஐசிஐசிஐ வங்கியின் பணம் சேமிப்பு மையத்திலிருந்து அதன் ஊழியர் 12 கோடியைத் திருடிச் சென்றார். மேலும் 22 கோடி ரூபாயைத் திருடி சாக்குமூட்டையில் கட்டி கட்டடப் படிக்கட்டில் விட்டுச் சென்றிருக்கிறார்.

மும்பை: ஐசிஐசிஐ வங்கியின் பணம் சேமிப்புக் கிடங்கின் ஏ.சி ஓட்டை வழியாக ரூ.12 கோடியைத் திருடிய ஊழியர்!

ஐசிஐசிஐ வங்கியின் பணம் சேமிப்பு மையத்திலிருந்து அதன் ஊழியர் 12 கோடியைத் திருடிச் சென்றார். மேலும் 22 கோடி ரூபாயைத் திருடி சாக்குமூட்டையில் கட்டி கட்டடப் படிக்கட்டில் விட்டுச் சென்றிருக்கிறார்.

Published:Updated:
ஐசிஐசிஐ வங்கி

ஐசிஐசிஐ வங்கிக்கு மும்பை அருகிலுள்ள டோம்பிவலி என்ற இடத்தில் பணத்தை சேமித்து வைப்பதற்காக ஒரு மையம் இருக்கிறது. டோம்பிவலி மற்றும் அதனைச் சுற்றியுள்ள அனைத்து பகுதிகளுக்கும் ஏ.டி.எம் மற்றும் வங்கிக் கிளைகளுக்கு இங்கிருந்துதான் பணம் கொண்டு செல்லப்படுவது வழக்கம். இந்த மையத்தில் பணம் லாக்கரில் வைக்கப்பட்டிருந்தது. இதன் பாதுகாப்புக்கு எப்போதும் இரண்டு பேர் பணியில் இருப்பது வழக்கம்.

இந்நிலையில் கடந்த சில நாள்களுக்கு முன்பு இங்கு பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராவின் செயல்பாட்டில் சிக்கல் இருப்பதை ஊழியர்கள் கண்டுபிடித்தனர். உடனே இது குறித்து வங்கியின் தலைமை மேலாளர் தீபக் பதக் டெக்னிக்கல் அணிக்குத் தகவல் கொடுத்தார். அவர்கள் வந்து சோதித்துப் பார்த்தபோது ஹார்டு டிஸ்க் காணாமல் போயிருந்தது. அதோடு கடந்த சில நாள்களுக்கான வீடியோ அழிக்கப்பட்டிருந்தது. இதனால் சந்தேகமடைந்த அதிகாரிகள் உடனே பணத்தை முழுமையாக எண்ணிப்பார்த்தபோது ரூ.34 கோடி காணாமல் போயிருந்தது. இதையடுத்து பணம் இருந்த அறையை முழுமையாகச் சோதித்துப் பார்த்தபோது ஏ.சி ஓட்டை வழியாக பணம் கொண்டு செல்லப்பட்டிருந்தது தெரியவந்தது.

சித்தரிப்புப் படம்
சித்தரிப்புப் படம்

ஏசியைக் கழற்றிவிட்டு அதன் வழியாக பணத்தை கொண்டு சென்றுள்ளனர். அதோடு வங்கியின் பணப் பாதுகாவலராக பணியில் இருந்த அல்தாப் ஷேக் காணாமல் போயிருந்தார். இருவரில் ஒருவர் விடுமுறையில் இருந்ததால், ஷேக் மட்டும் இரண்டு நாள் தனியாக பணியில் இருந்தபோது இந்தக் காரியத்தில் ஈடுபட்டிருக்கிறார். கட்டடம் முழுக்க சோதித்துப் பார்த்தபோது சாக்குமூட்டையில் கட்டி ரூ.22 கோடியை கட்டடத்தின் படிக்கட்டில் போட்டு அதன்மீது தார்பாயைப் போட்டு வைத்திருந்தனர். இதனால் அந்தப் பணம் மீட்கப்பட்டது. ரூ.12 கோடி திருடப்பட்டிருந்தது. இது குறித்து போலீஸார் வழக்கு பதிவுசெய்து ஷேக்கை தேடிவந்தனர். தீவிர தேடுதலுக்குப் பிறகு ஷேக்கும், இந்தத் திருட்டுக்கு உதவிய மூன்று பேரும் கைதுசெய்யப்பட்டுள்ளனர். அவர்களிடமிருந்து ரூ.5.8 கோடி மட்டும் பறிமுதல் செய்யப்பட்டிருக்கிறாது. எதற்காக 22 கோடியை அப்படியே விட்டுச் சென்றனர் என்ற மர்மம் நீடித்துவருகிறது. அதோடு எஞ்சிய பணத்தை மீட்க நடவடிக்கை எடுக்கப்பட்டுவருகிறது.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!