Published:Updated:

``ஆபத்தான ஆர்.எஸ்.எஸ், பா.ஜ.க... அ.தி.மு.க, தி.மு.க மாஃபியாக்கள்!" - நித்தி கதறல்

நித்தி
நித்தி

நித்தி தரப்பின் முதல் குற்றச்சாட்டே ஆர்.எஸ்.எஸ் அமைப்புக்கு எதிராக உள்ளது. நித்யானந்தா, ஆதிசைவ மதமே தனது மதம் எனக் குறிப்பிடுகிறார். 'அந்த மதத்தை சுமார் மூன்று கோடி பேர் பின்பற்றிவருகிறார்கள்' என்று

'நான் ஒரு புறம்போக்கு. நான் ஒரு பரதேசி. என்னை யாரும் ஒன்றும் செய்ய முடியாது' என்று வீடியோ வழியாகச் சவால்விட்டுள்ளார் நித்யானந்தா. சில தினங்களுக்கு முன்பு அவர் வெளியிட்ட வீடியோ ஒன்றில், 'எனக்கு எதிராக சர்வதேச அளவில் மிகப்பெரிய நெட்வொர்க் வேலை செய்துவருகிறது. பணம் பெருமளவில் செலவழிக்கப்பட்டுள்ளது. அவை அனைத்தையும் நான் ஆவணப்படுத்தியுள்ளேன்' எனக் குறிப்பிட்டார். எதற்காக இவற்றை ஆவணப்படுத்துகிறார் என்கிற கேள்வி அனைவரிடமும் எழுந்தது. ஐ.நா-விடம் தனிநாடு கோரிக்கைக்காகவே அவற்றை நித்தி ஆவணப்படுத்தியதாகத் தெரிகிறது. விரிவாக படிக்க க்ளிக் செய்க... http://bit.ly/38f0gni

தனது தனிநாட்டுக் கனவை நிறைவேற்ற ஐ.நா-வுக்குக் கடிதம் ஒன்றை நித்தி கொடுத்திருந்ததை ஏற்கெனவே நாம் குறிப்பிட்டிருந்தோம். அந்தக் கடிதத்துடன் இதற்கு முன்பு தன்மீதான புகார்களை மீடியாக்கள் எப்படியெல்லாம் வெளிச்சம் போட்டுக் காட்டியுள்ளன என்பதற்கான ஆவணங்களையும் இணைத்துள்ளார். இப்போது அவற்றையெல்லாம் தனக்குச் சாதகமாகத் திருப்பும் வேலையில் ஈடுபட்டிருக்கிறார் நித்தி. இதற்காக ஐ.நா-வுக்கு அவர் அனுப்பியதாகக் கூறப்படும் 46 பக்கக் கடிதத்தில் பல்வேறு பகீர் தகவல்களை கிட்டத்தட்ட கதறலாகவே வெளிப்படுத்தியிருக்கிறது நித்தி தரப்பு.

நித்தி தரப்பின் முதல் குற்றச்சாட்டே ஆர்.எஸ்.எஸ் அமைப்புக்கு எதிராக உள்ளது. நித்யானந்தா, ஆதிசைவ மதமே தனது மதம் எனக் குறிப்பிடுகிறார். 'அந்த மதத்தை சுமார் மூன்று கோடி பேர் பின்பற்றிவருகிறார்கள்' என்றும் அந்தக் கடிதத்தில் குறிப்பிடப்பட்டிருக் கிறது. 'தென்னிந்தியாவில் ஆதிசைவ மதம் சிறுபான்மை மதமாக இருக்கிறது. இந்த மதத்துக்கு ஆர்.எஸ்.எஸ், வி.ஹெச்.பி, பஜ்ரங்தள் மற்றும் பா.ஜ.க ஆகியவை பெரும் அச்சுறுத்தல்களாக இருக்கின்றன.

``ஆபத்தான ஆர்.எஸ்.எஸ், பா.ஜ.க... அ.தி.மு.க, தி.மு.க மாஃபியாக்கள்!" - நித்தி கதறல்

இந்த இந்து பயங்கரவாதிகள் 'இந்து மதம் எங்களுக்கு மட்டும்தான் சொந்தம். எங்களுடைய கலாசாரத்தை மட்டுமே அனைத்து இந்துக்களும் பின்பற்ற வேண்டும்' என்று பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டுவருகிறார்கள். இதற்காக ஆதிசைவ மதத்தின் தலைவராக இருக்கும் என்மீது பல்வேறு தாக்குதல்களை நடத்துகிறார்கள்' என்று பா.ஜ.க மற்றும் இந்து அமைப்புகள்மீது குற்றம்சாட்டியிருக்கிறார் நித்தி.

திராவிடக் கட்சிகளையும் விடவில்லை அவர். 'தென்னிந்தியாவில்... குறிப்பாக தமிழகத்தில் தி.மு.க, அ.தி.மு.க ஆகிய இரு கட்சிகளுமே மாஃபியா போன்று செயல்படும் நாத்திகக் கட்சிகள். திராவிடக் கட்சிகளின் மூத்த தலைவராக இருந்த பெரியார், ராமர் சிலைக்கு செருப்பு மாலை அணிவித்ததே இதற்குச் சாட்சி. இவர்கள் எங்கள் மதத்தைப் பின்பற்றும் மக்களை மனரீதியாகத் துன்புறுத்தினார்கள். அந்தப் பிராந்தியத்தில் பெரும்பாலான மீடியாக்கள் இவர்களின் கட்டுப்பாட்டிலேயே இருக்கின்றன. நீண்டகாலமாகவே தி.மு.க ஆதிசைவ மதத்துக்கு எதிரான கோட்பாட்டைப் பின்பற்றிவருகிறது.

``ஆபத்தான ஆர்.எஸ்.எஸ், பா.ஜ.க... அ.தி.மு.க, தி.மு.க மாஃபியாக்கள்!" - நித்தி கதறல்

அதேபோல், கர்நாடகத்திலும் பா.ஜ.க அரசு ஆதிசைவர்களுக்கு எதிராகச் செயல்பட்டு வருகிறது. அங்கு உள்ள எங்கள் ஆசிரமத்தில் தமிழ் பேசும் சந்நியாசிகள் இருக்கிறார்கள். அவர்கள்மீது மொழி காழ்ப்புணர்வுகொண்டு தாக்குதல்கள் நடத்தினார்கள். கர்நாடக ரக்‌ஷண வேதிகே என்கிற அமைப்பு தமிழ் பேசும் ஆதிசைவர்களை தொடர்ந்து அச்சுறுத்திவருகிறது. கர்நாடக காவல்துறையும் இவர்களுக்கு ஆதரவாகச் செயல்படுகிறது. கம்யூனிஸ்ட் இயக்கங்களும், பெரியார் திராவிட கழகத்தினரும் எங்கள்மீது தொடர் தாக்குதல் நடத்தி வருகிறார்கள்.

இந்து பயங்கரவாதிகளால் ஒருபுறம் நெருக்கடி என்றால், மறுபுறம் இஸ்லாமியர்கள் எங்களை 'காபிர்' எனப் புறக்கணிக்கிறார்கள். இந்து வழிபாட்டுத்தலங்களைத் தகர்க்கின்றனர். கிறிஸ்துவ மிஷனரிகளும் இதே வேலையைத்தான் செய்துவருகின்றன' என்று அந்தக் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

- 'மதுரை குருமகா சந்நிதானமே நான்தான்!', 'தன்பாலின உறவுக்கு ஆதரவு!', 'ப்ளூ ஃபிலிம்... ஆண்மைப் பரிசோதனை!', ஐ.நா-விடம் நித்தி எதிர்பார்ப்பது என்ன? இருள் சூழ்ந்த திருவண்ணாமலை நித்தி ஆசிரமம்! > விரிவான கவர்ஸ்டோரியை ஜூனியர் விகடன் இதழில் வாசிக்க > ப்ளூ ஃபிலிம்... வயாகரா ஊசி... ஆண்மைப் பரிசோதனை... ஐ.நா-விடம் கதறிய நித்தி! https://www.vikatan.com/news/controversy/nithyananda-issue

| அனைத்து விகடன் இதழ்கள் + 2006 முதல் இன்று வரையிலான 325K ப்ளஸ் கட்டுரைகள் > ஆட்டோ-ரினீவல் ஆப்ஷனுடன் கூடிய 'மைக்ரோ - மாஸ்' மாதச் சந்தா பேக் ரூ.99 மட்டுமே > சப்ஸ்க்ரைப் செய்ய > http://bit.ly/2X6Z1Bo |

அடுத்த கட்டுரைக்கு