Published:Updated:

``எல்இடி தொழிற்சாலை; 40% வருவாய்" - பாலிவுட் நடிகையிடம் ரூ.4.4 கோடி மோசடி செய்த `ஜிம்’ நண்பர்

ரிமி சென்

பாலிவுட் நடிகை ரிமி சென் என்பவரிடம் ரூ.4.4 கோடி மோசடி செய்யப்பட்டிருப்பது குறித்து போலீஸார் விசாரித்துவருகிறார்கள்.

``எல்இடி தொழிற்சாலை; 40% வருவாய்" - பாலிவுட் நடிகையிடம் ரூ.4.4 கோடி மோசடி செய்த `ஜிம்’ நண்பர்

பாலிவுட் நடிகை ரிமி சென் என்பவரிடம் ரூ.4.4 கோடி மோசடி செய்யப்பட்டிருப்பது குறித்து போலீஸார் விசாரித்துவருகிறார்கள்.

Published:Updated:
ரிமி சென்

பாலிவுட்டில் சில படங்களில் நடித்திருப்பவர் ரிமி சென். இவர் சொந்தமாகப் படங்கள் தயாரிக்கும் கம்பெனியையும் மும்பையில் நடத்திவருகிறார். கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன்பு ரிமி சென் அந்தேரியிலுள்ள ஜிம் ஒன்றுக்குச் சென்றுகொண்டிருந்தார். அங்கு அவருக்கு ரோனக் ஜெடின் என்பவரின் அறிமுகம் கிடைத்தது. இதையடுத்து இருவரும் அடிக்கடி சந்தித்துப் பேசிக்கொண்டனர். இருவரும் நண்பர்களானதும் ஜெடின் தான் புதிதாக எல்இடி பல்புகள் தயாரிக்கும் தொழிற்சாலையைத் தொடங்கப்போவதாக தெரிவித்தார். அதோடு `நீங்களும் அதில் பங்குதாரராக இருக்கலாம்’ என்று ரிமியிடம் தெரிவித்தார். உடனே அவரின் கம்பெனியில் ரிமி சென் ரூ.4.4 கோடியை முதலீடு செய்தார். இதற்காக இருவரும் ஒப்பந்தமும் செய்துகொண்டனர்.

ரிமி சென்
ரிமி சென்

தொழிலில் 40 சதவிகிதம் அளவுக்கு லாபம் கிடைக்கும் என்று ஜெடின் நடிகையிடம் ஆசைவார்த்தை கூறினார். அதை நடிகை ரிமி நம்பினார். ஜெடின் சொன்ன காலம் முடிந்ததால் கம்பெனியின் லாபத்தைத் தனக்கு கொடுக்கும்படி ரிமி, ஜெடினிடம் கேட்டார். ஆனால் பணத்தைக் கேட்டதும், ஜெடின் நடிகை ரிமியின் போன் கால்களுக்கு பதிலளிக்காமல் புறக்கணித்துவந்திருக்கிறார். அதன் பிறகுதான் ஜெடின் எல்இடி கம்பெனியே ஆரம்பிக்கவில்லை என்றும், பணத்தை ஏமாற்றிவிட்டதாகவும் நடிகைக்குத் தெரியவந்தது. இதையடுத்து போலீஸில் நடிகை ரிமி புகார் செய்தார். அதன் அடிப்படையில், போலீஸார் வழக்கு பதிவுசெய்து விசாரித்துவருகின்றனர். ஜெடின் தற்போது தலைமறைவாகிவிட்டார். அவரை போலீஸார் தேடிவருகின்றனர். ரிமியின் மேனேஜரிடம் இது குறித்துக் கேட்டதற்கு, வழக்கு விசாரணையில் இருப்பதால் இது குறித்து கருத்து சொல்ல முடியாது என்று தெரிவித்தார்

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism