Published:Updated:

நெல்லை: மூதாட்டி மரணத்தில் விலகிய மர்மம் - பெற்ற மகனே கொலைசெய்தது விசாரணையில் அம்பலம்!

கொலைசெய்யப்பட்ட மூதாட்டி அரசம்மாள் ( பழைய படம் )

மூதாட்டியை சொத்துக்காக சொந்த மகனே எரித்துக் கொலைசெய்துவிட்டு அவர் தீக்குளித்து தற்கொலை செய்ததாக நாடகமாடியிருக்கிறார்.

நெல்லை: மூதாட்டி மரணத்தில் விலகிய மர்மம் - பெற்ற மகனே கொலைசெய்தது விசாரணையில் அம்பலம்!

மூதாட்டியை சொத்துக்காக சொந்த மகனே எரித்துக் கொலைசெய்துவிட்டு அவர் தீக்குளித்து தற்கொலை செய்ததாக நாடகமாடியிருக்கிறார்.

Published:Updated:
கொலைசெய்யப்பட்ட மூதாட்டி அரசம்மாள் ( பழைய படம் )

நெல்லை கே.டி.சி. நகர்ப் பகுதியைச் சேர்ந்தவர் அரசம்மாள். 70 வயது மூதாட்டியான இவருக்கு இரு மகன்களும் இரு மகள்களும் உள்ளனர். அனைவரும் திருமணமாகி தனிக்குடித்தனம் நடத்தி வருகிறார்கள். மூத்த மகன் அண்ணாமலை என்பவர் வீட்டில் அரசம்மாள் வசித்து வந்துள்ளார்.

கருகிய நிலையில் கிடந்த உடல்
கருகிய நிலையில் கிடந்த உடல்

டிரைவர் வேலை பார்க்கும் மூத்த மகன் அண்ணாமலையின் மனைவி அனிதா. அவர்களுக்கு ஒரு மகள் உள்ளார். கடந்த 29-ம் தேதி காலையில் வீட்டின் மாடி படிக்கட்டுக்குக் கீழே கிடந்த விறகுக் கட்டைகளுக்குள் அரசம்மாள் உடல் கருகிய நிலையில் கிடந்தார். அதனால் அவர் தற்கொலை செய்துகொண்டதாக அக்கம் பக்கத்தில் வசிப்பவர்களிடம் அண்ணாமலை தெரிவித்தார். இந்த நிலையில், அது கொலை என்ற அதிர்ச்சி தகவல் தற்போது வெளியாகியுள்ளது

அரசம்மாள் உடல் கருகிய நிலையில் கிடந்தது குறித்து அறிந்த நெல்லை தாலுகா காவல்துறையினர், சம்பவ இடத்துக்குச் சென்று விசாரணை நடத்தினார்கள். அரசம்மாள் மரணத்தைச் சந்தேக மரணமாகப் பதிவுசெய்த போலீஸார், உடலை நெல்லை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு உடற்கூறு ஆய்வுக்காக அனுப்பிவைத்தனர்.

சம்பவம் நடந்த வீடு
சம்பவம் நடந்த வீடு

போலீஸ் விசாரணையில் அரசம்மாளுடன் மகனும் மருமகளும் அடிக்கடி தகராறு செய்தது குறித்து அருகில் உள்ள வீடுகளில் வசிப்பவர்கள் தெரிவித்தனர். அதனால் சந்தேகமடைந்த இன்ஸ்பெக்டர் எழிலரசி தலைமையிலான போலீஸார் தீவிர விசாரணை நடத்தினார்கள்.

சொத்துகளை தன் பெயருக்கு எழுதிக் கொடுக்குமாறு மகன் அண்ணாமலையும் மருமகள் அனிதாவும் வற்புறுத்தியுள்ளனர். அதற்கு அரசம்மாள் மறுத்ததால் வாக்குவாதம் ஏற்பட்டதில் அவரை கீழே தள்ளியுள்ளனர். அதில் மயக்கமடைந்தவரை அங்கு கிடந்த கட்டைகளின் மீது படுக்க வைத்து தீயிட்டுக் கொளுத்தி விட்டு தற்கொலை செய்ததாக மற்றவர்களை நம்ப வைத்திருக்கிறார்கள்.

கைதுசெய்யப்பட்ட வினிதா, அண்ணாமலை
கைதுசெய்யப்பட்ட வினிதா, அண்ணாமலை

போலீஸ் விசாரணையில் இந்த விவரங்களை அண்ணாமலை அவர் மனைவி அனிதா ஆகியோர் ஒப்புக்கொண்டதால் இருவரையும் போலீஸார் கைதுசெய்து சிறையில் அடைத்தனர். சொத்துக்காக, பெற்ற தாயை சொந்த மகனே கொலைசெய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.