Published:Updated:

மைசூரு கூட்டுப் பாலியல் வன்கொடுமை: கொடூரச் சம்பவமும் விசாரணை நிலையும் - ஒரு பார்வை

பாலியல் வன்கொடுமை
பாலியல் வன்கொடுமை

மைசூரில் மாணவி ஒருவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் தமிழகத்தைச் சேர்ந்த ஐந்து பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

கர்நாடக மாநிலம், மைசூரிலுள்ள சாமுண்டி மலைப்பகுதியில், கடந்த 24-ம் தேதி கல்லூரி மாணவி ஒருவர் கூட்டுப் பாலியல் வன்கொடுமைக்கு ஆளானார். உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, தீவிர சிகிச்சைக்குப் பிறகு தற்போது அவர் அபாயகட்டத்தைத் தாண்டியதாகக் கூறப்படுகிறது. இந்த வழக்கில் தொடர்புடைய தமிழகத்தைச் சேர்ந்த ஐந்து பேரை, கர்நாடக காவல்துறையினர் கைதுசெய்துள்ளனர்.

பாலியல் வன்கொடுமை
பாலியல் வன்கொடுமை
Representational Image

வெளிமாநிலத்தைச் சேர்ந்த 23 வயதான மாணவி ஒருவர் மைசூரிலுள்ள ஒரு கல்லூரியில் எம்.பி.ஏ படித்துவருகிறார். கடந்த 24-ம் தேதியன்று அந்த மாணவி, தன் நண்பரோடு மைசூரிலுள்ள சாமுண்டி மலைக்கு இருசக்கர வாகனத்தில் சென்றிருக்கிறார். அங்குள்ள லலிதா திரிபுரா என்ற மலைப்பகுதிக்கு அவர்கள் சென்றுள்ளனர். அப்போது அங்கு வந்த அடையாளம் தெரியாத சிலர் அவர்களிடம் பணம் கேட்டு மிரட்டியுள்ளனர்.

அவர்களை மிரட்டியவர்கள் குடிபோதையில் இருந்திருக்கிறார்கள். அவர்கள், அந்தப் பெண்ணின் ஆண் நண்பரை அடித்துப் போட்டுவிட்டு, அந்தப் பெண்ணைக் கூட்டுப்பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர். பாதிக்கப்பட்ட பெண்ணை மீட்ட அந்த ஆண் நண்பர், அந்தப் பெண்ணை அருகிலிருந்த தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதித்திருக்கிறார். மிகவும் ஆபத்தான நிலையிலிருந்த அந்தப் பெண் தற்போது அபாயகட்டத்தைத் தாண்டிவிட்டார் என்று காவல்துறை தரப்பில் கூறப்பட்டுள்ளது.

பாலியல் வன்கொடுமை
பாலியல் வன்கொடுமை

மாணவி ஒருவர் கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட விவகாரம் கர்நாடகாவில் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. மைசூரு காவல்துறையினர் தனிப்படைகளை அமைத்து விசாரணையை மேற்கொண்டனர். சம்பவ இடத்திலிருந்து பேருந்துப் பயணச்சீட்டு, காலி மதுபாட்டில்கள் கைப்பற்றப்பட்டன. குற்றம் நடைபெற்ற இடத்தில் அலைபேசி டவர் மூலம் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் சில விவரங்கள் காவல்துறையினருக்குக் கிடைத்தன. இந்தக் குற்றச் செயலில் ஈடுபட்டவர்கள் தமிழகத்தைச் சேர்ந்தவர்கள் என்பதை காவல்துறையினர் உறுதிசெய்தனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

விசாரணையை விரிவுபடுத்தியதில், ஈரோடு மாவட்டம், தாளவாடி மலைப்பகுதி அருகேயுள்ள சூசைபுரம் கிராமத்தைச் சேர்ந்த பூபதி (28) என்ற நபர் கர்நாடக தனிப்படை காவல்துறையினரால் கைதுசெய்யப்பட்டார். பூபதியிடம் நடத்திய விசாரணையில் மொத்தம் ஏழு பேர் இந்தக் குற்றத்தில் ஈடுபட்டது தெரியவந்துள்ளது. அவர் அளித்த தகவலின் அடிப்படையில் கடந்த 28-ம் தேதி, திருப்பூர் மாவட்டத்தில் தலைமறைவாக இருந்த சூசையபுரத்தைச் சேர்ந்த ஜோசப் (28), லூர்துபுரம் கருவலங்காடு பகுதியைச் சேர்ந்த முருகேசன் (22), தண்ணீர்ப்பந்தல் செல்வபுரத்தைச் சேர்ந்த அரவிந்த் (21), சேவூர் வடுகபாளையம் பகுதியைச் சேர்ந்த 17 வயது சிறுவன் உட்பட நான்கு பேரை காவல்துறையினர் கைதுசெய்து கர்நாடகாவுக்கு அழைத்துச் சென்றனர்.

ஐந்து சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை, வீடியோக்கள்! -குட்கா ரெய்டுக்குச் சென்றபோது சிக்கிய கடைக்காரர்
கைதுசெய்யப்பட்ட நபர்கள்
கைதுசெய்யப்பட்ட நபர்கள்

கைதுசெய்யப்பட்டவர்களிடம் நடத்திய விசாரணையில், ``இவர்கள் அனைவரும் கர்நாடக மாநிலத்தில் வேலை செய்யும் கூலித் தொழிலாளர்கள். வார இறுதி நாள்களில் மட்டும் சொந்த ஊருக்கு வருவார்கள். சம்பவம் நடைபெற்ற தினத்தன்று, இவர்கள் அனைவரும் அந்தப் பகுதியில் மது அருந்தச் சென்றனர். அப்போது அங்கு வந்த அந்த மாணவியையும் அவரின் நண்பரையும் வழிமறித்து, பணம் கேட்டிருக்கிறார்கள். பிறகு அந்த ஆண் நண்பரைத் தாக்கிவிட்டு, அந்தப் பெண்ணைத் தூக்கிச் சென்று பாலியல் பலாத்காரம் செய்திருக்கிறார்கள்" என்று காவல்துறை தரப்பில் கூறப்பட்டுள்ளது.

கைதுசெய்யப்பட்ட ஐந்து பேரும் மைசூரு மூன்றாவது முதன்மை குற்றவியல் நீதிபதியின் முன்பாக ஆஜர்படுத்தப்பட்டனர். காவல்துறை தரப்பில் விசாரணை செய்ய அனுமதி கேட்கப்பட்டதை அடுத்து, நீதிபதி அவர்களை 10 நாள்கள் போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க உத்தரவிட்டுள்ளார். அந்த ஐவரையும் ரகசியமான இடத்தில் வைத்து காவல்துறையினர் விசாரணையை மேற்கொண்டுவருகிறார்கள். கைதுசெய்யப்பட்ட ஐந்து பேரில் ஒருவர் ஏற்கெனவே கொலை வழக்கில் கைதாகி வெளியே வந்திருக்கிறார். மீதமுள்ளவர்களும் சந்தன மரக் கடத்தலில் கைதாகி வெளியே வந்தவர்கள் என்பதும், இவர்கள் அடிக்கடி குற்றச்செயல்களில் ஈடுபடுபவர்கள் என்பதும் தெரியவந்திருக்கிறது.

கைது
கைது

குற்றத்தில் ஈடுபட்ட ஏழு பேரில், ஏற்கெனவே இருவர் கைதுசெய்யப்பட்ட நிலையில், மீதமுள்ள இருவரைக் கைதுசெய்ய காவல்துறை விசாரணையைத் தீவிரப்படுத்தியுள்ளது. சமீபத்தில் அந்த இருவரில் ஒருவர் அந்த மாணவியின் வீட்டுக்கு போன் செய்து 4 லட்சம் ரூபாய் பணம் கேட்டு மிரட்டியிருக்கிறார். விரைவில் அந்த இருவரும் கைதுசெய்யப்படுவார்கள் என்று கர்நாடக டி.ஜி.பி பிரவீன் சூட் நம்பிக்கை தெரிவித்திருக்கிறார்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு