Published:Updated:

`அணலி, கருமூர்க்கன்; நள்ளிரவு 2.30 மணி; பாட்டிலில் கொண்டுவரப்பட்ட பாம்பு’-கேரளாவை உலுக்கிய கொலை

மனைவியைக் கொலை செய்ததாகக் கைது செய்யப்பட்ட சூரஜ்
News
மனைவியைக் கொலை செய்ததாகக் கைது செய்யப்பட்ட சூரஜ்

`உத்ராவிற்கு மனதளவில் சில பிரச்னைகள் இருந்தன. இதனால் அவளைக் கொலை செய்யத் திட்டமிட்டேன். நான் சிக்கிக்கொள்ளாமல் இயற்கையாக மரணம் நடந்ததுபோல் நடக்க வேண்டும் என யூடியூபில் தேடினேன்’.

கேரள மாநிலம் கொல்லம் மாவட்டம் அஞ்சல் பகுதியைச் சேர்ந்த உத்ரா என்ற இளம் பெண் பாம்பு கடித்து இறந்த சம்பவம் திட்டமிட்ட கொலை எனக் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. கொல்லம் அஞ்சலைச் சேர்ந்த உத்ராவுக்கும் பத்தணம்திட்டா மாவட்டம் பறக்கோடு பகுதியைச் சேர்ந்த சூரஜ் என்பவருக்கும் 2018-ம் ஆண்டு திருமணம் நடந்தது. அவர்களுக்கு ஒரு வயதில் குழந்தை உள்ளது. சூரஜ் தனியார் நிறுவனத்தில் கிளர்க்காகப் பணியாற்றி வந்தார். இவர்களின் திருமணத்தின் போது ஐந்து லட்சம் ரூபாய், நூறு பவுன் நகைகள், கார், சொத்து உள்ளிட்டவை வரதட்சணையாக வழங்கப்பட்டன. மேலும் வரதட்சணை கேட்டு உத்ராவை மனதளவில் துன்புறுத்தியதாகக் கூறப்படுகிறது. இதற்கிடையில் கடந்த மார்ச் 2-ம் தேதி கணவன் வீட்டில் வைத்து உத்ராவை பாம்பு கடித்துள்ளது. திருவல்லாவில் உள்ள ஒரு தனியார் மருத்துவக்கல்லூரியில் சுமார் 16 நாள்கள் சிகிச்சைக்குப் பிறகு அஞ்சலில் உள்ள தாய் வீட்டுக்குச் சென்றார் உத்ரா. அங்கும் வீட்டில் வைத்து மருத்துவம் பார்க்கப்பட்டுவந்தது. இந்த நிலையில்தான் கடந்த 6-ம் தேதி உத்ராவைப் பார்க்க அவரது கணவர் சூரஜ் வந்துள்ளார். அன்று இரவு உத்ராவின் அறையில் சூரஜ் தூங்கியுள்ளார். அதிகாலையில் வெளியில் சூரஜ் எழுந்து வெளியே சென்ற நிலையில், உத்ராவை அவரது அம்மா எழுப்பியுள்ளார். அப்போது அசைவில்லாமல் இருந்ததால் மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். உத்ராவைப் பரிசோதித்த மருத்துவர்கள் அவர் இறந்துவிட்டதாகக் கூறினர்.

கைது செய்யப்பட்ட பாம்பாட்டி சுரேஷ்
கைது செய்யப்பட்ட பாம்பாட்டி சுரேஷ்

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

உத்ரா தூங்கிய ஏ.சி அறையின் ஜன்னல்கள் எல்லாம் அடைக்கப்பட்டிருந்தன. அப்படி ஜன்னல் திறந்திருந்தாலும் ஜன்னல் அருகில் தனி கட்டிலில் படுத்திருந்த சூரஜை தாண்டிப்போய் உத்ரா பாம்பு எப்படி கடித்தது என்பது போன்ற சந்தேகங்களை உத்ராவின் பெற்றோர் எழுப்பினர். மேலும் இதுகுறித்து அஞ்சல் போலீஸில் புகார் அளித்தனர். வழக்கை விசாரித்த கிரைம் பிரான்ச் போலீஸார் உத்ராவின் மரணம் கொலை என்றும். கல்லுவாதிக்கல்லைச் சேர்ந்த சுரேஷ் என்ற பாம்பாட்டியிடம் கடந்த ஆறு மாதங்களாக போனில் சூரஜ் பேசியதையும் கண்டுபிடித்தனர். மேலும், சூரஜிடம் விசாரணை நடத்தியதில் பத்தாயிரம் ரூபாய் கொடுத்து கருமூர்கன் பாம்பை விலைக்கு வாங்கியதை ஒப்புக்கொண்டுள்ளார். இதையடுத்து சூரஜ் மற்றும் பாம்பாட்டி சுரேஷ் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர். சூரஜிற்கு உதவியிருக்கலாம் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் 1அவரது உறவினர்கள் 2 பேரைக் காவல்துறையினர் விசாரணை வளையத்துக்குள் கொண்டு வந்துள்ளனர்.

கைது செய்யப்பட்ட சூரஜ், தனது மனைவி உத்ராவைக் கொலை செய்தது குறித்து போலீஸாரிடம் வாக்குமூலம் அளித்துள்ளார். அதில்,``உத்ராவிற்கு மனதளவில் சில பிரச்னைகள் இருந்தன. இதனால் அவளைக் கொலை செய்யத் திட்டமிட்டேன். நான் சிக்கிக்கொள்ளாமல் இயற்கையாக மரணம் நடந்ததுபோல் நடக்க வேண்டும் என யூடியூபில் தேடினேன். அதில் அப்போதுதான் பாம்பு கடிப்பதன் மூலம் மரணம் அடைவது குறித்து அதிகமான வீடியோக்களைப் பார்த்தேன். பாம்பைக் கொண்டு கடிக்க வைத்து உத்ராவைக் கொலை செய்யத் திட்டமிட்டேன். இதற்கான பாம்பாட்டி சுரேஷின் உதவியை நாடினேன்.

பாம்பு கடித்ததால் இறந்த உத்ரா
பாம்பு கடித்ததால் இறந்த உத்ரா

முதலில் சுரேசிடமிருந்து வாங்கிய அணலி பாம்பைவிட்டு மார்ச் 2-ம் தேதி கடிக்கச் செய்தேன். அப்போது உத்ரா சத்தம்போட்டு அலறியதால் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு உயிர் தப்பிவிட்டார். அணலி வகை பாம்பு கடித்தால் வலி அதிகமாக இருக்கும், ஆனாலும் அவர் இறக்கவில்லை என்பதால் அடுத்தமுறை அதிக விஷம் கொண்ட கருமூர்க்கன் வகை பாம்பை வாங்கினேன். அதை பிளாஸ்டிக் பாட்டிலில் அடைத்து, பேக்கில் வைத்து உத்ராவின் வீட்டுக்குக் கடந்த 6-ம் தேதி எடுத்துச் சென்றேன். அன்று இரவு அங்கு தூங்கினேன். அதிகாலை 2.30 மணியளவில் கட்டிலில் தூங்கிக்கொண்டிருந்த உத்ராவின் மீது பாம்பு இருந்த பாட்டிலை வைத்து, அதன் மூடியைத் திறந்தேன். பாம்பு வெளியே வந்து உத்ராவை இரண்டு முறை கொத்தியது. அதை நான் பார்த்துக்கொண்டு நின்றேன்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

பின்னர், பாம்பை மீண்டும் பாட்டிலில் அடைக்க முயன்றேன். ஆனால், பாம்பு பீரோவின் அடியில் சென்றுவிட்டது. உத்ரா இறந்ததை உறுதிசெய்த பின்பு விடியும்வரை கட்டிலில் தூங்காமல் விழித்திருந்தேன். பொழுது புலரும் நேரத்தில் பாத்ரூம் சென்றபோது பாம்பைக் கண்டேன். உடனே, அடித்துக் கொன்றுவிட்டேன். பின்னர் வீட்டின் வெளியே வந்து பாம்பு கொண்டு சென்ற பாட்டிலை அருகில் புதர் மண்டிய பகுதியில் வீசிவிட்டு ஒன்றும் தெரியாததுபோல் வந்துவிட்டேன்" என வாக்குமூலத்தில் கூறியதாக போலீஸார் தெரிவித்தனர். சூரஜை போலீஸார் உத்ராவின் வீட்டுக்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்தினர். மேலும் அவர் பாம்பு கொண்டுசென்ற பாட்டிலைக் கண்டுபிடித்துள்ளனர்.

விசாரணை நடத்திய போலீஸார்
விசாரணை நடத்திய போலீஸார்

இதற்கிடையில், சூரஜின் பெற்றோருக்கும் இந்தக் கொலையில் பங்கிருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்துள்ளது. சூரஜின் வீட்டில் வைத்து பாம்பு இரவு 8.30 மணியளவில் கடித்ததாகவும் ஆனால் அவரை மருத்துவமனைக்கு நள்ளிரவு ஒரு மணிக்குத்தான் அழைத்துச் சென்றதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. மேலும் உத்ராவின் சொத்துகளை அபகரித்துவிட்டு வேறு திருமணம் செய்ய சூரஜ் முடிவு செய்திருந்ததாகவும் கூறப்படுகிறது.