Published:Updated:

7,000 வேலையில்லா இளைஞர்கள்; ரூ.300 கோடி சுருட்டல் - `பலே' மோசடிக் கும்பல் சிக்கியதன் பின்னணி என்ன?

மோசடி ( சித்திரிப்புப் படம் )

7000-க்கும் மேற்பட்டவர்களிடம் 300 கோடி ரூபாய் வரை மோசடி செய்த கும்பலை ஆந்திர காவல்துறையின் குற்றப் புலனாய்வுத்துறை கைதுசெய்திருக்கிறது.

7,000 வேலையில்லா இளைஞர்கள்; ரூ.300 கோடி சுருட்டல் - `பலே' மோசடிக் கும்பல் சிக்கியதன் பின்னணி என்ன?

7000-க்கும் மேற்பட்டவர்களிடம் 300 கோடி ரூபாய் வரை மோசடி செய்த கும்பலை ஆந்திர காவல்துறையின் குற்றப் புலனாய்வுத்துறை கைதுசெய்திருக்கிறது.

Published:Updated:
மோசடி ( சித்திரிப்புப் படம் )

ஆந்திராவில் அரசு வேலை வாங்கித் தருவதாகக் கூறி ஒரு கும்பல் ஏமாற்றிவருவதாக, ஜி.ரவிக்குமார் என்பவர் ஆகஸ்ட் 18-ம் தேதி போலீஸில் புகார் அளித்திருந்தார். அதைத் தொடர்ந்து இந்தப் புகாரின்மீது காவல்துறை விசாரணையைத் தொடங்கியது. அதன் பிறகு, இந்த வழக்கு சி.ஐ.டி-க்கு மாற்றப்பட்டது. தீவிர விசாரணைக்குப் பின்னர், தற்போது 7,000-க்கும் மேற்பட்டவர்களிடம் 300 கோடி ரூபாய் வரை மோசடி செய்த கும்பலை குற்றப் புலனாய்வுத்துறை அதிகாரிகள் கைதுசெய்திருக்கின்றனர்.

மோசடி!
மோசடி!

இது தொடர்பாக ஊடகங்களிடம் பேசிய சி.ஐ.டி அதிகாரி ஒருவர்,   ``ஆந்திர மாநிலம், அனகாபல்லி மாவட்டத்திலுள்ள நரிஸ்பட்டினத்தில் வசிக்கும் சந்தோஷ் என்பவர் `ஸ்மார்ட் யோஜனா வெல்ஃபேர் சொசைட்டி' எனும் பெயரில் ஒரு அமைப்பைத் தொடங்கியிருக்கிறார். இவருடன் ஹரி பாபு, கஞ்சவரபு சிவா மற்றும் பலர் இணைந்திருக்கிறார்கள். இவர்கள் வேலையில்லா இளைஞர்களைக் குறிவைத்து மத்திய, மாநில அரசுகளின் வேலைகளை வாங்கித் தருவதாகக் கூறி ஏமாற்றி பண மோசடியில் ஈடுபட்டிருக்கின்றனர். பணம் பெற்றுக்கொண்டு பலருக்கு போலி பணி நியமன ஆணைகள் மற்றும் அடையாள அட்டைகளை வழங்கி, சில மாதங்கள் சம்பளம்கூட கொடுத்திருக்கிறார்கள்.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer
காவல்துறை
காவல்துறை

இதுபோல ஏறத்தாழ 7,000-க்கும் மேற்பட்ட இளைஞர்களிடம், ரூ, 3 லட்சம் முதல் 5 லட்சம் வரை பணம் பெற்றிருக்கிறார்கள். இந்த வழக்கு தொடர்பாக  இதுவரை 50-க்கும் மேற்பட்ட சாட்சிகள் விசாரிக்கப்பட்டிருக்கின்றன. 32 போலி நியமனக் கடிதங்களைக் கைப்பற்றியிருக்கிறோம். குற்றவாளிகள்மீது IPC 420, 409, 467, 471 r/w 120-B மற்றும் 34 ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவுசெய்து விசாரித்துவருகிறோம்" எனத் தெரிவித்திருக்கிறார்.