Published:Updated:

மன அழுத்தத்துக்காக வந்த ஆந்திர இளைஞர் தற்கொலை - கோவை ஈஷா யோகா மையத்தில் அதிர்ச்சி

தற்கொலை

கோவை ஈஷா யோகா மையத்தில் ஆந்திர இளைஞர் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

மன அழுத்தத்துக்காக வந்த ஆந்திர இளைஞர் தற்கொலை - கோவை ஈஷா யோகா மையத்தில் அதிர்ச்சி

கோவை ஈஷா யோகா மையத்தில் ஆந்திர இளைஞர் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

Published:Updated:
தற்கொலை

கோவை மேற்குத் தொடர்ச்சி மலையாடிவாரத்தில் ஈஷா யோக மையம் இயங்கிவருகிறது. ஆந்திர மாநிலம், விசாகப்பட்டினத்தைச் சேர்ந்தவர் கொள்ளு ரமணா (32).

தற்கொலை செய்துகொண்ட ரமணா
தற்கொலை செய்துகொண்ட ரமணா

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

மன அழுத்தம் காரணமாக, ரமணா கடந்த சில மாதங்களுக்கு முன்பு கோவை ஈஷா யோகா மையத்துக்குச் சென்றதாகக் கூறப்படுகிறது. தொடர்ந்து அங்கு ரமணா யோகா பயிற்சியில் ஈடுபட்டுவந்திருக்கிறார்.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

இந்நிலையில், நேற்று இரவு தான் தங்கியிருந்த அறையில் ரமணா தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டார். தகவல் அறிந்த ஆலாந்துறை போலீஸார் ஈஷா யோகா மையத்துக்கு விரைந்தனர்.

ஈஷா யோகா மையம்
ஈஷா யோகா மையம்

அங்கு அவரின் உடலை மீட்ட போலீஸார், பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்துள்ளனர். இறப்பதற்கு முன்பு ரமணா, ஒரு கடிதம் எழுதிவைத்திருப்பதாகவும் தகவல் வெளியாகியிருக்கிறது.

அதில், மன அழுத்தம் காரணமாகத் தற்கொலை செய்துகொள்வதாக ரமணா குறிப்பிட்டிருப்பதாகச் சொல்லப்படுகிறது. அந்தக் கடிதத்தைக் கைப்பற்றிய போலீஸார், தொடர்ந்து ஈஷா யோகா மையத்திடம் விசாரணை நடத்திவருகின்றனர். ரமணா மன அழுத்தம் காரணமாக தற்கொலை செய்துகொண்டாரா அல்லது அவர் மரணத்துக்கு வேறு ஏதும் காரணம் இருக்கிறதா போன்ற கோணங்களில் விசாரித்துவருகின்றனர்.

ரமணா சடலமாக
ரமணா சடலமாக

இது குறித்து விளக்கம் கேட்க ஈஷா யோகா மையம் தரப்பை தொடர்புகொண்டோம். அப்போது அவர்கள், ``ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த கொள்ளு ரமணா (32) என்பவர் இன்று காலை தற்கொலை செய்துகொண்டார். ஒரு மாதத்துக்கு முன்பு யோகா நிகழ்ச்சிக்காக ஈஷா மையம் வந்தவர், தனிப்பட்ட காரணங்களால் இன்று காலை தற்கொலை செய்து கொண்டார். அவர் எழுதிய கடைசி கடிதத்தில் தனது தனிப்பட்ட காரணங்களால் பாதிக்கப்பட்டிருப்பதாகவும், அதனால் இந்த முடிவை மேற்கொண்டதாகவும் கூறியிருக்கிறார். தன்னுடைய தற்கொலைக்கு வேறு யாரும் காரணம் இல்லை என்றும் குறிப்பிட்டிருக்கிறார்.

இந்தச் செய்தியை ஈஷா மையத்தினர் காவல்துறைக்கு தெரிவித்ததும், போலீஸார் அவர் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்” என்றனர்.