Published:Updated:

`ரேஷன்கடையை மறிச்சு கரும்புக் கடை போடுவியா?' - தட்டிக்கேட்ட மேலாளருக்கு நேர்ந்த சோகம்

நாகராஜ் அரிவாளால் வெட்டும் சிசிடிவி காட்சி
நாகராஜ் அரிவாளால் வெட்டும் சிசிடிவி காட்சி

கூட்டுறவு பண்டகசாலையை மறித்து கரும்புக்கடை போடக் கூடாது என கூறியதற்காக மூவர் அரிவாளால் வெட்டப்பட்டனர்.

ஆண்டிபட்டி கூட்டுறவு பண்டகசாலை முன்பாக கரும்புக்கடை போட்ட இளைஞரைக் கண்டித்த கூட்டுறவு பண்டகசாலை மேலாளர் உட்பட மூவரை, அந்த இளைஞர் அரிவாளால் வெட்டிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நாகராஜ் அரிவாளால் வெட்டும் சிசிடிவி காட்சி
நாகராஜ் அரிவாளால் வெட்டும் சிசிடிவி காட்சி

தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே உள்ள மரவபட்டியைச் சேர்ந்தவர் நாகராஜ். கரும்புக்கடை போடுவதற்காக ஆண்டிபட்டியில் உள்ள கூட்டுறவு பண்டகசாலை அருகே இடத்தைத் தேர்ந்தெடுத்து கரும்புக் கட்டுகளை வைத்துள்ளார். அதைக்கண்ட கூட்டுறவு பண்டகசாலை மேலாளர் கோட்டை சாமி, `‘இப்படி ரேஷன் கடையை மறித்து கரும்புக்கடை போடக் கூடாது. வேறு இடத்தில் கடை போடுங்கள்' எனக் கூறியுள்ளார்.

`சரக்கு விக்கற இடம் தெரியும்..எங்களோடு வாங்க.!' -கேரள இளைஞர்களைப் பதறவைத்த தேனி கும்பல்

இதைக் கேட்டு ஆத்திரமடைந்த நாகராஜ், மேலாளர் கோட்டைசாமியிடம் வாக்குவாதம் செய்துள்ளார். அங்கே இருந்த கூட்டுறவு பண்டகசாலை விற்பனையாளர் முருகன் மற்றும் பெரியசாமி தலையிட்டு, நாகராஜை அங்கிருந்து போகச் சொல்லியுள்ளனர்.

படுகாயமடைந்த மூவர்
படுகாயமடைந்த மூவர்

இதில், மேலும் ஆத்திரமடைந்த நாகராஜ், கையில் வைத்திருந்த அரிவாளால், திடீரென மூவரையும் தாக்க முயன்றுள்ளார். இதில் பயந்து மூவரும் ஓடியுள்ளனர். விடாது துரத்திவந்து மூவரையும் அரிவாளால் வெட்டியுள்ளார் நாகராஜ். இதில், மூவரும் படுகாயமடைந்தனர்.

`என் மனைவியிடம் போனில் தவறாகப் பேசியது யார்?’-நிதி நிறுவன ஊழியர்களை அரிவாளால் மிரட்டிய தேனி தொழிலாளி

தலை, கை, கால் போன்ற இடங்களில் அரிவாள் வெட்டு விழுந்தது. அக்கம் பக்கத்தினர் உடனே வந்து மூவரையும் மீட்டனர். நாகராஜ் அங்கிருந்து தப்ப முயன்றார். ஆனால், பொதுமக்கள் அவரை விரட்டிப் பிடித்தனர். சம்பவம் அறிந்து வந்த ஆண்டிபட்டி போலீஸார் நாகராஜை கைது செய்தனர். படுகாயமடைந்த மூவரும் ஆண்டிபட்டி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். நாகராஜ் மீது ஏற்கெனவே பல்வேறு வழக்குகள் இருப்பதாக போலீஸார் தெரிவித்தனர்.

`பெட்ரோல் குண்டு; அரிவாள் வெட்டு!' தேவகோட்டையில் தி.மு.கவினர் மீது அ.தி.மு.கவினர் தாக்குதல்

கூட்டுறவு பண்டகசாலையை மறித்து கரும்புக்கடை போடக் கூடாது என கூறியதற்காக மூவரை அரிவாளால் சரமாரியாக வெட்டிய சம்பவம் அருகே இருந்த டீக்கடையில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராவில் பதிவானது. அந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வேகமாக பரவிவருகிறது.

பின் செல்ல