Published:Updated:

தேனி: ​வேட்டையாட​ப்பட்ட​ சிறுத்தையின் ​தோல் ​மாடியில் ​காயவைக்கப்பட்டதா? - மீண்டும் சிறுத்தை சர்ச்சை

சிறுத்தை தோல்

வேலியில் சிக்கிய சிறுத்தையைக் காப்பாற்ற முயன்ற வன அதிகாரியை சிறுத்தை தாக்கியது. மறுநாள் வேறொரு சிறுத்தை தேனி எம்.பி தோட்டத்தின் வேலியில் சிக்கி உயிரிழந்தது. இந்நிலையில், மாடியில் சிறுத்தையின் தோல் காயவைக்கப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

தேனி: ​வேட்டையாட​ப்பட்ட​ சிறுத்தையின் ​தோல் ​மாடியில் ​காயவைக்கப்பட்டதா? - மீண்டும் சிறுத்தை சர்ச்சை

வேலியில் சிக்கிய சிறுத்தையைக் காப்பாற்ற முயன்ற வன அதிகாரியை சிறுத்தை தாக்கியது. மறுநாள் வேறொரு சிறுத்தை தேனி எம்.பி தோட்டத்தின் வேலியில் சிக்கி உயிரிழந்தது. இந்நிலையில், மாடியில் சிறுத்தையின் தோல் காயவைக்கப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

Published:Updated:
சிறுத்தை தோல்

மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டியுள்ள ​தேனி மாவட்ட​த்தில், வனப்பகுதிகளின் அருகே இருக்கக்கூடிய விளைநிலங்களுக்கு காட்டுமாடு, சிறுத்தை, புலி, யானைகள் உள்ளிட்ட வனவிலங்குகள் வந்து செல்வது வழக்கம். இந்த நிலையில், பெரியகுளம் அருகேயுள்ள வனப்பகுதிகளில் சிறுத்தைகள் வசித்துவருகின்றன. இவை பெரும்பாலும் விளைநிலங்களில் வளர்க்கப்படும் கால்நடைகளுக்கோ அல்லது மனிதர்களுக்கோ இடையூறாகவும், பாதிப்பை ஏற்படுத்தக்கூடியதாகவும் இருந்தது இல்லை. 

மஞ்சள் தடவிய தோல்
மஞ்சள் தடவிய தோல்

இதனால், பிற பகுதிகளில் அட்டகாசம் செய்யும் புலி, சிறுத்தைகளைக் கூண்டுவைத்து பிடிக்க வேண்டும் என்ற கோரிக்கை இந்தப் பகுதியில் எழவில்லை. வனத்துறையினரும் சிறுத்தைகளை விரட்டவோ, வேறு பகுதிக்கு மாற்றவோ முயற்சி செய்யவில்லை. 

இந்நிலையில் கடந்த மாதம் மட்டும், சிறுத்தை வேலியில் சிக்கியதைக் காப்பாற்ற முயன்ற வன அதிகாரியை, சிறுத்தை தாக்கியதாகத் தகவல் வெளியானது. மறுநாள் வேறொரு சிறுத்தை தேனி எம்.பி தோட்டத்திலுள்ள சோலார் மின்வேலியில் சிக்கி உயிரிழந்ததாகக் கூறப்பட்டது. இதிலுள்ள மர்மம் எப்போது விலகும் என்ற எதிர்பார்ப்பிலுள்ள நிலையில், மீண்டும் மாடியில் சிறுத்தையின் தோல் காயவைக்கப்பட்டிருக்கும் சம்பவம் தேனியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. 

சிறுத்தை தோல்
சிறுத்தை தோல்

​தேனி அருகே, வடவீரநாயக்கன்பட்டி ஊராட்சிக்கு உட்பட்ட அம்மாபட்டியைச் சேர்ந்தவர் துரைப்பாண்டியன்​. ​முன்னாள் ஊராட்சி மன்ற கவுன்சிலரான இவரின் வீட்டில் சிறுத்தையின் தோல் மொட்டைமாடியில் காய​​வைக்கபட்டிருப்பதாக வனத்துறையினருக்கு ரகசியத் தகவல் கிடைத்​துள்ளது. உடனே வனத்துறையினர் துரைப்பாண்டியன் வீட்டுக்குச் சென்று பார்த்தபோது துரைப்பாண்டியன் வீட்டைப் பூட்டிவிட்டு தலைமறைவாகிவிட்டார்.​ அவர் வீட்டின் மாடிக்குச் சென்று பார்த்தபோது அங்கே சிறுத்தையின் தோல் மஞ்சள் பூசி, மொட்டைமாடியில் காயவைக்கப்பட்டிருந்ததாக வனத்துறையினர் தெரிவிக்கின்றனர். 

வனத்துறை அதிகாரிகள் விசாரணை
வனத்துறை அதிகாரிகள் விசாரணை

இது குறித்து வனத்துறையினரிடம் விசாரித்தோம். ``சிறுத்தைத் தோல் சுமார் ஒரு வாரத்துக்கு முன்பிருந்து மொட்டைமாடியில் காயவைக்கப்படிருக்கலாம். இது தொடர்பாக கிராம நிர்வாக அலுவலர் மற்றும் மருத்துவர்களுக்குத் தகவல்​ அளிக்கப்பட்டிருக்கிறது. இந்தச் சிறுத்தை எங்கே, எப்போது, யாரால் வேட்டையாடப்பட்டது... எதற்காகச் சிறுத்தையை வேட்டையாடி தோலை மொட்டைமாடியில் காயவைத்திருக்கிறார்கள்​ ​என்பது துரைப்பாண்டியனைப் பிடித்து விசாரித்தால்தான் தெரியும்” என்றனர்.