Published:Updated:

ராணிப்பேட்டை: `இந்த வாழ்க்கை பிடிக்கவில்லை!’ - திருமணம் முடிவான நிலையில் வங்கி அதிகாரி தற்கொலை

கார்த்தி

திருமணம் முடிவான நிலையில், திடீரெனக் கடிதம் எழுதிவைத்துவிட்டு, இளம் வங்கி அதிகாரி ஒருவர் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்ட சம்பவம், சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

ராணிப்பேட்டை: `இந்த வாழ்க்கை பிடிக்கவில்லை!’ - திருமணம் முடிவான நிலையில் வங்கி அதிகாரி தற்கொலை

திருமணம் முடிவான நிலையில், திடீரெனக் கடிதம் எழுதிவைத்துவிட்டு, இளம் வங்கி அதிகாரி ஒருவர் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்ட சம்பவம், சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Published:Updated:
கார்த்தி

தெலங்கானா மாநிலம், ஹைதராபாத் அம்பர்பேட்டை எம்.சி.ஹெச் காலனியைச் சேர்ந்தவர் லஷ்மநாயக். இவரின் மகன் கார்த்தி. வயது 27. எம்.டெக் படித்திருக்கும் கார்த்தி, ராணிப்பேட்டை மாவட்டம், அரக்கோணம் மின்னல் கிராமத்திலுள்ள ஒரு வங்கிக் கிளையில், கடந்த எட்டு மாதங்களாக புரொஃபஷனல் அதிகாரியாகப் பணிபுரிந்துவந்தார். வேலைக்குச் செல்வதற்கு வசதியாக, அதே பகுதியில் வீடு வாடகைக்கு எடுத்துத் தங்கியிருந்த கார்த்திக்குக்கு பெற்றோர் திருமணம் செய்துவைக்க முடிவுசெய்தனர். இதற்காக, பெண் பார்த்து கடந்த 4-ம் தேதி, ஹைதராபாத்தில் திருமண நிச்சயதார்த்தத்தையும் நடத்தி முடித்துள்ளனர்.

கைப்பற்றப்பட்ட கடிதம்
கைப்பற்றப்பட்ட கடிதம்

திருமண தேதியையும் குறிக்கவிருந்த நிலையில், கடந்த நான்கு நாள்களுக்கு முன் கார்த்திக்குக்கு அவரின் பெற்றோர் போன் செய்துள்ளனர். அவர் போனை எடுக்கவில்லை. மறுநாள் போன் செய்தபோதும், ரிங் அடித்ததே தவிர... போனை அவர் அட்டெண்ட் செய்யவில்லை. இதனால், வங்கி அதிகாரிகளுக்கு போன் செய்துள்ளனர். `கார்த்தி பணிக்கு வரவில்லை. போன் செய்தாலும் எடுக்கவில்லை’ என அதிகாரிகளும் கூறியுள்ளனர். பதறிப்போன பெற்றோர், கார்த்தி தங்கியிருக்கும் வீட்டுக்குச் சென்று தகவல் சொல்லுமாறு கேட்டுக்கொண்டனர். வங்கி அதிகாரிகளும், கார்த்தி தங்கியிருந்த வீட்டுக்கு ஊழியர்களை அனுப்பியுள்ளனர்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

அவர்கள் சென்று பார்த்தபோது, கார்த்தி தங்கியிருந்த வீடு உள்பக்கமாகப் பூட்டப்பட்டிருந்தது. அவரின் காலணிகளும் வெளியில் விடப்பட்டிருந்தன. சந்தேகமடைந்த வங்கி ஊழியர்கள், ஜன்னல் வழியாகப் பார்த்துள்ளனர். அப்போது, மின்விசிறியில் கயிறு ஒன்று அறுந்த நிலையில் தொங்கியது. விபரீதத்தை உணர்ந்த ஊழியர்கள், உடனடியாக அரக்கோணம் தாலுகா போலீஸாருக்குத் தகவல் கொடுத்துள்ளனர். போலீஸார் விரைந்து வந்து கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்ததில், அதிர்ச்சி காத்திருந்தது. பாரம் தாங்காமல் தூக்குக் கயிறு அறுந்து கார்த்திக்கின் உடல் கீழே கிடந்தது. வீடு முழுவதும் சோதனையிட்ட போலீஸாருக்குக் கடைசியாக, கார்த்தி அணிந்திருந்த பேன்ட் பாக்கெட்டிலிருந்தே கடிதம் ஒன்று சிக்கியது.

கார்த்தி
கார்த்தி

அந்தக் கடிதத்தில், `எனக்கு... இந்த வாழ்க்கை பிடிக்கவில்லை. இதற்கு முக்கியக் காரணம் என்னுடைய வேலை. திருமணமும் பிடிக்கவில்லை. இந்தச் சமூகத்தில், எனக்கு மனதளவில் அதிக பாதிப்புகளை ஏற்படுத்திவிட்டனர். என் பெற்றோரிடம் நான் மன்னிப்புக் கேட்டுக்கொள்கிறேன். இந்த உலகத்தில் வாழ... நான் அதிர்ஷ்டம் இல்லாதவன்’’ என ஆங்கிலத்தில் எழுதியிருக்கிறார் கார்த்தி. இந்தக் கடிதத்தைக் கைப்பற்றிய போலீஸார், கார்த்தியின் சடலத்தை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். மேலும், தற்கொலைக்குத் தூண்டும் அளவுக்குக் கார்த்திக்குக்கு அப்படி என்ன நேர்ந்தது என்பது குறித்து அரக்கோணம் தாலுகா போலீஸார் விசாரணை மேற்கொண்டுவருகிறார்கள்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism