Published:Updated:

வீட்டை அபகரிக்க பேய்க் கதை... வாளியில் அமுக்கிக் கொல்லப்பட்ட பச்சிளம் குழந்தை - 3 பெண்கள் கைது

கைதுசெய்யப்பட்ட பெண்கள்

அரக்கோணம் அருகே பச்சிளம் குழந்தையை வாளித் தண்ணீரில் மூழ்கடித்து கொலைசெய்த வழக்கில், தாய், மகள் உட்பட மூன்று பெண்கள் கைதுசெய்யப்பட்டிருக்கிறார்கள்.

வீட்டை அபகரிக்க பேய்க் கதை... வாளியில் அமுக்கிக் கொல்லப்பட்ட பச்சிளம் குழந்தை - 3 பெண்கள் கைது

அரக்கோணம் அருகே பச்சிளம் குழந்தையை வாளித் தண்ணீரில் மூழ்கடித்து கொலைசெய்த வழக்கில், தாய், மகள் உட்பட மூன்று பெண்கள் கைதுசெய்யப்பட்டிருக்கிறார்கள்.

Published:Updated:
கைதுசெய்யப்பட்ட பெண்கள்

ராணிப்பேட்டை மாவட்டம், அரக்கோணம் காவனூர் சாலையிலுள்ள தோல் ஷாப் பகுதியைச் சேர்ந்த மனோ என்ற 22 வயது இளைஞர், சென்னை திருநின்றவூரிலிருக்கும் பூக்கடையில் வேலை செய்துவருகிறார். இவரும் அரக்கோணம் அருகேயுள்ள தேவதானம் பகுதியைச் சேர்ந்த அம்சா நந்தினி என்ற 18 வயது இளம்பெண்ணும் காதலித்து பெற்றோர் எதிர்ப்பை மீறி திருமணம் செய்துகொண்டனர். இருவரும் வெவ்வேறு சமூகத்தினர் என்பதுதான் காதலைப் பெற்றோர் எதிர்க்கக் காரணம் என்கிரார்கள். எனினும், திருமணம் செய்துகொண்டதால், வேறு வழியின்றி அவர்களை ஏற்றுக்கொண்டனர். இருவரும் இல்லற வாழ்க்கையைத் தொடங்கிய நிலையில், அம்சா நந்தினி கர்ப்பமடைந்து, கடந்த 40 நாள்களுக்கு முன்பு குழந்தையைப் பிரசவித்தார். ஆண் குழந்தை பிறந்ததால், யுவன் என்று பெயர் வைத்தனர். குழந்தையுடன் தன் தாய் வீட்டிலிருந்தார் அம்சா நந்தினி.

குழந்தை உடல்
குழந்தை உடல்

இந்த நிலையில், கடந்த சனிக்கிழமை சென்னையிலிருந்து தனது வீட்டுக்கு வந்த மனோ, மாமியார் வீட்டுக்குச் சென்று மனைவி மற்றும் குழந்தையை தன்னுடன் அழைத்துவந்தார். இரவு குழந்தைக்குப் பால் கொடுத்து அம்சா நந்தினி தூங்கவைத்தார். நள்ளிரவு 1 மணி ஆனபோது, குழந்தை மீண்டும் பசிக்கு அழுதது. அம்சா நந்தினி மறுபடியும் பால் புகட்டி தூங்கவைத்துவிட்டு தானும் தூங்கினார். 2 மணியளவில் எழுந்து பார்த்தபோது, தொட்டிலில் தூங்கிகொண்டிருந்த குழந்தையைக் காணவில்லை. அதிர்ச்சியடைந்த அம்சா நந்தினி அருகில் தூங்கிக்கொண்டிருந்த கணவனையும் மாமியாரையும் எழுப்பி கதறி அழுதுள்ளார்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

தேடிப் பார்த்தபோது, வீட்டின் வெளியே உள்ள கழிவறையில் வைக்கப்பட்டிருந்த பிளாஸ்டிக் வாளியில் தலைகீழாகத் தண்ணீரில் மூழ்கடித்தபடி குழந்தை இறந்துகிடந்தது. குழந்தையை யாரோ கொலை செய்திருப்பது தெரியவந்தது. குழந்தையின் உடலைத் தூக்கி மடியில் வைத்துக்கொண்டு தாய் அம்சா நந்தினி கதறி அழுதார். நெஞ்சை உலுக்கிய இந்தச் சம்பவம் குறித்து அரக்கோணம் டவுன் போலீஸார் வழக்கு பதிவுசெய்து கொலையாளி யார் என்பது குறித்து தீவிரமாக விசாரணை நடத்திவந்தனர். குழந்தையின் தந்தை மற்றும் உறவினர்கள் உட்பட சந்கேதப்படும்படியான அனைவரையும் விசாரணை வளையத்துக்குள் கொண்டுவந்தனர்.

அத்தை தேன்மொழி
அத்தை தேன்மொழி

விசாரணையில், பக்கத்து வீட்டில் வசிக்கும் மனோவின் தந்தை வழி அத்தையான தேன்மொழிதான் குழந்தையைக் கொன்றார் எனக் கண்டுபிடிக்கப்பட்டது. மனோவின் தந்தை ராமு இறந்துவிட்டார். மனோவும் திருநின்றவூரில் வேலை செய்கிறார். இதனால், உள்ளூரில் அவர்கள் வசித்த வீட்டை அபகரிக்க அத்தை தேன்மொழி திட்டமிட்டிருந்தாராம். தேன்மொழி கழிவறையில்லாத குடிசை வீட்டில், பாரதி என்ற 28 வயதாகும் மகளுடன் வசித்துவருகிறார். அண்ணன் வீட்டை எப்படியாவது அபகரித்துவிட வேண்டும் என்ற நோக்கத்துடன் அந்த வீட்டில் பேய் இருப்பதாகவும் புரளியைக் கிளப்பிவிட்டிருக்கிறார். அவ்வப்போது, சாமியாடியும் மனோவின் தாயை பயமுறுத்தி வந்திருக்கிறார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

இந்த நிலையில், மனோ காதல் திருமணம் செய்துகொண்டு, ஆண் குழந்தையை வாரிசாகப் பெற்றுவிட்டதைப் பார்த்து எரிச்சலடைந்திருக்கிறார் அத்தை தேன்மொழி. இத்தனை நாளாகப் போட்டுவைத்திருந்த திட்டம் குழந்தையால் நிறைவேறாமலேயே போய்விடுமோ என்று ஆத்திரமடைந்து, பச்சிளம் குழந்தையைக் கொலை செய்யவும் திட்டம் வகுத்திருக்கிறார். சம்பவத்தன்று மனோ, அவரின் மனைவி, மனோவின் தாய் மூவரும் நல்ல உறக்கத்திலிருப்பதைக் கவனித்த தேன்மொழி, குழந்தையை யாருக்கும் தெரியாமல் தூக்கிச் சென்று வாளியில் நிரப்பியிருந்த தண்ணீரில், துளியும் இரக்கமின்றி தலைகீழாக மூழ்கடித்துக் கொன்றதாக போலீஸ் விசாரணையில் அவரே வாக்குமூலம் கொடுத்துள்ளார்.

கைதுசெய்யப்பட்ட பெண்கள்
கைதுசெய்யப்பட்ட பெண்கள்

இந்தக் கொலைக்கு தேன்மொழியின் 28 வயது மகள் பாரதியும் உடந்தையாக இருந்திருக்கிறார். இதையடுத்து, தாய், மகளைக் கைதுசெய்த போலீஸார் இருவரையும் வேலூர் பெண்கள் தனிச்சிறையில் அடைத்திருக்கிறார்கள். இதற்கிடையே, குழந்தைக் கொலை வழக்கில் மூன்றாவதாக மேலும் ஒரு பெண் கைதுசெய்யப்பட்டிருக்கிறார். தேன்மொழியை சம்பவ இடத்துக்கு அழைத்து வந்து குழந்தையைக் கொலை செய்தது எப்படி என போலீஸார் நடித்து காண்பிக்கச் சொன்னபோது, அதே பகுதியில் வசிக்கும் அவரின் உறவினரான அனு என்ற பெண், கொலையுண்ட குழந்தையின் குடும்பத்துக்குச் சாபம்விட்டு மண்ணை வாரித் தூற்றினார். இதை கவனித்த போலீஸார் அந்தப் பெண்ணையும் விசாரணைக்கு உட்படுத்தியபோது, கொலைக்கும் அவரும் உடந்தையாக இருந்தது தெரியவந்தது. இதையடுத்து, அவரையும் கைதுசெய்து வேலூர் சிறையிலடைத்திருக்கிறார்கள். சொத்துக்காகப் பச்சிளம் குழந்தை கொல்லப்பட்ட சம்பவம், அரக்கோணம் பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism