Published:Updated:

புதுக்கோட்டை: `இரவு முழுவதும் எங்களுடனே தேடினான்!’ - கதறிய சிறுமியின் தந்தை

அறந்தாங்கி
அறந்தாங்கி

கம்யூனிஸ்ட்கட்சிகள், விடுதலைச் சிறுத்தைகள் உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சியினரும் சிறுமிக்கு இரங்கல் கூட்டம் நடத்தி வீரவணக்கம் செலுத்தினர்.

புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே உள்ள ஏம்பல் கிராமத்தைச் சேர்ந்த 7 வயதுச் சிறுமி வீட்டு அருகே உள்ள அடர்ந்த முள் காட்டுப் பகுதியில் சிறுமி பாலியல் வன்கொடுமை செய்து, கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த வழக்கில் அதே கிராமத்தைச் சேர்ந்த ராஜா என்பவர் இந்தக் குற்றத்தைச் செய்தது என உறுதியானதும் கைது செய்யப்பட்டார்.

சிறார் வதை
சிறார் வதை

இந்நிலையில் மருத்துவமனையில் சிறுமியின் உடல் உடற்கூறு ஆய்வு செய்யப்பட்டு சொந்த ஊரான ஏம்பல் கிராமத்திற்குக் கொண்டுவரப்பட்டு உடல் அடக்கம் செய்யப்பட்டது. அப்போது கம்யூனிஸ்ட்கட்சிகள், விடுதலைச் சிறுத்தைகள் உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சியினரும் இரங்கல் கூட்டம் நடத்தி வீரவணக்கம் செலுத்தினர்.

புதுக்கோட்டை: 7 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை, கொலை... மக்கள் கருத்து என்ன? #VikatanPollResults

இறந்த சிறுமியின் குடும்பத்திற்கு தமிழக அரசு 5 லட்ச ரூபாய் நிதி உதவி வழங்கியுள்ளது. தொடர்ந்து பல்வேறு இடங்களில் இருந்து சிறுமியின் குடும்பத்திற்கு நிதியுதவியும் ஆறுதல்களும் அளித்து வருகின்றனர்.

சிறுமியின் தந்தை பேசுகையில், ``கடந்த செவ்வாய்க்கிழமை என் மூத்த மகளை, எங்க வீட்டு பக்கத்தில் உள்ள ராஜா என்பவன் ஊருக்கு பின்புறம் உள்ள காளிகோயிலுக்கு அழைத்துச் சென்றுள்ளான். கோயிலில் தனது பூ போடும் வேலையை முடித்து விட்டு வரும் வழியில் உள்ள கருவேல் மரங்கள் நிறைந்து கிடக்கும் இடத்தில் வைத்து என் மகளை பாலியல் ரீதியா சித்தரவதை செய்துள்ளான்.

புதுக்கோட்டை: பாலியல் வன்கொடுமை, கொலை! -7 வயதுச் சிறுமிக்கு நேர்ந்த கொடூரம்
இறுதி சடங்கில் மக்கள்
இறுதி சடங்கில் மக்கள்

பின்னர் கருவேல் மர கம்பை வைத்து அடித்து கொலை செய்து கண்மாயில் போட்டுவிட்டான். என் மகளைக் காணோம் எனத் தேடிய அன்று இரவு முழுதும் எங்களுடன் தேடுவதுபோல நடித்தான். ஆனால், மறுநாள் அவன்தான் கொலை செய்தான் என்பது தெரிய வர குற்றத்தை ஒப்புக்கொண்டான். என் மகள் கண்மாயில் குப்பறக் கவிழ்த்தபடி எறும்புகளுக்கு நடுவே கிடந்தது விவரிக்க முடியாத கொடூரம். என் மகளுக்கு நடந்தது இனி யாருக்கும் நடக்கக் கூடாது. என் மகளைக் கொடுரமா கொலை செய்த ராஜா என்ற நாயைத் தூக்கில் தொங்கவிடணும் அப்போதுதான் இப்படி ஒரு சம்பம் நடைபெறாது" என்றார்.

அடுத்த கட்டுரைக்கு