Published:Updated:

அரியலூர்: சிறுமிக்கு பரோட்டா வாங்கிக்கொடுத்து பாலியல் வன்கொடுமை - போக்சோ வழக்கில் முதியவர் கைது

பாலியல் வன்கொடுமை

12 வயது சிறுமிக்குப் பரோட்டா வாங்கி கொடுத்து பாலியல் வன்கொடுமை செய்த முதியவர் ஒருவர், `இதை வெளியே சொன்னால் உன்னையும், உன் தந்தையையும் கொன்றுவிடுவேன்’ என மிரட்டியிருக்கிறார். அவரை போலீஸார் போக்சோ சட்டத்தின்கீழ் கைதுசெய்துள்ளனர்.

அரியலூர்: சிறுமிக்கு பரோட்டா வாங்கிக்கொடுத்து பாலியல் வன்கொடுமை - போக்சோ வழக்கில் முதியவர் கைது

12 வயது சிறுமிக்குப் பரோட்டா வாங்கி கொடுத்து பாலியல் வன்கொடுமை செய்த முதியவர் ஒருவர், `இதை வெளியே சொன்னால் உன்னையும், உன் தந்தையையும் கொன்றுவிடுவேன்’ என மிரட்டியிருக்கிறார். அவரை போலீஸார் போக்சோ சட்டத்தின்கீழ் கைதுசெய்துள்ளனர்.

Published:Updated:
பாலியல் வன்கொடுமை

அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் அருகே உள்ள காரைக்குறிச்சி காலனி தெருவைச் சேர்ந்தவர் வைத்தியலிங்கம். இவர் கூலி வேலை செய்துவருகிறார். அதே பகுதியைச் சேர்ந்த 12 வயது சிறுமி கார்த்திகாவை (பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது) அடிக்கடி அழைத்துத் தொட்டுப் பேசுவது, யூடியூபில் வீடியோ காட்டுவது போன்ற சில்மிஷ வேலைகளைச் செய்திருக்கிறார்.

அரியலூர்
அரியலூர்

மேலும் அவர் கடந்த வாரம் சிறுமியை வீட்டுக்கு அழைத்து பரோட்டா வாங்கிக்கொடுத்து பாலியல் வன்கொடுமை செய்திருக்கிறார்.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

மேலும் இதை வெளியே சொன்னால், அந்தச் சிறுமியையும், அவர் தந்தையையும் கொலை செய்துவிடுவதாக மிரட்டியிருக்கிறார். இதனால் பயந்த நிலையிலிருந்திருக்கிறார் அந்தச் சிறுமி. இந்த நிலையில் அவர் இயற்கை உபாதை கழிக்கச் சென்றபோது வலி தாங்க முடியாமல் கத்தியிருக்கிறார். என்ன நடந்தது என்று அவரின் பெற்றோர்கள் விசாரித்தபோது நடந்ததைக் கூறியிருக்கிறார்.

அரியலூர் எஸ்.பி ஆபீஸ்
அரியலூர் எஸ்.பி ஆபீஸ்

இது குறித்து சிறுமியின் பெற்றோர் ஜெயங்கொண்டம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். புகாரின் பேரில் போலீஸார் வழக்கு பதிவுசெய்து முதியவர் வைத்தியலிங்கத்தை போக்சோ சட்டத்தின் கீழ் கைதுசெய்து சிறையில் அடைத்தனர். மேலும், சிறுமியை மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர்.

வழக்கு தொடர்பாக போலீஸ் வட்டாரத்தில் விசாரித்தோம். ”பெண் குழந்தைகள் மற்றும் இளம்பெண்களுக்கு எதிரான பாலியல் அச்சுறுத்தல் அதிகரித்துக்கொண்டிருக்கிறது.

குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றம்
குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றம்

தன் குழந்தைக்கு அம்மா, அப்பா இருவரும் 'குட் டச்' எது `பேட் டச்’ எது என்பதைச் சொல்லிக் கொடுக்க வேண்டும். அப்படிச் சொல்லிக் கொடுக்காமல் விட்டதால்தான் சிறுமியை முதியவர் செல்போனில் வீடியோ காட்டுவது, இரட்டை அர்த்தத்தில் பேசுவது எனத் தவறாகக் கையாண்டு பாலியல் வன்கொடுமை செய்திருக்கிறார். குட் டச், பேட் டச் எது என்பதை குடும்பத்தினர் தம் பிள்ளைகளுக்கு முதலில் சொல்லிக்கொடுங்கள். நம்முடைய பிள்ளைகளை நாம்தான் பாதுகாக்க வேண்டும்” என்றார்கள்.